Tuesday, April 27, 2010

திரும்பி பார்க்கிறேன்

1. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
எதைப் பற்றியும்
கவலை இல்லா
என்னுள் தொலைத்த
கடந்த காலத்தை
திரும்பி பார்க்கிறேன் …
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
அம்மாவின் கைவிடுத்து
அழுதழுது கண்சிவந்து
அப்பாவின் சைக்கிளிலே
பள்ளிக்கு போன அந்த
பழைய நாட்களை
திரும்பி பார்க்கிறேன்…
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
சளி ஒழுகும் மூக்கோடும்
புண் நிறைந்த கையோடும்
பொத்தல் விழுந்த நிக்கரோடும்
பள்ளிக்கு சென்ற அந்த
பழைய நாட்களை
திரும்பி பார்க்கிறேன்…
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பறையின் வாசலிலே
தொங்குகின்ற நெல்லிக்காயை
தொட்டாலே அபராதம்,
அறிவிப்பைக் கேட்டுவிட்டு
தொட்டால் ; தானேயென்று
நண்பர்களுடன் ஓடிவந்து
எக்கி்எக்கி தலையில் முட்டி
நெல்லியை சுவைத்த அந்த
சொர்க்கத்தை திரும்பி பார்க்கிறேன்…

2. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஆரம்ப பள்ளியிலே
அடிவைத்த நாட்களை நான்
அசை போட்டு மெதுவாக
திரும்பி பார்க்கிறேன்

புத்தகத்தை மறந்த நாளில்
அப்பாட ஆசிரியர்
விடுப்பிலே இருக்க வேண்டும்
இறைவனே என்று வேண்டி
பயந்து பயந்து காத்திருந்து
ஆசிரியர் வராவிட்டால்
ஆண்டவனுக்கு நன்றி சொல்லி
ஆசிரியர் வந்திருந்தால்
ஆண்டவனை திட்டி தீர்த்த
பழைய நாளை
திரும்பி பார்க்கிறேன்…


வெள்ளிக்கிழமை மாலைவேளை
உடற்பயிற்சி வகுப்பதனில்
வில்லாக உடலை வளைத்து
வியர்வை வர பயிற்சியதை
செய்திடவே வேண்டுமென்று
பிரம்போடு சுற்றி வரும்
ஆசானை திட்டி தீர்த்த
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்…


வெள்ளிக்கிழமை வகுப்பு முடித்து
வீட்டிற்கு திரும்பும் நேரம்
ஊரிலுள்ள பாட்டி அவள்
வீட்டிற்கு வர வேண்டி
வருகின்ற பாதை முழுதும்
அடி மீது அடி வைத்து
நடந்து வந்த அந்நாளை
திரும்பி பார்க்கிறேன்...


திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்

3. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
எனது இவ்வாழ்க்கையில்
நண்பனுக்கு நான் இழைத்த
முதல் துரோக செயலதனை
திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்


மூன்றாவது வகுப்பு முடிய
மூன்று வாரம் இருக்கும்போது
ஆண்டு விழா பற்றியொரு
அறிவிப்பு பள்ளியிலே
இயல்தமிழுக்காய் கட்டுரைப் போட்டி
இசைத்தமிழுக்காய் கவிப்போட்டி
நாடகத்தமிழுக்காய் நாடக போட்டி
விருப்பமுள்ள மாணவர்கள்
விளையாட்டுத் திடலிலே
விரைந்து வந்து பெயர் தருக…


எனதருமை நண்பனவன்
நாடகத்தில் நடிக்க எண்ணி
பெயர் கொடுத்தான் போட்டிக்கு
நாடகத்தின் பெயரதுவோ
பாஞ்சாலி சூளுரைப்பு
என் நண்பன் ஏற்றதுவோ
துரியனின் தம்பி வேடம்
அவன் நடிக்க வேண்டியதோ
இரண்டு பத்தி வசனமும்
துகிலுரியும் படலமும்


ஆரம்பமானதுவே
போட்டிகளின் ஒத்திகைகள்
எனக்கதுவோ வகுப்புகளை
தட்டிக் கழிக்கும் புதுஉத்திகள்
ஆன்டு விழா நாளிற்கு
தூரமோ அதிகம் இல்லை
நண்பனவன் மன்டைக்கு
வசனங்களோ தங்கவில்லை
நாடகத்தின் பொறுப்பாசிரியர்
நண்பனை அருகில அழைத்து
வசனத்தை உன் நண்பனிடம்
மனனம் செய்து ஒப்புவியென்றார்…


நாளெல்லாம் என்னை அமர்த்தி
வசனத்தை ஒப்ப கேட்டு
விளையாட்டாய் ஒருநாள் மாலை
வசனத்தை பேசிக் காட்டி
இதற்கு ஏன் இப்படி திக்குற
என்று நான் கேலிபேச
பின்னால் இருந்த பொறுப்பாசிரியர்
நாளை முதல் நடிக்கநீயே
ஒத்திகைக்கு வந்திடு என்ற
கட்டளையை இட்டு சென்றார்….


திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்…

4. திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
பிறந்த தேதி
மாறிப்போக
காரணமான
இரண்டாம் பள்ளியின்
இனிய பொழுதை
திரும்பி பார்க்கிறேன்

நான்கு வருடம் ஓடிஆடிய
பள்ளியை விடுத்து
வேறோர் பள்ளி
புதிய ஆசிரியர்கள்
புதிய நண்பர்கள்
எல்லாம் புதிதாய்
இருந்தும் துனிவாய்
வகுப்பில் நுழைந்த
முதல் முதல் நாளை
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பு முழுவதும்
பேச்சின் சத்தம்
பெசுவோர் பெயரை
எழுதும் ஒருவன்
நுழைந்ததும் கேட்டான்
யார் நீ என்று
நானும் கேட்டேன்
நீ யாரென்று

அவனோ சொன்னான்
வகுப்பின் தலைவன்
நானோ சொன்னேன்
புதிதாய்ச் சேர்ந்தவன்
வகுப்பில் நிற்க
அனுமதி இல்லை
இடத்தைப் பார்த்து
அமரு என்றான்

நிற்க அனுமதி
இல்லை என்றால்
நீயேன் நிற்கிறாய்
என்றேன் நானும்
பேசுவோர் பெயரை
எழுதும் பணியை
ஆசிரியர் தந்தார்
அதையே செய்கிறேன்
பேசாமல் அமர்ந்து
மனனச் செய்யுளை
மனனம் செய்வாய்
என்றான் அவனும்

நான்காம் வகுப்பின்
விடுமுறை நாளில்
மனனம் செய்த
செய்யுளை ஒபபி
என்ன செய்ய
என்றேன் நானும்
ஏதாவது செய் ஆனால்
அமைதியாய் செய்
என்றே சொல்லி
அவனும் அமர்ந்தான்

4 (2) திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஐந்தாம் வகுப்பில்
ஓடி ஆடிய
என்னைப் பிரியா
பழைய நாட்களைத்
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
வகுப்பறைக்கு
செல்லும் முன்னே
பள்ளியின் வெளியே
இருக்கும் கடையிலே
வட்ட வட்ட
பிஸ்கேட் உடனே
சிறுசிறு அல்வா
துண்டுகள் வாங்கி
வகுப்பு இல்லா
நேரந்தனிலே
இரண்டு பிஸ்கேட்
நடுவில் கொஞ்சம்
அளவாய் அல்வா
தட்டி வைத்து
இனிப்பு பிஸ்கேட்
என்றே சொல்லி
அழகு காட்டி
உண்ட நாளைத்
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
மதிய நேர
இடைவெளி போது
உணவு உண்ட
கின்னம் கழுவ
அருகே உள்ள
ஆற்று நீரில்
முட்டிக் கால்
முழுகி நின்று
கின்னம் கழுவி
முடித்த பின்னர்
கின்னம் மூடி
இரண்டையும் தனியே
ஆற்று நீரின்
எதிர்திசை எறிந்து
படகு வருது
என்றே சொல்லி
நீரில் ஆடிய
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்

திரும்பி பார்க்கிறேன் நான்
திரும்பி பார்க்கிறேன்
ஐந்தாம் வகுப்பின்
ஆண்டுத் தேர்வில்
நண்பனுக்காக
தேர்வுத் தாளை
முன்னுக்கு தந்து
எழுதச் சொல்லி
என்னிடம் அத்தாள்
சேரும் வரையில்
வியர்த்து வழிந்த
பள்ளி நாளை
திரும்பி பார்க்கிறேன்

மணமகளாகும் மகளுக்கு

மணமாகப் போகும் பெண்ணே
மனதிலே கலக்கம் ஏனோ
மங்கையாகப் பிறந்து விட்டால்
மறுவீடும் இயல்பு தானே
மகளாய் உனக்கு நான்
மறுப்பு எதுவும் கூறவில்லை
மரியாதை மானம் இரண்டும்
மறுவீட்டில் காப்பாய் பிள்ளை
மகவொன்றை ஈந்தெ னக்கு
மகிழ்ச்சியையும் தருவாய் கண்ணே
மழலையின் முகம் பார்த்து
மறந்திடுவேன் கவலை நானே…

அன்பின் அரவணைப்பில் .....

அன்பின் அரவணைப்பில்

ஆண்டவனின் பரிசளிப்பாய்

இதமாய்க் கருவறையில்

ஈரைந்து மாதங்கள்

உறக்கத்தில் கழித்துவிட்டு

ஊழ்வினை அறுத்தெறிய

எடுத்த பிறவியென்றே

ஏகமாய் உணர்ந்துவிட்டு

ஐயமின்றி இறையுணர்ந்து

ஒறுத்தலுண்டு பாவிக்கென

ஓடையைப்போல் வாழ்ந்தேயுந்தன்

ஔசித்தியம் உயர்த்திடுவாய்…

மீண்டு வருவேன்

என்னை அறிய
எனக்குள் என்னை
அனுதினம் தேடி
அறிய முடியாமல்
அலைந்த களைப்பால்
அயர்ந்து உறங்கி
அறிந்ததாய் எண்ணி
அமரும் சமயம்
ஆழ்ந்த உறக்கம்
அழைப்பினை விடுக்க
மீண்டு வருவேன்
மீன்டும் என்னை
நான் யாரென்று
நானே அறிய…

கிறுக்கல்கள்........

பகலவனாய் நீயும்வர

பனித்துளியாய் நானுருக

பதறாமல் காதலதை

பகன்றிடவே தினம்துடித்தேன்

தருவாயோ மறுப்பாயோ

தவிப்புடனே அருகில்வர

தயக்கமோடு நாணமதும்

தடுத்திடவே சொல்லிழந்தேன்

கல்லறைக்குப் போகுமுன்னே

கருனைகொண்டு வார்த்தையாலே

காதலனே உரைத்திடுவாய்

காதலுக்கு உயிர்தருவாய்

பள்ளிமுதல் இன்றுவரை

பழகிவரும் நம்உறவை

மரணம்வரை நிலைத்திடவே

மணக்கோலம் எனக்கருள்வாய்…

சச்சினு

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு
நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு

நான் புடிச்ச மட்டை பாரு

நான் அடிச்ச பந்தை பாரு

நான் ஆடும் ஆட்டத்தை பார்த்திடு நீ அட

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு
ஏய் ஆடு ஆடு ஆட விடு

ஆடும் போது ரன்னை எடு

முறைச்சு பார்த்தா சிரிச்சு நில்லு

பந்து போட ஆறாய் எடு

ஏய் ஆடு ஆடு ஆட விடு

ஆடும் போது ரன்னை எடு

முறைச்சு பார்த்தா சிரிச்சு நில்லு

பந்து போட ஆறாய் எடு

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு

ஏய் மை ராசா

வா நீ க்ளோஸா

ஆடு என் கூட அடிச்சு ஆறா
ஆறா ஆறா ஆ ஆ ஆ ஆ ஆ

நாலா நாலா நா நா நா நா நா
பந்தை பார்த்து அடிக்கனும்

பார்ட்னருக்கும் கொடுக்கனும்

ரெண்டு பேரும் சேர்ந்து தான் எதிரிபந்தை அடிக்கனும்

கில்லிகோலி ஆடுறவன் கிரிக்கெட்டும் ஆடனும்

நீ தாய் நாடு வென்று காட்டி தாய்நாட்டை உயர்த்தனும்

கை தட்டி நிற்காதே

வீன் பேச்சு பேசாதே

காலம் கடந்து போச்சுதுனு கவலைப்பட்டு ஏங்காதே

கனவு ஜெயிக்க வேணும்ன்னா கண்ணை மூடித் தூங்காதே

ஆடவேணும் ஆட்டம் என் போல சூப்பர் ஆட்டம்

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு

நான் அடிக்கும் பந்தை பாரு

நாலு பக்கம் பறக்கும் பாரு

பந்து போட்டு அவுட் என்னை செஞ்சு பாரு

சாரலாய் வந்த மழை.....

சாரலாய் வந்த மழை
தூறலாய் மாறி நின்றும்
சொட்டு சொட்டாய்
வீட்டின் கூரையில்
விட்டு விட்டு
ஒழுகும் மழையில்
கை நீட்டி ஆட்டம் போட
மனமிருந்தும் செயலில்லை
ஏழையாய் பிறந்ததாலே
ஏக்கம்நிறை பெருமூச்சோடு
எதிர்வீட்டு பஜ்ஜி வாசம்
பசியாற நுகர்வதால்...

என்றும் போல அன்றும்...

என்றும் போல அன்றும்
கிடைக்குமா கிடைக்காதா அங்கலாய்ப்போடு
அரக்க பரக்க ஓடினேன்
அம்மன் தேர்போல் அசைந்தே
நகர முடியாமல் நகர்ந்து
நெரிசலோடு வரும் பேருந்தில்
முட்டி மோதியே ஏறி
நேரத்திற்கு செல்லவேண்டி தவிப்போடே
நேரமென்னவென கடிகாரம் பார்க்க
பின்புறமாய் ஒரு குறுகுறுப்பு
திரும்பிட நினைக்கும் முன்னே
சட்டையை யாரோ இழுக்க
சட்டேன கோவத்தோடு திரும்ப
சாந்தமானேன் மழலையைக் கண்டு
எங்கோ பார்த்த முகமாய்
என்னுள் ஏதோ குடைய
மன்னிக்கனும் குழந்தையின் செயலுக்கு
மங்கை சொல்கேட்டு நிமிர
மரமாகி நின்றேன், அவளுந்தான்
நிறுத்தம் வந்ததும் இறங்கினேன்
நில்லாமல் பின்னோடும் மனதுடன்..

நம்காதல்......

நீ படித்திருக்கிறாயா நான் பார்க்கவில்லை
நீ பணக்காரியா நான் பார்க்கவில்லை
நீ என்மதமா நான் பார்க்கவில்லை
நீ என்னினமா நான் பார்க்கவில்லை
நீயும் இவையெல்லாம் என்னிடம் பார்க்கவில்லை
நம் குடும்பம் இவற்றைப் பார்த்தது
சிந்தியாமல் செய்த கண்களின் தவறு
சிறைபட்டு நிற்கிறது சுதந்திரத்திற்காய் நம்காதல்

கிறுக்கல்கள்

நண்பர்கள் நடுவே
நாம் பேசிக்கோண்டாலும்
நம்மை மட்டுமே பார்த்துக் கொள்ளும்
நம்மிருவர் கண்கள்
நண்பர்களின் கேலிப்பேச்சில்
நம் பெயர் வரும்போது மட்டும்
நகைச்சுவையை புன்னகையாக்கும்
நம்மிருவர் இதழ்கள்
எத்துனை நேரம் பேசிய பின்னும்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
வழியின் திருப்பத்தில்
கடைசியாக பார்த்துக் கொள்ளும்
நம் பார்வைகள்
நம்முள் நமக்கு நம்மை உணர்த்தும் நம் காதலை
நவிலப்படாமல் நலிவதை உணர்த்தும் நம் மனதில்

பிரிவின் கணங்கள்.....

காற்றில் அறுந்த மேக
துண்டுகளை போல்
உனக்கும் எனக்குமான
உறவை உடைத்து
செல்கிறது காலம்.....

கோடை வெயிலில் தெறித்து
கிடக்கும் நெல் மணியை
கடத்தி செல்லும் ஊர் குருவியாய்
நம் நினைவை
கொத்தி செல்கிறது மனது..

பசி கொண்ட யானையாய்
கொன்று தின்கிறது
மௌனம்
நமக்கான மணி துளிகளை.....

இல்லாமல் இருக்கும்
கடவுளை போல்
நாம் வாழ்ந்த பக்கங்களை
மற்றும் ஓர் முறை
வாசித்து காட்டுகிறது காதல்.....

ஒற்றை கொம்பில் தொங்கி
நிற்கும் தேன் கூடாய்
பெருகும் கண்ணீரோடு
பரிதவித்து நிற்கிறேன் நான்...

சொல்லாத காதல் ...

உன்மீதான காதல்
கவிதையாய் கசியுமேயானால்
ஒருவேளையது
புன்னகையாகவோ
கண்ணீராகவோ
கோபமாகவோ
பிரசவிக்ககூடும் ..
நீ கொட்டிதீர்க்கும்
மௌனத்தை காட்டிலும்
ரகசியமானதொரு செய்தியை
கொண்டுபோய் சேர்க்கலாம்
சில தருணங்களில்
காலியாக நிரப்பபட்ட காகிதங்கள் ..
எழுதமறந்த கவிதையாக
காற்றோடு கலக்கட்டும்
எனது காதலும்
உனது மௌனமும் .

சொல்லப்படாத காதல்...

!உன் விழியினில் என் பிம்பம்
தெரிந்தபோது உணர்ந்தேன்
உன் பார்வையில் நான் உரைந்திருக்கிறேன் என்பதை !
நாம் பேசிய ஆயிரம்கோடி வார்த்தைகளின்
நடுவில் துளிர்விட்ட உனது சிறிய
மௌனத்தில் ,
உன் விழிகள் பேசிய ஆயிரம்கோடி மொழியில் ,
உணர்ந்தேன் எனக்கான உன் காதலை !
பிரியும் வேளையில் உன் கண்களின் ஓரம்
கசியும் கண்ணீர் துளியில் உணர்ந்தேன்
உன் கண்ணீரில் கூட என் உயிர் உலவுவதை !
நிகழ்வுகளை விழி மூடி யோசித்தபோது உணர்ந்தேன்
இருளை அல்ல
உன் பிம்பம் என் நினைவுகளிலும் ஊடுருவதை !
காதலை சொல்லாமல் கொள்ளாமல்
பயணிக்கும் காதலர்களாய் !!

உன் நினைவாக

சில நேரங்களில்
விட்டு கொடுத்து
வாழ்வது
என் சுபாவம்தான்
வாழ்வையே கொடுத்துவிட்டேன்
வாழச்சொல்கிறாய்
*****************************************
இல்லாதவனுக்குதான்
கொடுக்கும் மனமிருக்குமாம்
என்னிடம் இல்லாத மனதை
உனக்கு கொடுக்க துடிக்கின்றேன்

நீ அதை எப்போதோ
பறித்துக்கொண்டாய்
உணராமல்

******************************************
நீ
அனுப்பிய
புகழ் பெற்ற எழுத்தாளரின்
கவி தொகுப்பும்

பொக்கிஷமாய்
நான் சேமித்து வைத்திருக்கும்
குறுஞ்செய்திகளும்

மட்டுமே மிஞ்சியிருக்கின்றன
நீ இல்லாத தருணங்களில்
உன் நினைவாக
********************************************

காத்திருப்பு

யாருக்கோ எழுதிய கவிகளில்
என்னை பொருத்தி இன்பம் கொள்கிறேன்

யாருக்கோ காதல் சொல்ல
என்னிடம் ஒத்திகை பார்த்தாய்
நாடகமென்று அறிந்தும்
மதி மயங்குகிறேன்

உன்னிடம் பேச வந்த வார்த்தைகள்
கருவிலேயே இறந்து விடுகின்றன
காகிதத்தில் இரக்க, கோர்வையாய் வரவில்லை
சொல்லி அழ தைரியம் இல்லை
சொன்னால் தீரும் துயரம் இல்லை

நட்பெனும் காந்தம்
நமை ஈர்த்தது அன்று
காதலாக அது
நகர்ந்தது என்று?

நட்பெனும் போர்வைக்குள்
காதல் வளர்ப்பதால்
குற்ற உணர்ச்சி கொல்கிறது

எதை துண்டிப்பது?
காதலையா, நட்பையா?
என்ற குழப்பத்தில் நான்...

எதை செய்தபோதும் எனை
தண்டித்துவிடாதே என்ற
வேண்டுகோள் மட்டும் விடுக்கின்றேன்
காலத்தின் பதிலை எதிர்நோக்கி
காத்திருப்புகள் தொடர்கிறது..

என் மாமன் மகள்...

மலரே உன்ன மறக்க
மாலதீவு போனாலும்
ஒட்டி வரும் உன் நெனப்ப
ஓட்டிடத்தான் முடியுமா?

அத்தமக உனகாக என்
சொத்து எல்லாம் எழுதினாலும்
உன் கன்னகுழி காணாம
என் கண்ணு ரெண்டும் ஏங்குதடி...

விக்கல் வரும் முன்னே
தல தட்ட வந்து நிப்ப;
செல்லமா இடுப்ப கிள்ள
தல தெறிக்க ஓடி நிப்ப....

நம் காதல் நாம் சொல்ல
வார்த்தை ஏதும் தேடல;
வக்கனையா காதலிச்சோம் - அப்ப
வாக்கப்பட தோனல ....

சொத்து ஏதும் இல்லையேன்னு
உன் அத்த எரிஞ்சு கேக்கையில;
மருகி நின்ன என் மாமன்
மறுத்து பேச வழி இல்ல.....

உறவு சண்டையில
உருகொலஞ்சு நின்னோம் ;
உருப்படியா ஒன்னு ( காதல் ) செஞ்சு
நம்ம உறவுகள செதசோம்.....

காதலுக்கு மரியாதை கொடுத்து
விட்டு கொடுத்தோம் நம்மள ;
உன் கல்யாண சேதி கேக்கும் வரை
காலம் கூட நம்பல.....

தாலி ஒன்னு ஏறிச்சின்னா
தல வச்சு படுக்க மாட்டேன் ;
நீ இருக்கும் தெருவுல
நான் வந்து போக மாட்டேன்.....

மாசம் ஒரு தடவ
நல்லது கேட்டது வாரயில;
ஒட்டு மொத்த உறவெல்லாம்
கை தட்டி சிரிச்சு பேசுறப்போ....
இரட்டை உசிரு மட்டும்
மறைவான இடம் தேடி
முகம் மறைச்சு அழுகணுமே......

உன் மடியில தல சாஞ்சு
நெஞ்சோடு முகம் சேர்த்து..
கொஞ்சிப் பேசிய நாட்கள் எல்லாம்
கெஞ்சி கேட்டாலும் கிடைக்குமா.....

அடியே.....
காசு பணம் வாங்கி இருந்தா
கடன அடச்சிருப்பேன் ;
காதல வாங்கிபுட்டேன் - என்
கண்மணிய நெனசுபுட்டேன்....

உசுருக்கும் உனக்கும்
ஒத்தும இருக்கு புள்ள ;
ஒரு தடவ போனா
மறு தடவ கிடைக்குமா....
.
.
ஒரு தடவ போனா
மறு தடவ கிடைக்குமா....

**"எங்கே தொலைத்தோம்?" **

அந்தப் பழைய புகைப்படத்தில்
சிரிக்கும் சிறுவர்கள் நாம்தானே?
எங்கே தொலைத்தோம்
அந்த இன்முகத்தை?

எங்கே போயின
சிரிக்கும் கண்களும்
சாந்தம் தவழும் முகமும்
அந்த அப்பவித்தனமும்?

படிக்கப்போன இடத்தில்
பள்ளியில் தொலைத்தோமா?
கல்லூரி களவாடிக்கொண்டதா?
எப்படி வந்தன இத்தனை
இறுக்கமும், சுருக்கமும்?

அறிவு வளர வளர
கள்ளம் வந்து
கண்களில் நிறைந்ததா?

காலச்சாட்டை முதுகிலும், முகத்திலும்
இழுத்த இழுப்பில் இறுகிப் போனதா?

அப்பா, அம்மாவிற்காக ஒன்று,
மனைவி, குழந்தைகளுக்காக ஒன்று,
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக ஒன்று,
பணியிடத்திற்கென்று ஒன்று,
என்று முகமூடிகளை அணிந்தணிந்து
அந்த முகமூடிகளே முகங்களாக
முற்றிலும் மாறிவிட்டனவா?

என்ன விலை கொடுத்தால்
திரும்பவும் கிடைக்கும்
அந்தப் பழைய முகம்?

உயிரில்லா வார்த்தைகள் !!!

உயிரில்லா வார்த்தைகள் !!!

நேரம்
இரண்டை கடந்து
மூன்றை தொட்டுவிட
துணிந்திருந்தது!

நினைவுகளை
பிரேத பரிசோதனை செய்தபடி
எனதறையில் நான் !

பெத்த பாசத்திற்கு
வாய் கிழிய
கத்திகொண்டிருக்கிறாள் அம்மா...
சாப்பிட வா என்று !!!

அவளுக்காய்
எழுந்து சென்று அமர்கிறேன்!

வெள்ளை சோறும்
சாம்பாரும் என
உணவு பரிமாறப்பட்டு இருந்தது!

பிசைந்து கொண்டிருக்கையில்
எதேச்சையாக
அவள் அண்ணனின்
திருமண பத்திரிக்கை மீது
பார்வை விழுகிறது!

பார்வை அதிலே பதிய
நினைவு
தடம் மாறியது!

அவள்
அன்பின் கண்டிப்போடு
எனை நோக்கி கேட்கிறாள்...
"
மணியாச்சுல?
ஏன் இன்னும் சாப்பிடல ?" என்று -
இரண்டாண்டுகளுக்கு முன்
கல்லூரியில்!!!

கடந்த
இரண்டாண்டு கால பிரிவு
பரிவோடு
கறுப்பு வெள்ளையில்
தன் உணவை பரிமாற,

எழுந்து கை கழுவிவிட்டு
மீண்டும்
எனதறையில் முடங்குகிறேன்!

அம்மா
இன்னமும் கத்திகொண்டிருப்பது
செவியில் மட்டும் விழுகிறது!
"

இயற்கையும்---நானும்

இயற்கையிடம்
ஒரு
கேள்வி..............?

செயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது
இயற்கையா?

இல்லை,
இல்லை
இயல்பாக
இருப்பது மட்டுமே
என்றது
இயற்கை.

உன்னிடம்
இன்னொரு
கேள்வி.........?
செயற்கை என்பது.........

இயல்புக்கு
புறம்பானது
அனைத்தும்
செயற்கையே!

அப்படி என்றால்
செயற்கை என்பது
இயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது தானே!

உன்னிடம்
ஒரே ஒரு
கேள்வி......
என
இயற்கை
என்னைக்
கேட்டது?


“ம்”
என்றேன்
ஆணவத்துடன்.....

நீ
இயற்கையா?
அன்றி
செயற்கையா?

நான்
இயற்கை தானே?
இதில் என்ன
சந்தேகம்?
என்றேன்..........

அப்படி என்றால்
என்னின்
பாஷைகள்
உனக்கு ஏன்
புரியாமல்
போகிறது?

இயற்கையோடு
ஒன்றி
வாழ்ந்த
நீ
மட்டுமே
அதைவிட்டு
தொலைதூரம்
சென்றுவிட்டாய்.
கேட்டால்
ஆறாம் அறிவு
என்கிறாய்...

அந்த
அறிவின்
அடிப்படை
அகத்தின் வழி
நோக்குதல்
தானே!

ஏனோ
அதைவிட்டு விட்டு
ஆழ்கடல்
ஆராய்ச்சிவரை
சென்று
கிடைக்காமல்
அணுவைத்
துளைத்து
அதனுள்ளே
அவனியை
புகுத்த நினைக்கும்
உன்னறிவைக்
கண்டு
நான்
வியக்கிறேன்....
அதே நேரத்தில்

விளைவின்
விபரீதத்தை
உணரமுடியாத
உன் அறிவு
வேடிக்கையாகவும்
இருக்கிறது..........

ஓரறிவு
ஈரறிவு
மூன்றறிவு
உயிரிகள்
கூட
என்னின்
சீற்றத்தை
உணர்ந்து
தற்காத்துக்
கொள்கிறது.

ஆறறிவு
என்று
அகமகிழும்
நீ மட்டுமே
பகுத்தறிவு
என்று
பறைசாற்றுகிறாய்....

தொலைந்து போ!
என்று
உன்னை
தொலைக்கவும்
மனமில்லை......

படைப்பின்
பரிணாமத்தை
மட்டுமே
வைத்துக் கொண்டு
செயற்கையின்
சாயலுக்கு
சான்றாய்
திகழும்
உன்னை
நான் இல்லை
என்பேனா..........?

நீ தான்
நான்
நான் தான்
நீ.

அந்த நாட்கள்........

வெள்ளி பார்த்து விழித்தெழுந்து
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?

கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?

பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?

நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!

மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது

“மறக்க மாட்டீர்கள் தானே” ,
கடைசியாய் சந்தித்தபோது -நீ
கையாட்டி சொல்லியது.

எப்படி முடியும்…………
விழித்ததும் முகம் பார்க்கும் “கண்ணாடி”
நீ கண்டிப்பாய் என்பதால்
பார்க்காமல் வந்ததில்லை உன்னை பார்க்க.

லேசாய் நீர்த்துளி பட சிலிர்க்கும் என் உடல் ,
எனக்கே தெரியாமல் உன் விரல் தொட
என்னுள் நிகழ்ந்த ஒரு ரசாயன மாற்றம்.

காற்றில் விலகும் திரை வழியே
ஜன்னல் நுழையும் நிலா …
லேசாய் களையும் கூந்தல் ஊடே
உன் ஓரக்கண் தரிசனம்….

அன்றாட தொலைகாட்சியின்
பட்டு சேலை விளம்பரம்…..
வெள்ளிகிழமைகளில்
என் தேவியின் தரிசனம்..
புதிதாய் பூத்திருக்கும
பூந்தொட்டி ரோஜா
புத்தாடை பெருமை கொள்ளும்
உன் பிறந்த நாட்கள் .

தாலாட்டு சுகம் காணும்
தாய் மடி குழந்தைகள்..
மாலை நேர சொர்க்கம்
என் நந்தவன தலையணைகள்.

இப்படி ஏதோ ஒன்று
உன்னையும் ,உன்னோடான அந்த
வசந்த காலத்தையும்
நினைவு படுத்தியே தீரும் வேளையில்

உறக்கவே சொல்லிவிடுகிறேன்….
“உன் பெயரை” எப்போதாவது …

தன்னை அழைப்பதாய்….
என்னை அணைத்துக்கொள்ளும்
என் செல்ல மகள் தான்….
ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவாள் “ உன் பெயரை” ......
என் மனைவியிடமிருந்து.....


உன்னோடான நேரங்களைவிட
உன் நினைவுகள் வந்து செல்லும் நேரம்
அதிகம் என்பதால்
“மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது” ....

ஆசைப்பட்டேன்

உன்னை பிரதிபலிக்கும் கண்ணாடியை இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே உடைந்து போவேன் என்று தெரியாமலேயே..

உனக்கு நிழல் கொடுக்கும் மரமாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே சாய்ந்து விடுவேன் என்று தெரியாமலேயே..

உனக்கு ஒளி தரும் விளக்காய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே அணைந்து விடுவேன் என்று தெரியாமலேயே..

உன் செவிக்கு இசையாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே ஊமையாகி நிற்பேன் என்று தெரியாமலேயே..

உன்னை கரை சேர்க்கும் படகாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே மூழ்கி விடுவேன் என்று தெரியாமலேயே..

உனது கனவுகளை நிஜமாக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே என் நினைவுகளையும் இழப்பேன் என்று தெரியாமலேயே..

உன் இதழ்ளில் புன்னகையாய் மாற ஆசைப்பட்டேன்,
உன்னாலே விழிகளிலே நீர் சுமப்பேன் என்று தெரியாமலேயே...

இன்னும் ஆசைப்படுகிறேன் உனை மட்டும்,
உன்னாலே எனதாசை நிராசை ஆகும் என்று தெரிந்துமே.

நம் நட்பு...

உன் நட்புக்காக இதயத்தில் இடம் கொடுக்க பல பேர் உண்டு,
ஆனால் உன் நட்புக்காக இதயததையே கொடுக்க நான் மட்டுமே உண்டு. நட்புடன் நண்பன்வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது
"நம் நட்பு
'"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ
"உன் அழகையும், ரசிப்புதன்மையையும் கண்டு மயங்கிய அந்த இயற்கை!!!இயற்கை பாசைகளை பேசி...!இயற்கை அழகை காட்டி...!!
இயற்கை மனம் தந்து...!!!இயற்கை சுகம் தந்து...!!!!
உன்னை வியக்கவைக்க இந்த இயற்கை...!
முறையிட்டுக் கொள்கிறது ஒன்றோடொன்

தோழி....

அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி

தோழியே!

தோழியே!
உன் முகம் என் கண்ணிலும்
உன் நினைவென் நெஞ்சிலும்
சுமப்பதினால் தான்
இன்னமும் சொல்கிறேன்
நான் உன்னை பிரியவில்லை என்று....

கண்மூடி காண்கிறேன்
நம் பள்ளி நாட்களை...
கண்களை திறந்ததும் ஏனோ தெரியவில்லை
என் சுவாசக் காற்றில் படிந்து விட்ட உன் நினைவுகள்
கண்களினோரம் தன் ஈரப் பதத்தினை சின்னமிட்டது..

மனதில் எதோ ஒரு கனம்
அதை எப்படி சொல்வேன் உனக்கு...?
பிரிந்திடவும் நினைத்தாயோ என்னை...?

பள்ளி கால முதல் தோழி நீ...!
என் மனதில் பட்ட முதல் சிநேகம் நீ..!
உன்னுடன் நகர்ந்திட்ட அந்த நாட்கள்..
நான் எப்படி திரும்ப பெற்றிடுவேன்...?

இன்முகமாய் நான் கண்ட உன் முகம்
உன் நட்பினிலே நான் கண்ட உன் உள்ளம்
இன்று...சற்று தள்ளி நின்று என்னை பார்ப்பது ஏனோ..?

விலகியிருப்பதென சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல..
அன்பு தோழியே..!
அது என் இதய துடிப்பினில் நீ ஏற்றிவிட்ட கூறிய வாள்
எடுக்கவும் முடியவில்லை....
வலியினை பொறுக்கவும் முடியவில்லை.

முதல் காதல் கடிதம்.....

விழியால் இதயம் கவர்ந்தவளுக்கு
எளிதாய் இதயம் இழந்தவன் எழுதுகிறேன்.....

இது வரையில் எழுதி பழக்கமில்லாத
கடிதம் என்பதால் ஒரு வித
பதட்டத்தோடு தொடர்கிறேன்......

பாசம் கொட்டி எழுதுவதால்
பல இடங்களில் வார்த்தைகள் அழிந்திருக்கும்...

அழிந்த வார்த்தையின் பொருள்
நான் சொல்லாமலே உனக்கு புரிந்திருக்கும்...

திசை எங்கிலும் தெரியும் உன் முகத்தை
என்னால் மறக்க முடியவில்லை....

துருவி துருவி... நீ கேட்ட போதும் கூட.....
காதலை என் மனதுக்கு சொல்ல தெரியவில்லை.....

மனதார உன்னை நினைக்கிறேன்...
ஆனாலும் சொல்லாமல்
மனதுக்குள்ளே மறைக்கிறேன்....

கருவை சுமக்கும் தாய் கூட....
பத்து மாதத்தில் இறக்கி வைப்பாள்
அந்த சுகமான சுமையை...!!!!!

காதலை சுமக்கும் இதயம்
காதலியிடம் சொல்ல மறுப்பதால்
நித்தமும் குளமாக்குது இமையை..!!!!

வாச மலர் பறித்து வந்து
நேசம் சொல்லவா..????

இல்லை வான் நிலவை அழைத்து
வந்து தூது சொல்லவா?????

தெரியாமல் புரியாமல்
அலை பாயுது மனம்......

அதனால் தான் காதல் கடிதம் ஒன்று
எழுதுகிறேன் இன்றைய தினம்.....

எனக்காக ஆரமித்து... உனக்காக எழுதி.....
நமக்காக முடித்து......

நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.....
நீ வரும் பாதையில் காதலை சொல்ல..!!!

என் உயிர்க்கலந்த உறவே.....

எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......

இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....

வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!

நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!

என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!

சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......

உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!

உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!

அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!

வயக்காடு வாழ்த்துகிறது...

மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
யானை கட்டிப் போரடித்த கூட்டம்
இன்று
வீடு கட்டிப் போரடிக்கிறது
என் மேல்!

வயலும்
வயல் சார்ந்ததும் மருதம்...
தொழிலும்
தொழில் சார்ந்தோரும்
பிழைக்க
என் வயிற்றில்
'பாலை" வார்ப்பது
என்ன நியாயம்?

வறண்ட கோடுகளால்
இயற்கையன்னை வதைப்பது போதும்:
இல்லாத கோடுகளால்
தண்ணீர் இல்லாமல் செய்வது
என்ன கொடுமை?
அணைக்கட்டுகள்
என்னை அரவணைக்காததை
என்னவென்பது?
மொழிகளால்
பிரிந்த உங்களிடம்
எந்த மொழியில் வேண்டுவது?
என்னிடம்
ஆழப்பாய்ந்து நீரள்ளிப் பருகும்
வேரில்லை:
நீர்த்தாகம் தீர
உங்களை விட்டால்
கதி வேறில்லை!

பசுமை தந்தேன்
இன்று
சுமையாகிப் போனேன்!
என்னை
வருடிச் சென்ற தென்றல்
நெருடலாய் கேட்கிறது
ஏன் கம்பிகளாய்
மாறி வருகிறாயென்று!

ஏரு பூட்டி சேறு பூசி
என்னை
கிச்சுக்கிச்சுக்காட்டி
விளையாடிய நீங்களா
இன்று
உயிருடன் பிரேதப்பரிசோதனை செய்வது?

பெற்றவள் கைவிட்டாள்...
பெற்றவனோ
விற்றுவிற்று வெற்றிடமாக்கி
மீண்டும் விற்றுவிட்டான்!

இன்னமும் இருக்கிறேன்...
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்
சுடுகாடு இடுகாடுபோல்
தீண்டத்தகாத வயக்காடாக!

ஒரே ஆறுதல்:
பொங்கல் பண்டிகையை
இன்றுவரை
பெயர் மாற்றவில்லை...
செங்கல் பண்டிகையென்

ஏழு ஜென்ம ஆசைகள்

ஏழு ஜென்ம ஆசைகள் ஏன்?

ஒரே ஒரு ஜனனத்தில் !

விதிமுறைகள் பல விளக்கப்பட்டு

வழிமுறைகளே இல்லா நியாயங்கள்!

கசக்கப்பட்ட உள்ளங்களால் !

கசந்து போன நினைவுகள் !_சோலை

குயிலின் சோகம் கேட்டு ,

சோர்ந்து போன தென்றல்கள் !

விலக்கப்பட்ட விளக்கங்களால் !

முடிந்து போன அத்தியாயங்கள்

புதைக்கப்பட்ட பிறகும்!

சுவாசம் தேடும் உள்ளங்கள்!

நட்பை நாம் நேசிக்கும்போது...!

"எத்தனையோ கவிதகைள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!
நண்பா,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!
எத்தனையோ முகங்கள்,
எவ்வளவோ மொழிகள்,
எல்லாம் ஒன்றிணைகின்றன
நட்பை நாம் நேசிக்கும்போது...!
எத்தனையோ துன்பங்கள்,
எவ்வளவோ கஷ்டங்கள்,
எல்லாம் மறைகின்றன
நட்பை நாம் யாசிக்கும்போது...!
தூய்மையான உள்ளத்தில்
தோன்றுகின்ற நட்பெல்லாம்
துதிக்கப்படுகின்றன...!
என்றும்,
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!
எங்கேயோ நீயும்....
இங்கே நானும்....
இணைந்தது எப்படியோ..?
காதலா இல்லை?
காமமா இல்லை?
கள்ளமற்ற நட்புதான்...!
இதை கடைசிவரை நான்
காப்பாற்றுவேன் என்று கூறி,
உனது நட்பை வாழ்த்தி
வணங்குகிறேன்....!"

யாரிடம் சொல்வது ...

யாரிடம் சொல்வது ...
புள்ளிகளை மட்டும் வைத்துவிட்டு ...
கோலம் போடாமல் திரும்புகிறேன்

பிரஸ்சில் பேஸ்ட்டை எடுத்துக்கொண்டு
வெறும் விரலால்
பல் தேய்க்கிறேன்......

குளிக்கவே இல்லை
தலை துவட்டுகிறேன்......

நெற்றியில் வைக்க வேண்டிய
ஸ்டிக்கர் பொட்டை
மூக்கில் வைக்கிறேன் ......

கல்லூரி போகிறவள்
தம்பியின் ஏழாவது
புத்தகங்களோடு பயணிக்கிறேன் .......

தோழிகள் என்று நினைத்து
மரங்களுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்.......

கோவிலுக்கு சென்றால்
பிரகாரத்தை
பின்பக்கமாக சுற்றுகிறேன்...

வெறும் தட்டிலேயே
வயிறு நிறைய சாப்பிடுகிறேன்.....

மெத்தையில்
தலையணையை வைத்துவிட்டு
தரையில் படுக்கிறேன்....

என்னுள்
இவ்வளவு மாற்றங்களையும்
ஏற்படுத்தியவன்
நீதானென்பதை
நான் யாரிடமடா
சொல்லித்தொலைப்பது
இப்போது...

மனிதனாய் பிறந்ததனால்.......

விரும்பிய திசைகளில் எல்லாம் பயணிக்க
ஒரு பறவையாய் பிறந்திருக்க வில்லை.

எதிர் வரும் எதையும் கொல்ல
ஒரு சிங்கமாய் பிறந்திக்க வில்லை.

பதுங்கி இருந்து பின் பாயும் வித்தை அறிய
ஒரு புலியாய் பிறந்திருக்க வில்லை.

மதியினால் சூது செய்து வாழ
ஒரு நரியாய் பிறந்திருக்க வில்லை.
.
.
.
மனிதனாய் பிறந்ததனால்
வாழும் வகை அறியவில்லை
மிருகங்களின் குணம்
கொண்ட மனித போர்வை
மூடர் மத்தியில்

உதிர்ந்துவிட்ட பூ நான் !

நான் கொஞ்சி கெஞ்சிய
வார்த்தைகள் எல்லாம்
பொய்யாய் போனதடி..
நீ மௌனமாய் ஆனதால்..

ஒரு நாள் பேசவில்லை என்று
என் மீது அன்பாய் கோபம் கொண்டாய்
அனால் இன்றோ பேசவில்லை
என்றாலும் பரவாயில்லை என்கிறாய்.

உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு செடிகொடி இடம் காட்டிருந்தாலும்!
இந்நேரம் அதோட அன்பை
பூக்களாய் தாந்திருக்கும்!

உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு பறவை விலங்கிடம்
காட்டிருந்தாலும்
தன் உடல் அசைவுகளால் தன்
அன்பை சொல்லிருக்கும்.!

அடைக்க பட்ட இதயத்தில்
அடைபட்ட உனது நினைவுகள்
அனுதினமும் கொஞ்சும் வார்த்தைகள்.
உன்னை சுற்றி வந்தே
சிறகு இழந்த பறவை நான்
கால் மணி நேரம் என்றாலும்
காத்திருப்பேன் உன்னை பார்க்கவே..
ஆனால் இன்றோ..????

எனக்கு நீ கிடைத்த பொக்கிஷமாய்
நான் நினைத்திருந்தேன்..
உன்னை பிரியவே எனக்கு
கஷ்டமாய் இருக்குமடா என்று சொன்னவள்
இன்று பிரியவே பிரியபடுகிறாய்..

மனமில்லாமல் வெறுக்கிறேன்
வாழ்கையின் கடமைகளை நினைத்து
உன்னைவிட்டு விலகவே நினைகிறேன்
மறுகணமே கண்ணீர்விட்டு அழுகிறேன்
என்னைவிட்டு பிரிந்துவிடதே என்று
இருந்தும் மாற்றம் இல்லை
மறந்துவிடு என்னை
நான் மரணித்துவிட்டேன் என்று
நட்பாக கூட என் உறவு உனக்கு வேண்டம்!

தவறி போய்விட்ட என்
வாழ்க்கை பயணம்!
மீளமுடியாமல் தவிக்கிறேன்!
தொலைந்த எனது இரவுகளை
நினைத்து பசிக்கும் நேரத்தை மறந்து
உன்னை பார்க்க வந்த நேரத்தில்
தவறி விழுந்து காயம் பட்ட நாட்களையும்
என்றும் அழியாத நினைவுகளை
எனக்கு நீ கொடுத்த பரிசு!
இத்துணை வருடம் நான் நேசித்ததற்கு.!

செடியில் ஒரு பூ உதிர்வதால்
செடிகளுக்கு என்றும் வருத்தம் இல்லை!
ஒரு பூ உதிர்ந்தாலும் மறு பூ பூத்துவிடும்!
நீ செடியாக நான் அதில்
மலர்ந்த பூவாக!
உதிர்ந்துவிட்ட பூ நான்!

அன்புள்ள என் கவிதைக்கு....

அன்புள்ள என் கவிதைக்கு,

உன்மேல் நான் காதல் கொண்டதால்!
ஏடும் எழுதுகோலும் காணிக்கையாய் படைத்து,
வணங்கி உன்னை வரவேற்றேன்.
எனக்கு தரிசனம் தரமறுத்தாய்.

தனிமையில் எதிர்பாராத நேரத்தில்
அணை உடைத்துவரும் வெள்ளம்போல் வந்து
என் மனதை மிதக்கவிட்டு அதிர்ச்சி அளித்தாய்!
அவ்வெள்ளத்தில் நீச்சலடித்து
ஏடும் எழுதுகோலும் எங்கே தேடுவேன்?
முயற்சித்தேன் கைகூடவில்லை.

நான் அசுரனானதால் நீ வரும் நேரம்
உன்னை சிறைப் பிடிக்கவே!
என் ஆயுதான்களாக ஏடும் எழுதுகோலும்
தயாராக என்னுடனே வைத்துப் பழகுகிறேன்.
உன்னை சிறைபிடித்துவிடுவேன் என்பதால்
நீ வராமல் இருந்துவிடாதே!

உன்மேல் நான் கொண்ட காதலினாலே
எப்போதும் நீ என்னுடனே இருக்கவே.
உன்னை கேட்கிறேன்
மனதில் உதித்த நீ என்றும் என்
கனவிலும் துணையிருப்பாய் என!
உன் விருப்பத்தை தெருவிக்க
மீண்டும் வருவாய் என்ற எதிர்பார்ப்புடன்

"காதலியில்லாக் காதலன்"

என்னடா இது!
நமக்குத்தான் காதலியே இல்லையே,
அப்புறம் எப்படிப் பிறக்கிறது
இந்தக் கவிதை மாதிரியெல்லாம்?

நினைத்துக் கொண்டே
பைக்கை நெருங்கினேன்
வருவது கண்டு ஓடிய
குழந்தையின் பயம் அழகு.

வெளியே எடுத்து
உதைக்கும் போது எதிரே
பெட்டிக்கடைப் பெண்ணின்
புன்னகை அழகு.

சென்றது ஆபீஸ் நோக்கி,
போட்டியின் வாலிபர்கள்
பைக்கை முறுக்கியதும்
எழும் சத்தம் அழகு.

சப்வேயைக் கடகும்போது
முன்னால் செல்லும்
பின்னால் உள்ள துப்பட்டா
பறப்பது அழகு.

சிக்னல் இல்லா சந்திப்பு,
நாலா புறமும் வரும்
அவசரத்தில் பிறந்தவர்களின்
முட்டல் அழகு.

சிக்னலில் யூடர்ன்,
போலீஸ்காரர் பிடிப்பாரோ?
பயந்துகொண்டே திரும்பும்
புது பைக் அழகு.

அப்பாடா! சிக்னல் எல்லாம்
கடந்து விட்டேன் என்று
நிம்மதியாய் செல்லும்
அகன்ற சாலை அழகு.

ஆபீஸ் நுழையும்போது
குட்மார்னிங் அண்ணா
சிரிப்போடு சொல்லும்
தோழி அழகு.

ரெண்டும் நல்லாத்தான் இருக்கும்,
நான் செய்ததுதான் சரி
அடித்துக் கொள்ளும் நண்பர்களின்
போட்டி அழகு.

மாலை நேரம் முடிவு
வீட்டிற்கு செல்லப்போகும்
நண்பர்கள் முகத்தில்
உற்சாகம் அழகு.

வெளியே வந்தால்
பைக் சீட்டில் வரைந்த
ஆபாயில் போன்ற
காக்கா எச்சம் அழகு.

அனைவரும் விரைவாய்
வீட்டிற்குப் பறக்க
அதைவிட அவசரமாய்
மங்கும் வானம் அழகு.

செல்லும் வழியில்
கேட்காமலேயே சிகரெட்
எடுத்துவைக்கும் அண்ணாச்சி
கடையில் பரபரப்பு அழகு.

இரவு உணவு மெஸ்ஸில்
உனக்கு தோசதானப்பா?
கேட்கும் ஆயாவின்
சுறுசுறுப்பு அழகு.

தூங்கும் முன் அழைத்து
ஏண்டா போன் பண்ணல?
கேட்கும் அம்மாவின்
பாசம் அழகு.

விளக்கை அணைக்கும் முன்
பவர்கட், ஏற்றி வைத்த
மெழுகுவர்த்தி ஒளியின்
ஆட்டம் அழகு.

அனலுடன் புழுக்கம்
தூங்க முடியாவிட்டாலும்
தேவையில்லாமல் உதித்த
இந்தச் சிந்தனை அழகு.

காதலியே இல்லின்ன!
எதத்தாண்டா காதலிக்கல நீ?
கேட்கும் மனதின்
நக்கல் அழகு.

எல்லாவற்றையும் காதலிக்கிறேன்
பதிலுக்கு காதலிப்பவளைத் தவிர.
யாருமே காதலிக்காத என்
வாழ்க்கை அழகு!!!

இது தான் காதலா……

என் கண்ணிமை போல் காப்பவளே…

நான் கண் மூடும் வரை கூட வருபவளே

கடவுளின் கருவறை போல்

என் உள்ளத்தில் வீற்றிருப்பவளே…

எனக்கே எனக்கு மட்டும் உரியவளான

என் இரகசிய சினேகிதி….

என் புன்னகைக்கு பின் இருப்பதும் நீயே…

என் அழுகைக்கு அணை போடுவதும் நீயே…

என் துயரத்திற்க்கு தோள் கொடுப்பதும் நீயே…

எட்டிப் பிடிக்க தட்டிக் கொடுப்பதும் நீயே…

தடுக்கி விழுகையில் தூக்கி நிறுத்துவதும் நீயே…

தவறு செய்யும் போது திருத்துவதும் நீயே…

அதை தெரிந்தே செய்த போது

என்னை ------ வார்த்தைகளால்

அர்ச்சனை செய்வதும் நீயே…

நேற்று வரை அறியவில்லை

நீயின்றி நான் இல்லையென்று…

அறியா வயதில் தோழியாக

அறிந்த பின் தோழியாகவும்

என் வாழ்க்கைத் துணையாகவும்….

சொல்லித் தான் இனியும் உனக்கு

தெரிய வேண்டுமா?....

நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை!!!!!!!

Miss you........

இன்றோடு ஒரு ஆண்டு முழுமையாக நிறைவடைந்துவிட்டது நீ என்னை விட்டு பிரிந்து.
அன்றொருநாள் பரஸ்பரம் பரிமாறிகொண்டது நினைவில் வருகிறது.. so...
இன்றும் அன்பே என்றுதான் உனக்கான கடிதம் தொடங்குகிறேன்.
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்கு பதிலாய் என்னை யாபகம் இருக்கா என்றே அழுத்தம் திருத்தமாக தொடர்கிறேன்.
இந்த மாதிரியொரு சூழலுக்கு ஆக்கிவிட்டாயே என்னை??
நாம் ஒன்றாய் கூடிசுற்றிய நாட்களில் என்னை மறந்து விடாதே என்று அடிக்கடி நீ என்னிடம் குறைத்ததன் அர்த்தம் இப்போதான் எனக்கு புரிகிறது. ம்ம்..
நீ என்னை பிரிந்தாலும் நான் உன்னை மறக்ககூடாது என்பதுதானோ அது??
மறந்துவிடாதே என்று சொல்லிவிட்டு மறைந்து போய்விட்டாய் எங்கோ நெடுதூரம்..
என்னால்தான் தொலைக்க முடியவில்லை நினைவுகளை. அடிக்கடி என் கனவுகளில் வந்து நீ கொடுத்த முத்தங்களை திருப்பி கேட்கிறாய்..
அய்யயோ எப்படி அதனை திருப்பி கொடுக்கபோகிறேன் என்று நானும் கனவு தொலைந்து பேந்த பேந்த விழிக்கிறேன்.
தீர்மானித்து விட்டேன் எப்படியும் நீ கொடுத்த முத்தத்தை உன் வகையராவுக்காது கொடுத்துவிடவேண்டுமேன்று.
ஓர் அதிகாலை பொழுதினில் உன்னை walking அழைத்து போய்கொண்டிருக்கையில் நான் எதிர்பாராத கணத்தில்
அந்த லாரி வந்து உன்மேல் ஏறி இறங்கிவிட்டது.
அன்றைய உந்தன் அலறல் சப்தம் இன்னும் என்காதுகளில் ரணமாக ஒலித்துகொண்டிருக்கிறது.
இதற்குமேல் பொறுமை இல்லாதவனாய் விறுவிறுவென சென்றேன் உன் வகையறா நாயொன்றை வாங்குவதற்கு.... இப்படியாக முடித்திருந்த last year டைரியை காலால் பிராண்டி விளையாடிகொண்டிருந்தது என் செல்லகுட்டி ஜூலி...
கதை வாசித்துமுடித்த அபினவ் நூலகத்தை விட்டு எழுந்து செல்கிறான் ஏதோவொரு திருப்தியோடு....

என்னவள் என்னிடம் காதலை சொன்னாள்

என்னவள்
என்னிடம் காதலை சொன்னாள்!!!
அவள் காதலை!!!
வேறு ஒருவனை காதலிக்கிறேன் என்று!!!
நான் சிரிக்க தெரியாமல் சிரித்தேன்!!!
நடிக்க தெரியாமல் நடித்தேன்!!!
நான் நடிப்பதை அவள் கண்டுபிடித்துவிடுவாள் என்று பயந்தேன்!!!
அந்த ஒரு நொடியில் என் கண்களுக்கும்,இதயத்திற்கும்
ஒரு யுத்தமே நடத்தி விட்டேன்!!!
என் கண்களில் கண்ணீர் வர கூடாது என்று!!!
நான் அழுது விடு வேனோ என்ற துடித்தேன்!!!
காதலிப்பதால் நான் அழகுச் சிலை ஆக தெரிகிறேன் என்று சொன்னாள்!!!
காதலில் தோற்றதால் இப்போது
நான் நடை பிணமாகத் தெரிகிறேன்!!!

என் உயிர்க்கலந்த உறவே.....

எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......

இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....

வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!

நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!

என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!

சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......

உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!

உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!

அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!!!!!!

சென்று வருகிறேன்...

விட்டுப் பிரிந்த நினைவுகளும்
தொட்டு தொலைந்த கனவுகளும்
கையை விட்டு கரைந்தாலும்,
காலங்கள் போட்டு வைத்த
கணக்கில்லா புள்ளிக் கோலங்களில்
கரைந்து காணாமலே போகிறேன்...
என்றாவது என் சொற்கள்
உன் நினைவலைகளை மோதிச் செல்லும்...
அந்த நொடியினில் அரைகுறையாய்
என் நியாபகம் வந்து செல்லும்..
எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
எப்படியும் நான் இருந்தேன் என்று
உனக்கு சொல்லி விடும்
அந்த கணம் அருகமர்ந்து
ஆறுதல் சொல்ல நானிருக்க மாட்டேன்..
அகமும் புறமும் உணர்ந்த நாம்
முகமே பார்க்க முடியாது போயிருக்கும்..
சுழலும் கால சக்கரத்தில்
என் நினைவு தூசிகளும்
எங்கோ சென்றிருக்கும் உன்னை விட்டு.

காதலுக்கு கண்ணீர் அஞ்சலி........

சிரித்து பேசி
சிணுங்கியதும்
சில்லென துவங்கிய என் காதல்
சிறகிழந்த பறவையாய் இன்று!

என் வாழ்வில் ஆச்சரிய குறியாய் இருந்து
பின் கேள்வி குறியாய் மாறிய காதலுக்கு
நேற்று வைத்து விட்டேன் முற்று புள்ளி.

காதல் மாயையா இல்லை
எது காதல் என்ற அறியாமையா?

காதலை கொன்ற
கொலை காரி அவள்

இ.பி.கோ வில் இடமில்லையாம்
இரக்க மற்றவளை தண்டிக்க!!

கோபம் இல்லை
பாவமாய் இருக்கிறது அவளை பார்த்தால்…

இதயம் இல்லாதவள் அவள்
இரக்கத்தை எதிர்பார்த்தது என் தவறு

மனிதாபிமானம் உள்ளவன் நான்
மன்னித்து விடுகிறேன் அவளை

வாழ்த்துகிறேன் அவள் வாழ்வு சிறக்க!!


தோல்விதான் எனினும்
சோகமில் லை
சுமை நீங்கியதால்
சுகமே

நேற்று அகால மரணமடைந்த
என் காதலுக்கு
கண்ணீர் அஞ்சலி

என் கடந்த காதல் பயணம்
கடும் தோல்வியில் முடிந்தது
அடுத்த பயணம்
அபார வெற்றி பெற வேண்டிகொள்ளுங்கள்
அவரவர் இஷ்ட தெய்வங்களை

இப்படிக்கு,
நான்

விடை தேடும் கேள்விகள்...

என் வாழ்கை கணக்கில் நான் கடந்துவிட்டேன் சில பக்கங்கள்..
சில பக்கங்கள் கோலாகலமாய்..
சில பக்கங்கள் அலங்கோலமாய்.!

கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;
பின் பக்கத்தை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா..?
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கத்தையும் வெறுப்பதா..?

இன்று வரை கடந்ததை சோகங்கலென கொள்வதா..?
அல்லது இனி தான் பெரும் சோகமெனில்
இன்று வரை அடைந்ததுதான் இன்பமென கொள்வதா..?
இன்பமே துன்பமென கொள்ள தகுந்தெநெநில்
துன்பத்தை நரகமென கொள்வேனா..?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்..??

இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமேனில்
இது வரை தோன்றியிருக்கும் ஒரு சில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ..?

விதியின் விதிப்படி எல்லாமே துன்பமென கொள்வது என் மனமோ..?
எனில் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ...?

விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ..?
மனம் சொல்வதே நாம் செய்வோமெனில் விதி என்பதே மாயமோ..?
விதி என்பதே மாயமெனில் மரணத்தின் கணக்குதான் என்ன..?
மரணத்திற்கு மட்டும்தான் விதி எனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி..?
வேற்றுமைக்கு காரணம் மனிதரெனில் அவரின் உள்ளமும் தானே..?
மனசாட்சி எப்பொழுதும் சரியே எனில்
அதை மீற வழி செய்வது விதி தானே..!
பின், மரணத்தின் கணக்கு மட்டும் விதி என்பதில்லையே..!

என் உணர்வுகள் விதியினாலே வகுக்கப்பட்டதா..?
என் உள்ளத்தில் இருந்து தான் எழுவதா..?
அது விதி தானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ..?
விதியின் பெயரால் பாவம் சேருமோ..?
அதில் அவனுக்கு பங்கும் உண்டோ..?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தால் எனில்
விதி என்பதுதான் என்ன..?

என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே..!
எந்த கேள்விக்கு விடை தேட..?
விடைஉள்ள கேள்விதான் எது..?
எல்லா கேள்விகளுக்கும் விடை இல்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு..?
எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன..??

அப்பா-(உன் பிரிவினில்)

பள்ளிக்கூடத்துக்கு
போக அடம் பிடிச்சப்ப
அடிச்சி போக வைச்ச

கம்மாகரையில
பச்ங்களோட குளிச்சப்ப
விரட்டி விரட்டி அடிச்ச

கிரிக்கெட்
விளையாட போனப்ப
பேட்டை வெட்டி என்னைய எரிய விட்ட

ஊர்
சுத்த போன என்ன
வெயில்ல முட்டி போட வச்ச


வேலை
சரிய செய்யலைனு
முதுகுல குச்சியால கோடு போட்ட

எல்லம்

அப்ப வலிக்கல
இப்ப வலிக்குது
உன்ன பிரிஞ்ச பிறகு(உன் பிரிவினில்)

விடுமுறை நாள் கல்லூரி........

இசை இல்லாமலே
இனிதாய் பாடும்
பறவைகள் .....

தென்றல் வந்து
துரத்த இலக்குஇன்றி
எதையோ தேடி
உதிர்ந்த இலைகள்....

ஆசிரியர் மேஜையில்
அமர்ந்தபடி நெல்லிகாவை
எப்படி சாப்பிடுவது என்று
பாடம் எடுத்து
கொண்டு இருக்கிறது
அவ்வபோது கல்லடிக்கு
தப்பும் அணில்கள்...

விடுமுறை என்றாலும்
மூன்று நொடிகளுக்கு
ஒரு துளி என்ற
விதிமுறை மாறாமல்
கசிந்து கொண்டு
இருக்கிறது ஓர் குடிநீர்
குழாயின் கைபாகம்...

மண் மீது
தேங்கிய மழை
நீரால் தாகம்
தீர்த்து கொண்டு
இருக்கிறது
ஓர் காகம்...

எப்போதும் செடிகளின்
இடையே பயணிக்கும்
ரயில் பூச்சி ஒன்று
சுதந்திரமாய் கடந்து
கொண்டு இருக்கிறது
ஓர் நடைபாதையை....

ஆள் இல்லா
வகுப்பு அறைகளை
ஆக்கரமித்து
கொண்டு இருக்கிறது
ஓர் அடர்ந்த அமைதி..

தஞ்சையில்...தலைக் கவிழ்ந்தேன் ..

தஞ்சை
பெரிய கோயிலை - என்னுடன்
சுற்றினான் ஒரு வெள்ளையன்

அவன்
எந்நாடு என்று நானறியா - இருந்தும்
என்னாட்டுக் கலை கண்டு
வாய்ப்பிளந்த போது
எனக்குள்
ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ...

வானுயர்ந்த கோபுரம் போல்
என்னாடே உயர்ந்தது என்று
தலைநிமிர்ந்து திரும்பினேன் ...

கோயில் தலைவாசலில் - அந்த
அந்நியனைச் சுற்றி ஒரு எம்மக்கள்
இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ...

சற்று முன்
தலைக்கேறிய தலைக்கணத்தில்
தலைக் கவிழ்ந்து நடந்தேன் ...

ஒர்
ஏழை இந்தியனாக
ஏழ்மை கேள்விகளுக்கு
விடைத் தேடி ... !!!

மறக்க நினைக்கிறேன்.........

இமைக்க மறுக்கும் என் இமைகளுக்கு
எப்படி புரியவைப்பேன்
கண்ணுக்கு எட்டும் தொலைவில் ,
நீ இல்லை என்பதை !!
என் துயிலைக் கெடுக்கும்
கனவுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன்
நினைவுகளில் தொலைத்ததை
கனவுகளில் மீட்க முடியாதென்பதை !!!
நீ பேசிய வார்த்தைகளை
சேகரித்த செவிகளுக்கு
எப்படி உணர்த்துவேன்
அவை தொலைந்து போன சொற்கள் என ?!!
துடித்து கொண்டே இருக்கும்
என் இதயத்திற்கு
எங்ஞனம் கூறுவேன்
அதன் ஆயுள்காலம் முடிந்து விட்டது என்பதை !!
நிகழ்வுகளை மறக்க நினைக்கிறேன்
இவைகளோ மறப்பதை மறுக்க நினைக்கிறதே !!

அவள் புனிதமானவள்

காதலித்துப்பார் கவிதை வரும்
என்றார்கள்.........!
யாரைக் காதலிக்கவேண்டுமென்று சொல்லவில்லை
அதனால் நான் கவிதையைக் காதலித்தேன்!
கவிதையும் வந்தது அதற்குமேல்
அவள் மேல் காதலும் வந்தது..........!
என்னவளைக் குறை கூறாதீர்
தாங்கமாட்டேன் ...........!
என்னைக் குறை கூறுங்கள்
திருத்தியபடியே.............
என் காதலை உயத்திக்கொள்கிறேன்!
ஏனனில் அவள் புனிதமானவள்.......!

என் முதல் ஹீரோ

சிறுவயது முதல்
என் சினிமா ஹீரோ
நீதான்

எதையும் செய்தாய்
எனக்காக‌
என் சிரிப்பை
காணும் நொடிக்க்காக‌

உன்னோடு நான்
உலகையே
சுற்றினாலும்
அடுத்த் ரவுண்டும்
அலுக்காமல்
கூட்டிச்செல்வாய்

சக்கரை இனிமையாக‌
நீ விளக்கும் கற்பனை
உலகை இனிமையாக்கி
எனக்கு தரும் விற்பனை

என் முதுகெலும்பு
நிமிர்ந்த்ததும்
மிதிவண்டி
நக்ர்ந்ததும்
உன்னால் தானே

ஆலமரம் ஆயிரம்
விழிதிருக்கலாம்..
உன்க்கு நான்
விழாமல் நிறுத்த

என் கடமையை
மறந்தாலும்
நீ கண்டிப்பாக‌
உதவி கேள் ..

தேர்வுகள் எத்தனை
கடந்து வந்தாலும்
தந்தை சொல் தான்
மந்திரம் எனக்கு.

அப்பா!!

நான் உடுத்திய புதுத்துணி
நான் ஒட்டிய சைக்கிள்
நான் வெடித்த பட்டாசு
நான் உண்ட அறுசுவை உணவு
நான் கொண்ட தொப்பை
எதுவுமில்லை உன் உழைப்பின்
வியர்வை இல்லையெனில்...

நான் கற்ற கல்வி
நான் வாங்கிய இஞ்சினியரிங் பட்டம்
நான் கொண்டிருக்கும் பதவி
எதுவுமில்லை உன் மகனைப் பற்றிய
கனவு உனக்கு இல்லையெனில்..

நீ கஷ்டப்பட்டு உழைத்து
என்னை கஷ்டபட விடாமலேயே
வாழ வைத்தாய்

நீ உதிரம் சிந்தி உழைத்து
என்னை வியர்வை கூட சிந்தவிடாமல் செய்தாய்

நான் உயர்வதற்காக நீ
எத்தனை முறை குனிந்தாயோ ??

உன் வரம்பிற்கு மீறி உழைத்து என்னை
என் தகுதிக்கு மீறி உயர்த்தி விட்டாய்
ஐயகோ! இந்தக்கடனை
எத்தனை EMI -களில் அடைக்கப் போகிறேனோ?

நான் உறங்கியது பஞ்சு மெத்தையில் அல்ல
உன் உழைப்பின் மொத்தத்தில்


உன்னிடம் பொருட்செல்வம் இல்லாமலிருந்த பொழுதும்
உனது நம்பிக்கையை வீடு முழுவதும் உலாவ விட்டாய்,

அந்த நம்பிக்கையினால் நீ எமனுக்கே டாட்டா சொன்னவன் ஆயிற்றே !!!

நீ எமனை மரண வாசலில் சந்தித்த பொழுது
அவனுக்கு தெரிந்திருக்கிறது உன்னை பறித்துச்சென்றால்
அவனுக்கது நீங்கா பழியைத் தருமென,
அதனால் தான் அவன் வெறுங்கையுடன் திரும்பி சென்று விட்டான்..

உன் மகனைப் பற்றி கொண்ட கனவுக் கோட்டையை மெய்யாக்க
நீ கட்டிய நிஜக்கோட்டையை இழந்தாய்

உன் நிஜக்கோட்டையை திருப்பிக் கொடுத்தால்
எனது கடன் சற்று குறையுமோ??

உன் மகனைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொண்டாய்
கோபப்பட்டேன் , பிறகு உணர்ந்து கொண்டேன்
உன் மகனைப் பற்றி நீ பெருமை கூறாவிடில்
பிறகு வேறு யார் கூறுவது??

நல்ல தந்தையாய் உன் கடமையை முடித்து
நற்பெயர் பெற்றுக்கொண்டாய்
நல்ல தமயனாய் என் கடமையை நான் செய்ய
இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

உன் தந்தை உனக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை
ஆனாலும் உன் தந்தையை உன்னால் பெருமை கொள்ள செய்தாய்
எனக்கோ நீ அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தாய்
எனவே உன் தந்தையின் பெருமையை விட அதிகமான
பெருமையை உனக்கு சமர்ப்பிக்க பயணித்துக் கொண்டிருக்கிறேன்.....

ம‌றையாத‌ நினைவுகள்..............

நிமிட‌ங்களை க‌ட‌க்க
நிக‌ழ் கால‌த்தையும்
கடந்த காலத்தையும்
துணைக்க‌ழைக்கிறேன்!
இமைகளை இணைத்து
ந‌க‌ங்க‌ளை இரையாக்குகிறேன்!
பதிவுகள் எல்லாம் அழிக்கப்பட்டதாய்
கோரிக்கைகளை மறுத்தனுப்புகிறது
என் ஞாபகக் குறிப்பேடு!

துரோகியாவ‌தற்கு முன்
தோழியாய் இருந்த‌வ‌ளின்
பாத‌ப்ப‌திவுக‌ளை ப‌ரிசோதிக்கிறேன்!
பாத‌க‌ம் எதுவும் தென்ப‌ட‌வில்லை!

இடையினில் எப்படி?

இர‌வின் நடுநிசியில்
புற‌க்க‌ண் மூடி
அக‌க்க‌ண் விழிக்கும்
த‌ருண‌த்தில்
விம்முத‌லோடு
விழிக‌ட‌க்கிற‌து
இருதுளி க‌ண்ணீர்!
நட்பின் துரோக‌மாய்
சுயத்தின் இழித்துரைப்பாய்
நற்பண்பின் புற‌க்க‌ணிப்பாய்.....

இப்ப‌டி எல்லாமும்
செய்திருப்பினும்
"க‌டைசியாய் பார்க்கணும்"
ம‌ந்திர‌ச் சொல்லாய்
ம‌ன‌தை பிசைந்தது!

பெயர் கேட்ட‌ மாத்திரத்தில்
கொந்த‌ளித்த‌ உண‌ர்வுக‌ள்
அடுத்த‌ வார்த்தையில்
அப்படியே அடங்கின!
'அய்யோ! என்னவாயிற்று!'
கால்கள் தானே அவ்விடம் நாடின!

எப்போது அவ‌ளை
கடைசியாய் பார்த்த‌து?
நினைவில் இல்லை ‍- ஆனால்
நிச்ச‌ய‌மாய் அவள் இப்ப‌டியில்லை!

வானாளின் இறுதியை
தொட‌ப் போகும் அவ‌ச‌ர‌த்திலும்
அவ‌ள் முகம் மட்டும் அதே
ப‌வுர்ண‌மி பொலிவில்!

உடலோ வேத‌னைக‌ள்
வாட்டிய‌து போக‌
வ‌றுமை தீண்டிய‌து போக‌
மீதியாய் ஏதுமில்லை!

'வயதுக் கோளாரில் வந்தவினை'
என் வயோதிக மனது
விரக்தியாய் சொன்னது!

க‌ண‌வ‌ன் கைகுழ‌ந்தை
இன்னும் சில‌பேர்
சூழ‌யிருந்தும்
ந‌ட்பாய் நான் ம‌ட்டும்!

"வ‌ந்துட்டியா?வரமாட்டியோன்னு..."

"என்னடி நீ!வ‌ராம‌ இருப்பேனா?"

"நான் இன்ன‌மும் அப்படியே
தானா உன‌க்குள்ளே?"

"சரி!தூங்கு!ச‌ரியாயிடும்"

ஆதரவாய் தலை தடவினேன்

"சரியாகுமா?"
ச‌லிப்பாய் உத‌ட்டை பிதுக்கினாள்

நடுங்கும் குரலில் சன்னமாய்
"குழந்தை தான் பாவ‌ம்!"

இன்னும் சில நிமிட‌ங்க‌ளில் .....
செவிலிப் பெண்
சைகையில் சொல்லிப் போனாள்!

எம‌னை எதிர்க்கும் ஆவேச‌ம்
வ‌ந்த‌தென‌க்கு!
க‌ண்ணுக்கு தெரிந்தால் தானே!
விழிவ‌ழி பிரிந்த‌து உயிர்!
நாகரீகம் கருதி இதுவரை
அட‌க்கிய‌ க‌ண்ணீர்
க‌த‌ற‌லாய் வ‌ந்த‌து!

எல்லார் கை மாறியும்
எதிர்பார்த்த அணைப்பு கிட்டாமல்
அலறிய குழந்தையை
அனிச்சையாய் தூக்கினேன்
"அம்மாட்ட போக‌னும்!"
மழலை இருமுறை சொன்னதும்
என்னுள் செவியுணர்
க‌ருவிக‌ளனைத்தும் செத்துப்போயின‌!

ம‌ர‌ண‌ம‌டைவ‌தை பார்ப்ப‌து
ம‌ர‌ண‌த்தை விட‌வும்

அம்மா அழகான அர்த்தம்..!!!

அம்மா..!!
நான் முதல் முதல் உச்சரித்த வார்த்தை..!!
கடவுளின் மறுவுருவம்..!!
கருவறையில் கண தூரம் சுமந்தவள்..!!
கடவுளிடம் பிடிக்காதது இது மட்டும்தான்..??
உன்னை வருத்தி என்னை இந்த உலகத்திற்கு தந்திருக்கிறாரே..!!!
இந்த உலகத்தில் நீ வாழும் காலம் வரை
நானும் வாழ வேண்டும்..!!
உன்னை பிரிந்து வாழும் ஒரு நிமிடம் கூட
இந்த உலகத்தில் வேண்டாம்..!!!
உலக அதிசயங்களில் உந்தன் பெயர் இடம்பெறவில்லை..!!
கடவுளின் பெயர்கள் அந்த வரிசையில் இடம் பெற முடியாதே..!!
கவிதை என்று எதையெல்லாமோ எழுதி இருக்கிறேன்..!!
"அம்மா" என்னும் வார்த்தைக்கு இணையான
கவிதை எங்கு உண்டு??

தாய் ...

ஏதோ ஒரு இரைச்சல் --
இனம் புரியா கலவரம் என்னுள் வெடிக்கிறது.
வேற்று கிரகத்தில் வீழ்ந்திட்டேன்
விழிநீரின்றி அழுதிட்டேன்.
அடி வயிறு குமுறல் கேட்டு
ஆனந்தப்படும் ஜீவன்கள்...
என்னுலகத்தில் கண்ட இன்பம்
எப்போது காண்பேனோ?


இருள் உலகத்தின் ஈரைந்து கால
ராஜா நான்.
விழியோ! செவியோ! வேலை கொண்ட வேளை இல்லை.


நாழிகைக்கு உட்பட்ட பொழுதில் உலக வளம்
நிகழ்த்திக்காட்டும் நிகரில்லா வீரன் நான்
நிகராக சொல்வதற்கு நிழல் கூட எனக்கில்லை.


அடியேன் மட்டும் இன்புற்றிருக்க
ஆண்டவன் ஈன்ற அற்புத உலகம்.
என்னுலகத்தில் நான் மச்சாவதாரம்
ஓய்ச்சல் இல்ல நீச்சல் .
உதடுகள் கூட உயராமல் ஊட்டச்சத்து
உடல் வந்து சேரும்.


ஆதாம் உடையில் நானிருந்தும்
அக்னியோ, வருணனோ, என்னை
அச்சப்படுத்தியதில்லை


பத்து திங்கள் பவனி வந்த என்னை
கத்தி முனையில் கிரகம் கடத்தி விட்டனர்
வெண்ணிற ஆடை இட்ட வஞ்சகர்கள்.


என்றாலும் நெஞ்சார்ந்த நன்றி
இத்தனை காலம் நான் ஆட்சி செய்த
பவனியை மேனியாய் தாங்கிய
அன்னையை காண அச்சாரமிட்டதற்கு.....


தாய் எனும் உலகிருந்து வந்த
செய் எனும் புது வாசி நான்,
ஏன் அலறல் கேட்டு
ஆனந்தபடுவோர் சுற்றம் நிற்க
என் அசைவுகள் அனைத்திலும்
ஆனந்தபடுகிறாள்
ஏன் அகிலம் சுமந்த அரசி
அம்மா......!!!!!!!

நான் கண்ட முதல் அதிசயம்...

என் அன்பு அம்மா!!!
உன்
கர்ப்ப நிலத்தில் விதைக்கப்பட்டு
உதிரத்தில் ஊறிப்போய்
வெறும் தேகப் பையில்...

உன்
உயிரின் ஒரு துளியை
நிரப்பிக் கொண்டு...

உன்
கனவு மூட்டையின்
ஒரு கனவாய்...

உன்
தொப்புள் கொடியை
வேராய்ப் பிடித்துக் கொண்டு...

ஜனனத்தின் கதவைத் திறந்து
ஜகத்தின் கருங் குழிக்குள்

ஒளிந்துக்கிடக்கும்
மரண விளக்குக்கு
திரித் தூண்ட
வந்த மனிதர்களுள்
நானும் ஒருவனாய்....

விம்மி அழுதுக் கொண்டே
உன்னிலிருந்து
நழுவி விழுந்ததும்
ஆறுதலாய் இருந்தது
உன் புன்னகைதான்....

உன் முகம் தான்
நான் கண்ட முதல் அதிசயம்....

அன்பு அம்மா.........

உன் அருகில் நான் இல்லாவிட்டாலும்
தினமும் உனக்கு குளிப்பாட்டி அழகு பார்க்காவிட்டாலும்
இரவு நிலாச்சோறு ஊட்டாவிட்டாலும்
தொட்டில்லாட்டி தூங்கவைக்காவிட்டாலும்

என் நினைவுகள் என்றும் உன்னை சுற்றியே
என் விடியலிலும் இரவிலும் நீ என்னுடனே
என் வாழ்வின் அர்த்தமும் நீயே
நான் காணும் உலகம் முழுதும் உன் பிம்பங்களே....

இருக்குமோ ..??!!!!

அதிர்ந்துபோய் இருக்கிறேன்

அதிகாலையிலிருந்து நடப்பதெல்லாம்
அதிசயமாகவே இருக்கிறது

அவதியில் தொடங்கி
அசதியில் முடியும் நாள் இன்று ...
அற்புதமாய்த் தொடங்கி
அமர்களமாய் நடந்துகொண்டிருக்கிறது

ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேனா நான் ???

சரியான அளவில் எடைகாட்டிய
நியாயவிலைக்கடைத் தராசு

வரும்வரைக் காத்திருந்து
அலுவலக வாசலில் இறக்கிச்
சென்ற நகரப் பேருந்து

முகம்சுளிக்காமல் இருக்கும்
இடம்வரை வந்து
சில்லரை தந்த நடத்துனர்

தவறாய் சாலைகடந்த என்னை
புன்சிரிப்போடு கடந்துபோன
‘ஆட்டோ’ ஓட்டுனர்

வரும்வாகனம் நிறுத்தி என்னைக்
கடந்துபோகச் சொன்ன
போக்குவரத்துக் காவலர்

தாமதமத்தால் பயந்து
ஒதுங்கிய என்னை
தானே அழைத்து
வணக்கம் சொன்ன மேலாளர்

இடைவேளையில்
உணவகத்தில் பணம்கொடுத்த
பக்கமிருந்த கருமி நண்பன்

மாலையில் மேசைமேல்
காத்திருந்தது எதிரேபாராத
பதவி உயர்வு உத்தரவும்,
நெடு நாள் காத்திருந்த
கடனொப்புதல் ஆணையும்,

அதிர்ந்துபோய் இருக்கிறேன்....

என்ன ஆயிற்று எனக்கு ??
எப்படி இதெல்லாம் !!

நெற்றியை அழுத்தியபடி
உறைந்துபோய் இருக்கிறேன் ...

அப்போதுதான் கவனிக்கிறேன் ....
எனது மோதிர விரலில்
சுற்றியபடி இருந்தது
அவளின் உதிர்ந்த தலைமுடி ஒன்று ...

ஒருவேளை...............

இருக்குமோ !!!!!!!????????

Tuesday, January 26, 2010

எங்கே தொலைத்தோம்..........

**"எங்கே தொலைத்தோம்?" **
அந்தப் பழைய புகைப்படத்தில்
சிரிக்கும் சிறுவர்கள் நாம்தானே?
எங்கே தொலைத்தோம்
அந்த இன்முகத்தை?

எங்கே போயின
சிரிக்கும் கண்களும்
சாந்தம் தவழும் முகமும்
அந்த அப்பவித்தனமும்?

படிக்கப்போன இடத்தில்
பள்ளியில் தொலைத்தோமா?
கல்லூரி களவாடிக்கொண்டதா?
எப்படி வந்தன இத்தனை
இறுக்கமும், சுருக்கமும்?

அறிவு வளர வளர
கள்ளம் வந்து
கண்களில் நிறைந்ததா?

காலச்சாட்டை முதுகிலும், முகத்திலும்
இழுத்த இழுப்பில் இறுகிப் போனதா?

அப்பா, அம்மாவிற்காக ஒன்று,
மனைவி, குழந்தைகளுக்காக ஒன்று,
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக ஒன்று,
பணியிடத்திற்கென்று ஒன்று,
என்று முகமூடிகளை அணிந்தணிந்து
அந்த முகமூடிகளே முகங்களாக
முற்றிலும் மாறிவிட்டனவா?

என்ன விலை கொடுத்தால்
திரும்பவும் கிடைக்கும்
அந்தப் பழைய முகம்?
காதலுக்கு கண்ணீர் அஞ்சலி
சிரித்து பேசி
சிணுங்கியதும்
சில்லென துவங்கிய என் காதல்
சிறகிழந்த பறவையாய் இன்று!

என் வாழ்வில் ஆச்சரிய குறியாய் இருந்து
பின் கேள்வி குறியாய் மாறிய காதலுக்கு
நேற்று வைத்து விட்டேன் முற்று புள்ளி.

காதல் மாயையா இல்லை
எது காதல் என்ற அறியாமையா?

காதலை கொன்ற
கொலை காரி அவள்

இ.பி.கோ வில் இடமில்லையாம்
இரக்க மற்றவளை தண்டிக்க!!

கோபம் இல்லை
பாவமாய் இருக்கிறது அவளை பார்த்தால்…

இதயம் இல்லாதவள் அவள்
இரக்கத்தை எதிர்பார்த்தது என் தவறு

மனிதாபிமானம் உள்ளவன் நான்
மன்னித்து விடுகிறேன் அவளை

வாழ்த்துகிறேன் அவள் வாழ்வு சிறக்க!!


தோல்விதான் எனினும்
சோகமில் லை
சுமை நீங்கியதால்
சுகமே

நேற்று அகால மரணமடைந்த
என் காதலுக்கு
கண்ணீர் அஞ்சலி

என் கடந்த காதல் பயணம்
கடும் தோல்வியில் முடிந்தது
அடுத்த பயணம்
அபார வெற்றி பெற வேண்டிகொள்ளுங்கள்
அவரவர் இஷ்ட தெய்வங்களை

இப்படிக்கு,
நான்...

பிரிவின் கணங்கள்.....

காற்றில் அறுந்த மேக
துண்டுகளை போல்
உனக்கும் எனக்குமான
உறவை உடைத்து
செல்கிறது காலம்.....

கோடை வெயிலில் தெறித்து
கிடக்கும் நெல் மணியை
கடத்தி செல்லும் ஊர் குருவியாய்
நம் நினைவை
கொத்தி செல்கிறது மனது..

பசி கொண்ட யானையாய்
கொன்று தின்கிறது
மௌனம்
நமக்கான மணி துளிகளை.....

இல்லாமல் இருக்கும்
கடவுளை போல்
நாம் வாழ்ந்த பக்கங்களை
மற்றும் ஓர் முறை
வாசித்து காட்டுகிறது காதல்.....

ஒற்றை கொம்பில் தொங்கி
நிற்கும் தேன் கூடாய்
பெருகும் கண்ணீரோடு
பரிதவித்து நிற்கிறேன் நான்...

சொல்லாத காதல் ...

உன்மீதான காதல்
கவிதையாய் கசியுமேயானால்
ஒருவேளையது
புன்னகையாகவோ
கண்ணீராகவோ
கோபமாகவோ
பிரசவிக்ககூடும் ..
நீ கொட்டிதீர்க்கும்
மௌனத்தை காட்டிலும்
ரகசியமானதொரு செய்தியை
கொண்டுபோய் சேர்க்கலாம்
சில தருணங்களில்
காலியாக நிரப்பபட்ட காகிதங்கள் ..
எழுதமறந்த கவிதையாக
காற்றோடு கலக்கட்டும்
எனது காதலும்
உனது மௌனமும் .

என்னவளைக் காண……..

மனதில் அவள் முகம்
பரவசத்தில் பூரித்தது
என்னோடு இயற்கையும்
புதுத்தோரணம் வழியெலாம் !

சில மரங்களில் பல நிறங்கள்
பல மலர்களில் புது நிறங்கள் !!

பசும்பட்டிலாடும் மலைத்தோழி
சிந்தும் புன்னகையோ நீர்வீழ்ச்சி?
எந்த பிஞ்சுகள் கூட்டம்
பறக்க விட்டது இப்பஞ்சுமேக பட்டங்களை?
எந்த வோவியன் தெளித்தது
இப்பள்ளத்தில் படரும் பசு(ம்)மையை?
பஞ்சபூத இரசம் விதைத்து
அழகை பிரசவித்த தாயவள் யார்?

இளங்குளிர் தென்றலில்
என்னுணர்வு நனைந்தது
செங்கதிரின் ஓரப்பார்வையில்
என்னுணர்வு கிளர்ந்தது

மனங்கொண்ட என்னவள் முகங்காண
மரவிடுக்கில் கிரணங்கள் பாய்ந்தது
இளஞ்சூட்டை ஒற்றியெடுக்க
புது நிழற்படையும் பிறந்தது

சலனமற்ற மனம்
மவுனத்தில் கலந்த பேரானந்தம் !

சில மரங்களில் இளவுயிர்கள் !
பல மலர்களில் புது மணங்கள் !

என் மனைவியைக் காண விரைகிறேன்

அம்மா அழகான அர்த்தம்....

அம்மா..!!
நான் முதல் முதல் உச்சரித்த வார்த்தை..!!
கடவுளின் மறுவுருவம்..!!
கருவறையில் கண தூரம் சுமந்தவள்..!!
கடவுளிடம் பிடிக்காதது இது மட்டும்தான்..??
உன்னை வருத்தி என்னை இந்த உலகத்திற்கு தந்திருக்கிறாரே..!!!
இந்த உலகத்தில் நீ வாழும் காலம் வரை
நானும் வாழ வேண்டும்..!!
உன்னை பிரிந்து வாழும் ஒரு நிமிடம் கூட
இந்த உலகத்தில் வேண்டாம்..!!!
உலக அதிசயங்களில் உந்தன் பெயர் இடம்பெறவில்லை..!!
கடவுளின் பெயர்கள் அந்த வரிசையில் இடம் பெற முடியாதே..!!
கவிதை என்று எதையெல்லாமோ எழுதி இருக்கிறேன்..!!
"அம்மா" என்னும் வார்த்தைக்கு இணையான
கவிதை எங்கு உண்டு??

விடை தேடும் கேள்விகள்...

என் வாழ்கை கணக்கில் நான் கடந்துவிட்டேன் சில பக்கங்கள்..
சில பக்கங்கள் கோலாகலமாய்..
சில பக்கங்கள் அலங்கோலமாய்.!

கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;
பின் பக்கத்தை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா..?
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கத்தையும் வெறுப்பதா..?

இன்று வரை கடந்ததை சோகங்கலென கொள்வதா..?
அல்லது இனி தான் பெரும் சோகமெனில்
இன்று வரை அடைந்ததுதான் இன்பமென கொள்வதா..?
இன்பமே துன்பமென கொள்ள தகுந்தெநெநில்
துன்பத்தை நரகமென கொள்வேனா..?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்..??

இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமேனில்
இது வரை தோன்றியிருக்கும் ஒரு சில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ..?

விதியின் விதிப்படி எல்லாமே துன்பமென கொள்வது என் மனமோ..?
எனில் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ...?

விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ..?
மனம் சொல்வதே நாம் செய்வோமெனில் விதி என்பதே மாயமோ..?
விதி என்பதே மாயமெனில் மரணத்தின் கணக்குதான் என்ன..?
மரணத்திற்கு மட்டும்தான் விதி எனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி..?
வேற்றுமைக்கு காரணம் மனிதரெனில் அவரின் உள்ளமும் தானே..?
மனசாட்சி எப்பொழுதும் சரியே எனில்
அதை மீற வழி செய்வது விதி தானே..!
பின், மரணத்தின் கணக்கு மட்டும் விதி என்பதில்லையே..!

என் உணர்வுகள் விதியினாலே வகுக்கப்பட்டதா..?
என் உள்ளத்தில் இருந்து தான் எழுவதா..?
அது விதி தானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ..?
விதியின் பெயரால் பாவம் சேருமோ..?
அதில் அவனுக்கு பங்கும் உண்டோ..?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தால் எனில்
விதி என்பதுதான் என்ன..?

என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே..!
எந்த கேள்விக்கு விடை தேட..?
விடைஉள்ள கேள்விதான் எது..?
எல்லா கேள்விகளுக்கும் விடை இல்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு..?
எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன..?

என்னவள் என்னிடம் காதலை சொன்னாள்...

என்னவள்
என்னிடம் காதலை சொன்னாள்!!!
அவள் காதலை!!!
வேறு ஒருவனை காதலிக்கிறேன் என்று!!!
நான் சிரிக்க தெரியாமல் சிரித்தேன்!!!
நடிக்க தெரியாமல் நடித்தேன்!!!
நான் நடிப்பதை அவள் கண்டுபிடித்துவிடுவாள் என்று பயந்தேன்!!!
அந்த ஒரு நொடியில் என் கண்களுக்கும்,இதயத்திற்கும்
ஒரு யுத்தமே நடத்தி விட்டேன்!!!
என் கண்களில் கண்ணீர் வர கூடாது என்று!!!
நான் அழுது விடு வேனோ என்ற துடித்தேன்!!!
காதலிப்பதால் நான் அழகுச் சிலை ஆக தெரிகிறேன் என்று சொன்னாள்!!!
காதலில் தோற்றதால் இப்போது
நான் நடை பிணமாகத் தெரிகிறேன்!!!

நட்புக்கல்ல...

பழகிய நெஞ்சங்கள்;
பிரிகின்ற நேரங்கள்;
எண்ணத்தில் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரங்கள்;

எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் சிரித்தோம்!

சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எதனை மிடுக்கு!

சிறு சிறு கோவங்கள்;
சிறு சிறு கர்வங்கள்;
சிறு சிறு சண்டைகள்;
-உறவாடினோம்...

மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்

கரும்பான நட்பு;
குறும்பான காலம்;
கலங்காத நினைவு..

சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்

சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கல்
சுவடாய் அமையும் எதிர்காலத்தில்!

புகைப்படமும் கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
புத்தகத்தில் மட்டுமல்ல எங்கள் நெஞ்சத்திலும்..

கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
பிரிவான நேரம்..!

என்றாவதொருநாள் நண்பனை எதிர்கான
கேட்ட குரலோ! என நெஞ்சம் விழி காண
நண்பனே! என உள்ளம் உறவாட
கண்டு; பேசி; சில நேரங்கள் பின்னர்
மீண்டும் அவரவர் பாதையில்!

குழந்தையென மாற நெஞ்சம் கேட்கும்
நண்பனின் தொலை கண்கள் எதிர்நோக்கும்
இக்காலம் இனி என்றும் வருமோ என விழிகளில் நீர் தேங்கும்
இதோ பிரியும் நேரம்!
நண்பர்களுக்கு மட்டுமே
நட்புக்கல்ல...

பிரியவும் நினைத்தாயோ தோழியே...!

தோழியே!
உன் முகம் என் கண்ணிலும்
உன் நினைவென் நெஞ்சிலும்
சுமப்பதினால் தான்
இன்னமும் சொல்கிறேன்
நான் உன்னை பிரியவில்லை என்று....

கண்மூடி காண்கிறேன்
நம் பள்ளி நாட்களை...
கண்களை திறந்ததும் ஏனோ தெரியவில்லை
என் சுவாசக் காற்றில் படிந்து விட்ட உன் நினைவுகள்
கண்களினோரம் தன் ஈரப் பதத்தினை சின்னமிட்டது..

மனதில் எதோ ஒரு கனம்
அதை எப்படி சொல்வேன் உனக்கு...?
பிரிந்திடவும் நினைத்தாயோ என்னை...?

பள்ளி கால முதல் தோழி நீ...!
என் மனதில் பட்ட முதல் சிநேகம் நீ..!
உன்னுடன் நகர்ந்திட்ட அந்த நாட்கள்..
நான் எப்படி திரும்ப பெற்றிடுவேன்...?

இன்முகமாய் நான் கண்ட உன் முகம்
உன் நட்பினிலே நான் கண்ட உன் உள்ளம்
இன்று...சற்று தள்ளி நின்று என்னை பார்ப்பது ஏனோ..?

விலகியிருப்பதென சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல..
அன்பு தோழியே..!
அது என் இதய துடிப்பினில் நீ ஏற்றிவிட்ட கூறிய வாள்
எடுக்கவும் முடியவில்லை....
வலியினை பொறுக்கவும் முடியவில்லை...

என் ஹீரோ.....

சிறுவயது முதல்
என் சினிமா ஹீரோ
நீதான்

எதையும் செய்தாய்
எனக்காக‌
என் சிரிப்பை
காணும் நொடிக்க்காக‌

உன்னோடு நான்
உலகையே
சுற்றினாலும்
அடுத்த் ரவுண்டும்
அலுக்காமல்
கூட்டிச்செல்வாய்

சக்கரை இனிமையாக‌
நீ விளக்கும் கற்பனை
உலகை இனிமையாக்கி
எனக்கு தரும் விற்பனை

என் முதுகெலும்பு
நிமிர்ந்த்ததும்
மிதிவண்டி
நக்ர்ந்ததும்
உன்னால் தானே

ஆலமரம் ஆயிரம்
விழிதிருக்கலாம்..
உன்க்கு நான்
விழாமல் நிறுத்த

என் கடமையை
மறந்தாலும்
நீ கண்டிப்பாக‌
உதவி கேள் ..

தேர்வுகள் எத்தனை
கடந்து வந்தாலும்
தந்தை சொல் தான்
மந்திரம் எனக்கு.

மறக்கவில்லை மன்னித்துவிடு......

கரம் பிடிக்க காத்திருந்த என்னிடம் இனி நாம்
மணமுடிக்க முடியாது என்றாய்
கண்ணீரில் அஸ்த்தமிக்கும் முன் உன் கண்கள்
"நீ இறந்துவிடு" என்றோர் வரம் வீசி மறைந்தது
நீயோ கண் மூடி சபித்தாய்
"என்னை மறந்துவிடு" என்று

காதலி தன் கடைக்கண்ணசைவுக்கு கல்லையும் கரைப்பவன்
கடைசி கண்ணசைவுக்கு தன்னையே உருக்குவான்
நம்மைப் பிரித்திடலாம் என எண்ணினாய் போலும்

விழியிலே நுழைந்து
மனதிலே திரிந்து
உயிரிலே கலந்துள்ளாய்

ஒற்றை வரியில் அணு அணுவாய் சிதைத்தாய்
ஒவ்வொரு அணுவின் கடைசி சுற்றுப்பாதை வரை சுழன்று எனை வதைத்தாய்

உன்னை பிரிக்க நினைத்த ஒவ்வொரு முறையும்
இன்னும் ஒரு ஹிரோஷிமாவாய் என் உடல் மரித்தது - உயிர் பிரியாமல்

மறக்கவில்லை மன்னித்துவிடு

நினைவுகள்........

ஏழு ஜென்ம ஆசைகள் ஏன்?

ஒரே ஒரு ஜனனத்தில் !

விதிமுறைகள் பல விளக்கப்பட்டு

வழிமுறைகளே இல்லா நியாயங்கள்!

கசக்கப்பட்ட உள்ளங்களால் !

கசந்து போன நினைவுகள் !_சோலை

குயிலின் சோகம் கேட்டு ,

சோர்ந்து போன தென்றல்கள் !

விலக்கப்பட்ட விளக்கங்களால் !

முடிந்து போன அத்தியாயங்கள்

புதைக்கப்பட்ட பிறகும்!

சுவாசம் தேடும் உள்ளங்கள்!

அன்புள்ள என் கவிதைக்கு....

அன்புள்ள என் கவிதைக்கு,

உன்மேல் நான் காதல் கொண்டதால்!
ஏடும் எழுதுகோலும் காணிக்கையாய் படைத்து,
வணங்கி உன்னை வரவேற்றேன்.
எனக்கு தரிசனம் தரமறுத்தாய்.

தனிமையில் எதிர்பாராத நேரத்தில்
அணை உடைத்துவரும் வெள்ளம்போல் வந்து
என் மனதை மிதக்கவிட்டு அதிர்ச்சி அளித்தாய்!
அவ்வெள்ளத்தில் நீச்சலடித்து
ஏடும் எழுதுகோலும் எங்கே தேடுவேன்?
முயற்சித்தேன் கைகூடவில்லை.

நான் அசுரனானதால் நீ வரும் நேரம்
உன்னை சிறைப் பிடிக்கவே!
என் ஆயுதான்களாக ஏடும் எழுதுகோலும்
தயாராக என்னுடனே வைத்துப் பழகுகிறேன்.
உன்னை சிறைபிடித்துவிடுவேன் என்பதால்
நீ வராமல் இருந்துவிடாதே!

உன்மேல் நான் கொண்ட காதலினாலே
எப்போதும் நீ என்னுடனே இருக்கவே.
உன்னை கேட்கிறேன்
மனதில் உதித்த நீ என்றும் என்
கனவிலும் துணையிருப்பாய் என!
உன் விருப்பத்தை தெருவிக்க
மீண்டும் வருவாய் என்ற எதிர்பார்ப்புடன்

ஏதோ ஒரு இரைச்சல்......

இனம் புரியா கலவரம் என்னுள் வெடிக்கிறது.
வேற்று கிரகத்தில் வீழ்ந்திட்டேன்
விழிநீரின்றி அழுதிட்டேன்.
அடி வயிறு குமுறல் கேட்டு
ஆனந்தப்படும் ஜீவன்கள்...
என்னுலகத்தில் கண்ட இன்பம்
எப்போது காண்பேனோ?


இருள் உலகத்தின் ஈரைந்து கால
ராஜா நான்.
விழியோ! செவியோ! வேலை கொண்ட வேளை இல்லை.


நாழிகைக்கு உட்பட்ட பொழுதில் உலக வளம்
நிகழ்த்திக்காட்டும் நிகரில்லா வீரன் நான்
நிகராக சொல்வதற்கு நிழல் கூட எனக்கில்லை.


அடியேன் மட்டும் இன்புற்றிருக்க
ஆண்டவன் ஈன்ற அற்புத உலகம்.
என்னுலகத்தில் நான் மச்சாவதாரம்
ஓய்ச்சல் இல்ல நீச்சல் .
உதடுகள் கூட உயராமல் ஊட்டச்சத்து
உடல் வந்து சேரும்.


ஆதாம் உடையில் நானிருந்தும்
அக்னியோ, வருணனோ, என்னை
அச்சப்படுத்தியதில்லை


பத்து திங்கள் பவனி வந்த என்னை
கத்தி முனையில் கிரகம் கடத்தி விட்டனர்
வெண்ணிற ஆடை இட்ட வஞ்சகர்கள்.


என்றாலும் நெஞ்சார்ந்த நன்றி
இத்தனை காலம் நான் ஆட்சி செய்த
பவனியை மேனியாய் தாங்கிய
அன்னையை காண அச்சாரமிட்டதற்கு.....


தாய் எனும் உலகிருந்து வந்த
செய் எனும் புது வாசி நான்,
ஏன் அலறல் கேட்டு
ஆனந்தபடுவோர் சுற்றம் நிற்க
என் அசைவுகள் அனைத்திலும்
ஆனந்தபடுகிறாள்
ஏன் அகிலம் சுமந்த அரசி
அம்மா......!!!!!!!

இயற்கையும்---நானும்

இயற்கையிடம்
ஒரு
கேள்வி..............?

செயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது
இயற்கையா?

இல்லை,
இல்லை
இயல்பாக
இருப்பது மட்டுமே
என்றது
இயற்கை.

உன்னிடம்
இன்னொரு
கேள்வி.........?
செயற்கை என்பது.........

இயல்புக்கு
புறம்பானது
அனைத்தும்
செயற்கையே!

அப்படி என்றால்
செயற்கை என்பது
இயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது தானே!

உன்னிடம்
ஒரே ஒரு
கேள்வி......
என
இயற்கை
என்னைக்
கேட்டது?


“ம்”
என்றேன்
ஆணவத்துடன்.....

நீ
இயற்கையா?
அன்றி
செயற்கையா?

நான்
இயற்கை தானே?
இதில் என்ன
சந்தேகம்?
என்றேன்..........

அப்படி என்றால்
என்னின்
பாஷைகள்
உனக்கு ஏன்
புரியாமல்
போகிறது?

இயற்கையோடு
ஒன்றி
வாழ்ந்த
நீ
மட்டுமே
அதைவிட்டு
தொலைதூரம்
சென்றுவிட்டாய்.
கேட்டால்
ஆறாம் அறிவு
என்கிறாய்...

அந்த
அறிவின்
அடிப்படை
அகத்தின் வழி
நோக்குதல்
தானே!

ஏனோ
அதைவிட்டு விட்டு
ஆழ்கடல்
ஆராய்ச்சிவரை
சென்று
கிடைக்காமல்
அணுவைத்
துளைத்து
அதனுள்ளே
அவனியை
புகுத்த நினைக்கும்
உன்னறிவைக்
கண்டு
நான்
வியக்கிறேன்....
அதே நேரத்தில்

விளைவின்
விபரீதத்தை
உணரமுடியாத
உன் அறிவு
வேடிக்கையாகவும்
இருக்கிறது..........

ஓரறிவு
ஈரறிவு
மூன்றறிவு
உயிரிகள்
கூட
என்னின்
சீற்றத்தை
உணர்ந்து
தற்காத்துக்
கொள்கிறது.

ஆறறிவு
என்று
அகமகிழும்
நீ மட்டுமே
பகுத்தறிவு
என்று
பறைசாற்றுகிறாய்....

தொலைந்து போ!
என்று
உன்னை
தொலைக்கவும்
மனமில்லை......

படைப்பின்
பரிணாமத்தை
மட்டுமே
வைத்துக் கொண்டு
செயற்கையின்
சாயலுக்கு
சான்றாய்
திகழும்
உன்னை
நான் இல்லை
என்பேனா..........?

நீ தான்
நான்
நான் தான்
நீ.

உயிரில்லா வார்த்தைகள்.....

நேரம்
இரண்டை கடந்து
மூன்றை தொட்டுவிட
துணிந்திருந்தது!

நினைவுகளை
பிரேத பரிசோதனை செய்தபடி
எனதறையில் நான் !

பெத்த பாசத்திற்கு
வாய் கிழிய
கத்திகொண்டிருக்கிறாள் அம்மா...
சாப்பிட வா என்று !!!

அவளுக்காய்
எழுந்து சென்று அமர்கிறேன்!

வெள்ளை சோறும்
சாம்பாரும் என
உணவு பரிமாறப்பட்டு இருந்தது!

பிசைந்து கொண்டிருக்கையில்
எதேச்சையாக
அவள் அண்ணனின்
திருமண பத்திரிக்கை மீது
பார்வை விழுகிறது!

பார்வை அதிலே பதிய
நினைவு
தடம் மாறியது!

அவள்
அன்பின் கண்டிப்போடு
எனை நோக்கி கேட்கிறாள்...
"
மணியாச்சுல?
ஏன் இன்னும் சாப்பிடல ?" என்று -
இரண்டாண்டுகளுக்கு முன்
கல்லூரியில்!!!

கடந்த
இரண்டாண்டு கால பிரிவு
பரிவோடு
கறுப்பு வெள்ளையில்
தன் உணவை பரிமாற,

எழுந்து கை கழுவிவிட்டு
மீண்டும்
எனதறையில் முடங்குகிறேன்!

அம்மா
இன்னமும் கத்திகொண்டிருப்பது
செவியில் மட்டும் விழுகிறது!

"காதலியில்லாக் காதலன்"

என்னடா இது!
நமக்குத்தான் காதலியே இல்லையே,
அப்புறம் எப்படிப் பிறக்கிறது
இந்தக் கவிதை மாதிரியெல்லாம்?

நினைத்துக் கொண்டே
பைக்கை நெருங்கினேன்
வருவது கண்டு ஓடிய
குழந்தையின் பயம் அழகு.

வெளியே எடுத்து
உதைக்கும் போது எதிரே
பெட்டிக்கடைப் பெண்ணின்
புன்னகை அழகு.

சென்றது ஆபீஸ் நோக்கி,
போட்டியின் வாலிபர்கள்
பைக்கை முறுக்கியதும்
எழும் சத்தம் அழகு.

சப்வேயைக் கடகும்போது
முன்னால் செல்லும்
பின்னால் உள்ள துப்பட்டா
பறப்பது அழகு.

சிக்னல் இல்லா சந்திப்பு,
நாலா புறமும் வரும்
அவசரத்தில் பிறந்தவர்களின்
முட்டல் அழகு.

சிக்னலில் யூடர்ன்,
போலீஸ்காரர் பிடிப்பாரோ?
பயந்துகொண்டே திரும்பும்
புது பைக் அழகு.

அப்பாடா! சிக்னல் எல்லாம்
கடந்து விட்டேன் என்று
நிம்மதியாய் செல்லும்
அகன்ற சாலை அழகு.

ஆபீஸ் நுழையும்போது
குட்மார்னிங் அண்ணா
சிரிப்போடு சொல்லும்
தோழி அழகு.

ரெண்டும் நல்லாத்தான் இருக்கும்,
நான் செய்ததுதான் சரி
அடித்துக் கொள்ளும் நண்பர்களின்
போட்டி அழகு.

மாலை நேரம் முடிவு
வீட்டிற்கு செல்லப்போகும்
நண்பர்கள் முகத்தில்
உற்சாகம் அழகு.

வெளியே வந்தால்
பைக் சீட்டில் வரைந்த
ஆபாயில் போன்ற
காக்கா எச்சம் அழகு.

அனைவரும் விரைவாய்
வீட்டிற்குப் பறக்க
அதைவிட அவசரமாய்
மங்கும் வானம் அழகு.

செல்லும் வழியில்
கேட்காமலேயே சிகரெட்
எடுத்துவைக்கும் அண்ணாச்சி
கடையில் பரபரப்பு அழகு.

இரவு உணவு மெஸ்ஸில்
உனக்கு தோசதானப்பா?
கேட்கும் ஆயாவின்
சுறுசுறுப்பு அழகு.

தூங்கும் முன் அழைத்து
ஏண்டா போன் பண்ணல?
கேட்கும் அம்மாவின்
பாசம் அழகு.

விளக்கை அணைக்கும் முன்
பவர்கட், ஏற்றி வைத்த
மெழுகுவர்த்தி ஒளியின்
ஆட்டம் அழகு.

அனலுடன் புழுக்கம்
தூங்க முடியாவிட்டாலும்
தேவையில்லாமல் உதித்த
இந்தச் சிந்தனை அழகு.

காதலியே இல்லின்ன!
எதத்தாண்டா காதலிக்கல நீ?
கேட்கும் மனதின்
நக்கல் அழகு.

எல்லாவற்றையும் காதலிக்கிறேன்
பதிலுக்கு காதலிப்பவளைத் தவிர.
யாருமே காதலிக்காத என்
வாழ்க்கை அழகு....

நீ என்பது... நீ மட்டும்தான்...

இன்று உனக்கு பிறந்தநாள்...
அதிகாலை சூரியன் தொடங்கி..
அத்தனையும் அழகாயிருக்கிறது.
.
உனக்காக எழுத அமர்ந்தாலே...
சோகமாய் ஒதுங்கி கொள்கிறது...
என் முந்தைய கவிதைகள்.
.
என் முதல் 18 வருடங்களில்
நீயில்லை...
பின் வந்த மூன்றாண்டுகளில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்..
என் உலகை நிறைத்தவள் நீ.
.
உன் அன்பை
நீ சொன்னதில்லை...
என் அன்பை பற்றியும்..
நீ கேட்டதில்லை...
ஏனெனில் அன்பென்பது...
சொல்லி புரிவதில்லை என...
புரிந்தவள் நீ.
.
உன் கோபம்..
நான் தாங்கியதில்லை...
என் கோபமோ...
உன்னிடம் பலிப்பதேயில்லை.
என் கோபம் கொன்றுபோடும்
குட்டிபிசாசு நீ.
.
தங்கைகள்...
உலகின் குறும்புக்கார தேவதைகள்...
என உணர்த்தியவள் நீ.
.
மௌனம் போர்த்தியிருந்த
என் பாதைகளில்...
இசை வழியவிட்டவள் நீ.
.
யாருடைய உலகையும்
நொடியில் அழகாக்கும்
மிக அழகானவள் நீ.
.
என் கவிதைகளில் வரும்
தேவதைகள் அத்தனையும்...
உன் சாயல் போர்த்தியே உலவுகின்றன..
தேவதைகளின் தேவதை நீ.
.
என்னில் நிரந்தரமாய் தங்கிவிட்ட..
புன்னகை நீ.
நான் எத்தனை எழுதினாலும்...
முடியாத கவிதை நீ..
.
உலக தேவதைகளில்..
தங்க தேவதை நீ...
என் உலகை அழகாக்கும்..
தங்கை தேவதை நீ.

என் அன்பு அம்மா...

உன்
கர்ப்ப நிலத்தில் விதைக்கப்பட்டு
உதிரத்தில் ஊறிப்போய்
வெறும் தேகப் பையில்...

உன்
உயிரின் ஒரு துளியை
நிரப்பிக் கொண்டு...

உன்
கனவு மூட்டையின்
ஒரு கனவாய்...

உன்
தொப்புள் கொடியை
வேராய்ப் பிடித்துக் கொண்டு...

ஜனனத்தின் கதவைத் திறந்து
ஜகத்தின் கருங் குழிக்குள்

ஒளிந்துக்கிடக்கும்
மரண விளக்குக்கு
திரித் தூண்ட
வந்த மனிதர்களுள்
நானும் ஒருவனாய்....

விம்மி அழுதுக் கொண்டே
உன்னிலிருந்து
நழுவி விழுந்ததும்
ஆறுதலாய் இருந்தது
உன் புன்னகைதான்....

உன் முகம் தான்
நான் கண்ட முதல் அதிசயம்....

மெல்லிய நீவல்களை
தந்த உன் விரல்கள்
புன்னகைச் சுரக்கும்
மந்திரக் கோல்கள்
என்று எண்ணி

இறுகப் பற்றிக்கொண்டு
மனிதனாய் வளர்ந்தும்....
உணர்வுகளை புதைத்துக் கொண்டு
ஊமையாய் நிற்கும்
மரம் போல் ஆனேன்-இன்று
ஓய்ந்து கிடக்கும்
உன்னைப் பார்க்கையில்...

உடலில் ஒட்டிக்கிடக்கும்
மிச்ச உயிரையும்
பிழிந்து துளித் துளியாய்
கசியும் உன்
கண்ணீரில் கரைந்து
கொண்டிருக்கிறேன் நான்…..

நீ சோறூட்டி விடும் போது
என் வாயிலிருந்து
தப்பிச் சென்று நாடி
குழியில் சிக்கும் அந்த
ஒரு பருக்கையும்
“எனக்கு பசியாற்றும்”-என்று

உன் வாய்க்கு கொண்டு செல்லும்
அந்த தெய்வீக விரல்களை
மெல்ல பற்றிக் கொண்டு
ஆறுதலாய் சொல்கிறேன்
“உனக்கு நூறாயுள்”என்று…

பொய்யென்றாலும் கூட
இறந்துக் கிடக்கும்
அந்த அழகியக் கைகளை
உயர்த்தி என் கன்னங்கள்
தடவி "உன்ன விட்டுட்டு
போயிடமாட்டேண்டா என்
கண்ணு"என்று நீ சொல்லும்
போது என்னை தூங்க வைத்த
மார் மீது விழுந்து
கதறி அழுவேன்....

அந்த
மரண விளக்கை
அழித்து விடென்று இறைவனுடன்
மன்றாடிக்
கொண்டிருக்கும் போதே...

உன் இதயத் துடிப்புகளை
எதிர் காலம் விழுங்க....

என் தலைக் கோதி
மறித்த உன் கைகளுக்குள்
மீண்டும் குழந்தையாகி.....

விம்மி
அழுகிறேன்....
என் அன்பு அம்மா....!!

அவள் புனிதமானவள்.......

காதலித்துப்பார் கவிதை வரும்
என்றார்கள்.........!
யாரைக் காதலிக்கவேண்டுமென்று சொல்லவில்லை
அதனால் நான் கவிதையைக் காதலித்தேன்!
கவிதையும் வந்தது அதற்குமேல்
அவள் மேல் காதலும் வந்தது..........!
என்னவளைக் குறை கூறாதீர்
தாங்கமாட்டேன் ...........!
என்னைக் குறை கூறுங்கள்
திருத்தியபடியே.............
என் காதலை உயத்திக்கொள்கிறேன்!
ஏனனில் அவள் புனிதமானவள்.......!

அப்பா..........

பள்ளிக்கூடத்துக்கு
போக அடம் பிடிச்சப்ப
அடிச்சி போக வைச்ச

கம்மாகரையில
பச்ங்களோட குளிச்சப்ப
விரட்டி விரட்டி அடிச்ச

கிரிக்கெட்
விளையாட போனப்ப
பேட்டை வெட்டி என்னைய எரிய விட்ட

ஊர்
சுத்த போன என்ன
வெயில்ல முட்டி போட வச்ச


வேலை
சரிய செய்யலைனு
முதுகுல குச்சியால கோடு போட்ட

எல்லம்

அப்ப வலிக்கல
இப்ப வலிக்குது
உன்ன பிரிஞ்ச பிறகு(உன் பிரிவினில்)

அந்த நாட்கள்...

வெள்ளி பார்த்து விழித்தெழுந்து
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?

கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?

பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?

நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!

அந்த நாட்கள்...

வெள்ளி பார்த்து விழித்தெழுந்து
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?

கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?

பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?

நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!

அந்த நாட்கள்...

வெள்ளி பார்த்து விழித்தெழுந்து
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?

கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?

பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?

நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!

முதல் காதல் கடிதம்.....

விழியால் இதயம் கவர்ந்தவளுக்கு
எளிதாய் இதயம் இழந்தவன் எழுதுகிறேன்.....

இது வரையில் எழுதி பழக்கமில்லாத
கடிதம் என்பதால் ஒரு வித
பதட்டத்தோடு தொடர்கிறேன்......

பாசம் கொட்டி எழுதுவதால்
பல இடங்களில் வார்த்தைகள் அழிந்திருக்கும்...

அழிந்த வார்த்தையின் பொருள்
நான் சொல்லாமலே உனக்கு புரிந்திருக்கும்...

திசை எங்கிலும் தெரியும் உன் முகத்தை
என்னால் மறக்க முடியவில்லை....

துருவி துருவி... நீ கேட்ட போதும் கூட.....
காதலை என் மனதுக்கு சொல்ல தெரியவில்லை.....

மனதார உன்னை நினைக்கிறேன்...
ஆனாலும் சொல்லாமல்
மனதுக்குள்ளே மறைக்கிறேன்....

கருவை சுமக்கும் தாய் கூட....
பத்து மாதத்தில் இறக்கி வைப்பாள்
அந்த சுகமான சுமையை...!!!!!

காதலை சுமக்கும் இதயம்
காதலியிடம் சொல்ல மறுப்பதால்
நித்தமும் குளமாக்குது இமையை..!!!!

வாச மலர் பறித்து வந்து
நேசம் சொல்லவா..????

இல்லை வான் நிலவை அழைத்து
வந்து தூது சொல்லவா?????

தெரியாமல் புரியாமல்
அலை பாயுது மனம்......

அதனால் தான் காதல் கடிதம் ஒன்று
எழுதுகிறேன் இன்றைய தினம்.....

எனக்காக ஆரமித்து... உனக்காக எழுதி.....
நமக்காக முடித்து......

நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.....
நீ வரும் பாதையில் காதலை சொல்ல..!!!

Monday, January 25, 2010

தாயன்பைத் தேடி....

தாயன்பைத் தேடி....
------------------------------------------------------------------------------------
என் மூன்றரைவயதில்
என் நெற்றியில் ஒன்று
என் இடதுகன்னத்தில் ஒன்று
என் வலதுகன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னமும்
என் நியுரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!
நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமாக நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!
என் செவிலித்தாயான
தமிழன்னையை எனக்கு
முதன்முதலில் கற்றுக்கொடுத்த
என் தமிழாசான்
என் தாயே...
நீ தான்!!
இலக்கணம் படித்ததில்லை! - உனக்கு
தலைக்கணமும் பிடித்ததில்லை!! - thamizh
இலக்கியம் படித்ததில்லை! - உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!
நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன் மகனான நான் - தமிழ்
இலக்கியத்தில் மூழ்கிக்கொண்டிருப்பதை
பார் அம்மா...!!
பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!
பிணம்தின்னும் கழுகுகளைப்போலவே
பணம்பண்ணும் எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!
பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தை துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
உறவுகளை தொலைக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!!
மீசை முளைத்தபின்னும் - முகத்தில்
முடிமுளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் - என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாயபபாலைபபோன்ற
பரிசுத்தமான உனன்பைத்தேடும்
மூன்றரைவயது பாலகன் நான்!!

என் உயிர்க்கலந்த உறவே.....

எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......

இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....

வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!

நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!

என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!

சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......

உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!

உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!

அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!

ம‌றையாத‌ நினைவுகள்....

நிமிட‌ங்களை க‌ட‌க்க
நிக‌ழ் கால‌த்தையும்
கடந்த காலத்தையும்
துணைக்க‌ழைக்கிறேன்!
இமைகளை இணைத்து
ந‌க‌ங்க‌ளை இரையாக்குகிறேன்!
பதிவுகள் எல்லாம் அழிக்கப்பட்டதாய்
கோரிக்கைகளை மறுத்தனுப்புகிறது
என் ஞாபகக் குறிப்பேடு!

துரோகியாவ‌தற்கு முன்
தோழியாய் இருந்த‌வ‌ளின்
பாத‌ப்ப‌திவுக‌ளை ப‌ரிசோதிக்கிறேன்!
பாத‌க‌ம் எதுவும் தென்ப‌ட‌வில்லை!

இடையினில் எப்படி?

இர‌வின் நடுநிசியில்
புற‌க்க‌ண் மூடி
அக‌க்க‌ண் விழிக்கும்
த‌ருண‌த்தில்
விம்முத‌லோடு
விழிக‌ட‌க்கிற‌து
இருதுளி க‌ண்ணீர்!
நட்பின் துரோக‌மாய்
சுயத்தின் இழித்துரைப்பாய்
நற்பண்பின் புற‌க்க‌ணிப்பாய்.....

இப்ப‌டி எல்லாமும்
செய்திருப்பினும்
"க‌டைசியாய் பார்க்கணும்"
ம‌ந்திர‌ச் சொல்லாய்
ம‌ன‌தை பிசைந்தது!

பெயர் கேட்ட‌ மாத்திரத்தில்
கொந்த‌ளித்த‌ உண‌ர்வுக‌ள்
அடுத்த‌ வார்த்தையில்
அப்படியே அடங்கின!
'அய்யோ! என்னவாயிற்று!'
கால்கள் தானே அவ்விடம் நாடின!

எப்போது அவ‌ளை
கடைசியாய் பார்த்த‌து?
நினைவில் இல்லை ‍- ஆனால்
நிச்ச‌ய‌மாய் அவள் இப்ப‌டியில்லை!

வானாளின் இறுதியை
தொட‌ப் போகும் அவ‌ச‌ர‌த்திலும்
அவ‌ள் முகம் மட்டும் அதே
ப‌வுர்ண‌மி பொலிவில்!

உடலோ வேத‌னைக‌ள்
வாட்டிய‌து போக‌
வ‌றுமை தீண்டிய‌து போக‌
மீதியாய் ஏதுமில்லை!

'வயதுக் கோளாரில் வந்தவினை'
என் வயோதிக மனது
விரக்தியாய் சொன்னது!

க‌ண‌வ‌ன் கைகுழ‌ந்தை
இன்னும் சில‌பேர்
சூழ‌யிருந்தும்
ந‌ட்பாய் நான் ம‌ட்டும்!

"வ‌ந்துட்டியா?வரமாட்டியோன்னு..."

"என்னடி நீ!வ‌ராம‌ இருப்பேனா?"

"நான் இன்ன‌மும் அப்படியே
தானா உன‌க்குள்ளே?"

"சரி!தூங்கு!ச‌ரியாயிடும்"

ஆதரவாய் தலை தடவினேன்

"சரியாகுமா?"
ச‌லிப்பாய் உத‌ட்டை பிதுக்கினாள்

நடுங்கும் குரலில் சன்னமாய்
"குழந்தை தான் பாவ‌ம்!"

இன்னும் சில நிமிட‌ங்க‌ளில் .....
செவிலிப் பெண்
சைகையில் சொல்லிப் போனாள்!

எம‌னை எதிர்க்கும் ஆவேச‌ம்
வ‌ந்த‌தென‌க்கு!
க‌ண்ணுக்கு தெரிந்தால் தானே!
விழிவ‌ழி பிரிந்த‌து உயிர்!
நாகரீகம் கருதி இதுவரை
அட‌க்கிய‌ க‌ண்ணீர்
க‌த‌ற‌லாய் வ‌ந்த‌து!

எல்லார் கை மாறியும்
எதிர்பார்த்த அணைப்பு கிட்டாமல்
அலறிய குழந்தையை
அனிச்சையாய் தூக்கினேன்
"அம்மாட்ட போக‌னும்!"
மழலை இருமுறை சொன்னதும்
என்னுள் செவியுணர்
க‌ருவிக‌ளனைத்தும் செத்துப்போயின‌!

ம‌ர‌ண‌ம‌டைவ‌தை பார்ப்ப‌து
ம‌ர‌ண‌த்தை விட‌வும்....

உதிர்ந்துவிட்ட பூ நான்....

நான் கொஞ்சி கெஞ்சிய
வார்த்தைகள் எல்லாம்
பொய்யாய் போனதடி..
நீ மௌனமாய் ஆனதால்..

ஒரு நாள் பேசவில்லை என்று
என் மீது அன்பாய் கோபம் கொண்டாய்
அனால் இன்றோ பேசவில்லை
என்றாலும் பரவாயில்லை என்கிறாய்.

உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு செடிகொடி இடம் காட்டிருந்தாலும்!
இந்நேரம் அதோட அன்பை
பூக்களாய் தாந்திருக்கும்!

உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு பறவை விலங்கிடம்
காட்டிருந்தாலும்
தன் உடல் அசைவுகளால் தன்
அன்பை சொல்லிருக்கும்.!

அடைக்க பட்ட இதயத்தில்
அடைபட்ட உனது நினைவுகள்
அனுதினமும் கொஞ்சும் வார்த்தைகள்.
உன்னை சுற்றி வந்தே
சிறகு இழந்த பறவை நான்
கால் மணி நேரம் என்றாலும்
காத்திருப்பேன் உன்னை பார்க்கவே..
ஆனால் இன்றோ..????

எனக்கு நீ கிடைத்த பொக்கிஷமாய்
நான் நினைத்திருந்தேன்..
உன்னை பிரியவே எனக்கு
கஷ்டமாய் இருக்குமடா என்று சொன்னவள்
இன்று பிரியவே பிரியபடுகிறாய்..

மனமில்லாமல் வெறுக்கிறேன்
வாழ்கையின் கடமைகளை நினைத்து
உன்னைவிட்டு விலகவே நினைகிறேன்
மறுகணமே கண்ணீர்விட்டு அழுகிறேன்
என்னைவிட்டு பிரிந்துவிடதே என்று
இருந்தும் மாற்றம் இல்லை
மறந்துவிடு என்னை
நான் மரணித்துவிட்டேன் என்று
நட்பாக கூட என் உறவு உனக்கு வேண்டம்!

தவறி போய்விட்ட என்
வாழ்க்கை பயணம்!
மீளமுடியாமல் தவிக்கிறேன்!
தொலைந்த எனது இரவுகளை
நினைத்து பசிக்கும் நேரத்தை மறந்து
உன்னை பார்க்க வந்த நேரத்தில்
தவறி விழுந்து காயம் பட்ட நாட்களையும்
என்றும் அழியாத நினைவுகளை
எனக்கு நீ கொடுத்த பரிசு!
இத்துணை வருடம் நான் நேசித்ததற்கு.!

செடியில் ஒரு பூ உதிர்வதால்
செடிகளுக்கு என்றும் வருத்தம் இல்லை!
ஒரு பூ உதிர்ந்தாலும் மறு பூ பூத்துவிடும்!
நீ செடியாக நான் அதில்
மலர்ந்த பூவாக!
உதிர்ந்துவிட்ட பூ நான்!

அன்பு அம்மா...

அன்பு அம்மா
உன் அருகில் நான் இல்லாவிட்டாலும்
தினமும் உனக்கு குளிப்பாட்டி அழகு பார்க்காவிட்டாலும்
இரவு நிலாச்சோறு ஊட்டாவிட்டாலும்
தொட்டில்லாட்டி தூங்கவைக்காவிட்டாலும்

என் நினைவுகள் என்றும் உன்னை சுற்றியே
என் விடியலிலும் இரவிலும் நீ என்னுடனே
என் வாழ்வின் அர்த்தமும் நீயே
நான் காணும் உலகம் முழுதும் உன் பிம்பங்களே

தோழி....

தோழி

அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி....

Sunday, January 24, 2010

பால்ய நீரோட்டம்...

பால்ய நீரோட்டம்..
*

நண்பனின்
கைகளை பற்றிக்
கொண்ட
அழுத்தத்தில்..

பால்ய
நீரோட்டமொன்று..

ஆயுள் ரேகையில்..
வழிந்திறங்கியது..!


****

மனிதனாய் பிறந்ததனால் =============================

விரும்பிய திசைகளில் எல்லாம் பயணிக்க
ஒரு பறவையாய் பிறந்திருக்க வில்லை.

எதிர் வரும் எதையும் கொல்ல
ஒரு சிங்கமாய் பிறந்திக்க வில்லை.

பதுங்கி இருந்து பின் பாயும் வித்தை அறிய
ஒரு புலியாய் பிறந்திருக்க வில்லை.

மதியினால் சூது செய்து வாழ
ஒரு நரியாய் பிறந்திருக்க வில்லை.
.
.
.
மனிதனாய் பிறந்ததனால்
வாழும் வகை அறியவில்லை
மிருகங்களின் குணம்
கொண்ட மனித போர்வை
மூடர் மத்தியில்

விடுமுறை நாள் கல்லூரி...

விடுமுறை நாள் கல்லூரி
இசை இல்லாமலே
இனிதாய் பாடும்
பறவைகள் .....

தென்றல் வந்து
துரத்த இலக்குஇன்றி
எதையோ தேடி
உதிர்ந்த இலைகள்....

ஆசிரியர் மேஜையில்
அமர்ந்தபடி நெல்லிகாவை
எப்படி சாப்பிடுவது என்று
பாடம் எடுத்து
கொண்டு இருக்கிறது
அவ்வபோது கல்லடிக்கு
தப்பும் அணில்கள்...

விடுமுறை என்றாலும்
மூன்று நொடிகளுக்கு
ஒரு துளி என்ற
விதிமுறை மாறாமல்
கசிந்து கொண்டு
இருக்கிறது ஓர் குடிநீர்
குழாயின் கைபாகம்...

மண் மீது
தேங்கிய மழை
நீரால் தாகம்
தீர்த்து கொண்டு
இருக்கிறது
ஓர் காகம்...

எப்போதும் செடிகளின்
இடையே பயணிக்கும்
ரயில் பூச்சி ஒன்று
சுதந்திரமாய் கடந்து
கொண்டு இருக்கிறது
ஓர் நடைபாதையை....

ஆள் இல்லா
வகுப்பு அறைகளை
ஆக்கரமித்து
கொண்டு இருக்கிறது
ஓர் அடர்ந்த அமைதி..

அப்பா....

நான் உடுத்திய புதுத்துணி
நான் ஒட்டிய சைக்கிள்
நான் வெடித்த பட்டாசு
நான் உண்ட அறுசுவை உணவு
நான் கொண்ட தொப்பை
எதுவுமில்லை உன் உழைப்பின்
வியர்வை இல்லையெனில்...

நான் கற்ற கல்வி
நான் வாங்கிய இஞ்சினியரிங் பட்டம்
நான் கொண்டிருக்கும் பதவி
எதுவுமில்லை உன் மகனைப் பற்றிய
கனவு உனக்கு இல்லையெனில்..

நீ கஷ்டப்பட்டு உழைத்து
என்னை கஷ்டபட விடாமலேயே
வாழ வைத்தாய்

நீ உதிரம் சிந்தி உழைத்து
என்னை வியர்வை கூட சிந்தவிடாமல் செய்தாய்

நான் உயர்வதற்காக நீ
எத்தனை முறை குனிந்தாயோ ??

உன் வரம்பிற்கு மீறி உழைத்து என்னை
என் தகுதிக்கு மீறி உயர்த்தி விட்டாய்
ஐயகோ! இந்தக்கடனை
எத்தனை EMI -களில் அடைக்கப் போகிறேனோ?

நான் உறங்கியது பஞ்சு மெத்தையில் அல்ல
உன் உழைப்பின் மொத்தத்தில்

தாயின் பிரிவு...

செந்தாமரை முகத்தவளே
பைந்தமிழ் அமுதை ஊட்டியவளே / கொடுத்தவளே

உன் பொருமையைக் கண்டு
நத்தை தன் வேகத்தை குறைத்திடும்
உன் எளிமையைக் கண்டு
காமராஜர் இன்னும் சிக்கனமாக இருக்கக்கூடும்
உன் பண்பை கண்டு
சுனாமி பணிவை உணர்ந்திடக்கூடும்

பாரதியே இக்காலத்தில் பிறந்திருந்தால்
'மம்மி' என்றே அழைத்திருப்பான்
தன் தாயை

என்னை அம்மா என்று
கூற வைத்தவளே
என்னுள் தமிழ் தாயை கலந்திட்டவளே

நான் செய்தப் பிழைத்தான் என்னவோ?
என்னைவிட உனக்கு
யமனைத்தான் பிடிக்குமோ?

மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது...

மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது”
“மறக்க மாட்டீர்கள் தானே” ,
கடைசியாய் சந்தித்தபோது -நீ
கையாட்டி சொல்லியது.

எப்படி முடியும்…………
விழித்ததும் முகம் பார்க்கும் “கண்ணாடி”
நீ கண்டிப்பாய் என்பதால்
பார்க்காமல் வந்ததில்லை உன்னை பார்க்க.

லேசாய் நீர்த்துளி பட சிலிர்க்கும் என் உடல் ,
எனக்கே தெரியாமல் உன் விரல் தொட
என்னுள் நிகழ்ந்த ஒரு ரசாயன மாற்றம்.

காற்றில் விலகும் திரை வழியே
ஜன்னல் நுழையும் நிலா …
லேசாய் களையும் கூந்தல் ஊடே
உன் ஓரக்கண் தரிசனம்….

அன்றாட தொலைகாட்சியின்
பட்டு சேலை விளம்பரம்…..
வெள்ளிகிழமைகளில்
என் தேவியின் தரிசனம்..
புதிதாய் பூத்திருக்கும
பூந்தொட்டி ரோஜா
புத்தாடை பெருமை கொள்ளும்
உன் பிறந்த நாட்கள் .

தாலாட்டு சுகம் காணும்
தாய் மடி குழந்தைகள்..
மாலை நேர சொர்க்கம்
என் நந்தவன தலையணைகள்.

இப்படி ஏதோ ஒன்று
உன்னையும் ,உன்னோடான அந்த
வசந்த காலத்தையும்
நினைவு படுத்தியே தீரும் வேளையில்

உறக்கவே சொல்லிவிடுகிறேன்….
“உன் பெயரை” எப்போதாவது …

தன்னை அழைப்பதாய்….
என்னை அணைத்துக்கொள்ளும்
என் செல்ல மகள் தான்….
ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவாள் “ உன் பெயரை” ......
என் மனைவியிடமிருந்து.....


உன்னோடான நேரங்களைவிட
உன் நினைவுகள் வந்து செல்லும் நேரம்
அதிகம் என்பதால்
“மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது” ....

வயக்காடு வாழ்த்துகிறது!

வயக்காடு வாழ்த்துகிறது!
---------------------------------

மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
யானை கட்டிப் போரடித்த கூட்டம்
இன்று
வீடு கட்டிப் போரடிக்கிறது
என் மேல்!

வயலும்
வயல் சார்ந்ததும் மருதம்...
தொழிலும்
தொழில் சார்ந்தோரும்
பிழைக்க
என் வயிற்றில்
'பாலை" வார்ப்பது
என்ன நியாயம்?

வறண்ட கோடுகளால்
இயற்கையன்னை வதைப்பது போதும்:
இல்லாத கோடுகளால்
தண்ணீர் இல்லாமல் செய்வது
என்ன கொடுமை?
அணைக்கட்டுகள்
என்னை அரவணைக்காததை
என்னவென்பது?
மொழிகளால்
பிரிந்த உங்களிடம்
எந்த மொழியில் வேண்டுவது?
என்னிடம்
ஆழப்பாய்ந்து நீரள்ளிப் பருகும்
வேரில்லை:
நீர்த்தாகம் தீர
உங்களை விட்டால்
கதி வேறில்லை!

பசுமை தந்தேன்
இன்று
சுமையாகிப் போனேன்!
என்னை
வருடிச் சென்ற தென்றல்
நெருடலாய் கேட்கிறது
ஏன் கம்பிகளாய்
மாறி வருகிறாயென்று!

ஏரு பூட்டி சேறு பூசி
என்னை
கிச்சுக்கிச்சுக்காட்டி
விளையாடிய நீங்களா
இன்று
உயிருடன் பிரேதப்பரிசோதனை செய்வது?

உறவே....

என் உயிர்க்கலந்த உறவே.....!!!!!
எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......

இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....

வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!

நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!

என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!

சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......

உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!

உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!

அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!!!!!!