Wednesday, June 24, 2009

கோடை விடுமுறை!...

7மணி முதல் 8மணி வரை
சங்கீத சாதகம்...

8மணி முதல் 10மணி வரை
கணிப்பொறி பயிற்சி...

10மணி முதல் 12மணி வரை
அபாகஸ் பயிற்சி...

12மணி முதல் 1மணி வரை
நீச்சல் பயிற்சி...

மதிய உணவு முடிந்தவுடன்
ஆரம்பித்து விடுகிறது
ஓவியப் பயிற்சி...

4மணிக்கு தொடங்குகிறது
நடனப் பயிற்சி...

8மணிக்கு இந்தி வகுப்பை
முடித்துக்கொண்டு
வீடு திரும்பிய
ப‌க்க‌த்து வீட்டு பாப்பாவுக்கு
த‌மிழ் பாட‌ம்
ந‌ட‌த்த‌த் துவ‌ங்கினேன்
"ஓடி விளையாடு பாப்பா" என்று.

என் தோழனுக்காக

நண்பனே......
என்
சந்தோசங்களின் போது
துணையாய்........
என்
தோல்விகளின் போது
ஆறுதலாய்......
என்
வேடிக்கைகளின் போது
ரசிகனாய்....
என்
வெகுளித்தனங்களின் போது
பாதுகாப்பாய்....
என்
கேள்விகளின் போது
ஆசானாய்.....
என்
வெற்றிகளின் போது
ஏணிப்படிகளாய்.....
என்
நினைவுகளில் வலம் வரும்
இன்னொரு நிழலாய்....
தவம்
ஏதும் செய்யாமல்
இறைவன் எனக்களித்த பரிசு
நீ........


<<<<<<<<<<<<<<<<<<<<இது என் தோழனுக்காக>>>>>>>>>>>>>>>>>>

அப்பா!...

காலில் கல் இடறும் போது வாயிலிருந்து வரும் வார்த்தை "அம்மாடியோ"
காரில் மோதி விழும் போது கூவி அழைப்பது "ஐயோ அப்பா"
சின்ன சின்ன துன்பங்களுக்கு தேடுவது அம்மாவின் அன்பு
பெரிய பெரிய துன்பங்களுக்கு தேடுவது அப்பாவின் ஆதரவு
அப்பா ஒரு ஆலமரம் அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்

Tuesday, June 23, 2009

அம்மா....

நம்மில் மட்டும் முரண்பாடுகள்..
கருவறைக்குள் தானே தெய்வம்..
இங்கு
தெய்வத்துக்குள் கருவறை..
கருவறை வசித்த பக்தன்
நான்..
என்னை அறியா நாட்களில்
நான் கொடுத்த மூத்திர
அபிஷேகங்களுக்கான
எச்சில் முத்த பதிலடியின்
இனிப்பு சுவை எங்கும் உணரவில்லை
இன்னும் நான்..
இன்று வரைக்கும்
உன்மடித்தலையனையில்
மட்டுமே
ஆழத்தூக்கம் உணரமுடிகிறது
என்னால்..
உனக்கான உவமைச்சொல்
இன்றுவரை எந்த மொழியிலும்
உருவாக்கப்படவில்லை..
காலம் உனைபிரிப்பின்
உன் கருவறை கொடுத்துவிட்டு போ
எனை பிரிப்பின்
எப்படியும் வருவேன்
மீண்டும் உனக்குள்...

சுகமான சுமைகள் ……

இதயத்தில் முழ்கி கிடக்கும் அவளின் நினைவுகள் மிதந்து வந்த நேரம் .....
என் இதயம் மட்டும் கனக்கிறது !!
அது கூட சுகமான சுமை தான்.

என்றென்றும் சுகமான சுமைகள் எல்லாம் சில சோகமான நினைவுகளுக்கு தான் சொந்தமா ?
சுமைகளையும் சுகங்களையும் சுமக்கத்தான் வேண்டுமா ?

சுகங்களை விடுத்து சுமைகளை மட்டும் இறக்கத்தான் முயல்கிறேன் ....
எத்தனை முறை இறக்கினாலும் இறங்குவது கண்ணீர் மட்டுமே !

என் பிரியமான தோழிக்கு...

யாரோ இருவரின் உரையாடலில்
தொலைந்துபோன என் நட்புகளை
தேடிப்பயணிக்கும் நினைவுகளில்
ஏதோவொரு பயணத்தில் எதிர்பட்ட
உன் முகம் வந்து போனது

கருணைப்பார்வையும் சிநேகிதப்புன்னகையும்
தவிர உனக்குமெனக்கும் எந்த
சம்மந்தமுமில்லை அந்த பயணத்தில்!

இருந்தும் என் தேடல்
உனைத் தாண்டி தொடர்வதாயில்லை!
உன் புன்னகையில் நின்றுகொண்டு
ஏதாவது காரணங்களை நிரப்பச்சொல்லி
அடம்பிடிக்கிறது மனது!

உனக்கும் எனக்குமான பூர்வஜென்ம
பந்தங்களை கட்டுமானம் செய்து
கோட்டையை எழுப்பிவிட்டது மனம்!

சில எதிர்பார்ப்புகளினூடே
அன்றைய தினத்தின் நீ வந்துபோன
குறிப்புகளை எடுத்துக்கொண்டே
திரும்புகையில் எதிரிருக்கையில் நீ!

நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடி

இப்போதெல்லாம் என் எதிரே வரும்
பெண்களைக் கூடக் கவனியாமல்,
நீ அனுப்பும் குறுஞ்செய்திகளை தான் என்
செல்லிடப் பேசியில் பார்த்துக் கொண்டே நடக்கிறேன்....
சில விளம்பரக் காட்சிகளில் ஒரு அழகான குழந்தையுடன்
சிரித்துக் கொண்டிருக்கும் தம்பதிகளைப் பார்க்கையில்,
நான் அந்த காட்சிகளில், நம்மைத் தான் உருவகப்படுத்திப் பார்க்கிறேன்..
என்னிடம் பைக் இல்லாத போதும்,
அடிக்கடி என் மனம் எனக்கு டாடா காட்டி
விட்டு உன்னுடன் பைக் ஏறிச் செல்கிறது..
நீ லேசாக உடம்பு சரியில்லை என்று சொன்னபோது, அந்த மாத்திரை சாப்பிடு, இந்த மருந்து
எடுத்துக்கோ என்று எம்.பி.பி.எஸ் படிக்காமலேயே டாக்டர் ஆகிறேன் நான்....
மனதிற்குள் தினமும் சாலமன் பாப்பையா வந்து 'என் மனதில் உள்ளது நட்பா? காதலா?"
என்று பட்டிமன்றம் நடத்தி விட்டு தீர்ப்பை மட்டும் சொல்லாமல் செல்கிறார்...
இவ்வளவு நடந்தும் நான் ஏன் அமைதி கொள்கிறேன்,
உன்னுடைய மனதில் காதலன் பதவிக்கு போட்டியிட்டு
என்னுடைய நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடி....

ஆண் பெண் நட்பு....

சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை

காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,

காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,

தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,

தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,

விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை

பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை

தினங்கள் தேவையில்லை

உள்ளத்துக் காதலை
உணர்த்துவதற்கு
காதலர் தினம் வரை
காத்திருக்கத் தேவையில்லை

தாய்மையின் பெருமையை
போற்றுவதற்கு
அன்னையர் தினம்தனை
எதிர்நோக்கத் தேவையில்லை

பெண்களின் மதிப்பை
கொண்டாடுதற்கு
மகளிர் தினம் வரை
ஓய்ந்திருக்கத் தேவையில்லை

ஒத்திவைத்தல் எதற்காக?
‘அடைக்குந்தாழ்’ எதற்காக?

உள்ளத்து அன்போடும்
உயர்வான பண்போடும்
சீரிய கருத்தோடும்
சிறந்த பணிவோடும்
வாழ்ந்திருபோமேயானால்
வாழும் நாளெல்லாம்
அத்தகைய நாட்கள்தாம்

விழித்துக் கொள்ளுங்கள்

உன்னால் சாதிக்க இயலாத
காரியம் என்று எதுவும் இல்லை
நீ எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய் உன்னை

வலிமை உடையவனாய் நினைத்தால்
பலசாலியாக திகழ்கிறாய்
வலிமை அற்றவனாய் நினைத்தால்
பலவீனமாய் தெரிவாய் - நான்
எதையும் சாதிக்க வல்லவன் என்று
எப்போதும் நினைத்துக் கொண்டே இரு
உனக்கே தெரியாமல் உனக்குத் தேவையான
வலிமை உன்னுள்ளே புதைந்து கிடக்கிறது
தூய்மை - பொறுமை - விடாமுயற்சி
இவையே உன் வெற்றிக்கு இன்றியமையாதவை
வாழ்க்கை என்னும் போர்களத்தில்
மடிந்து விடும் வீரனாய் ஒருபோதும் இராதே
மரணத்தை விழுங்கும் மாவீரனாய்
எழுந்து நில்--

உன்
நிலைமை எப்படிப்பட்டவை என்று
நினைத்து வருந்தாதே
லட்சியத்தை மட்டுமே பற்றிக்கொண்டு முன்னேறு
எழுந்திரு நண்பா - விழித்துக்கொள்
இனியும் தூங்க எண்ணாதே - அச்சம்
உன்னை
மரணத்திற்கு இழுத்துச் செல்லும் ஆயுதம்
உன்னால் சாதிக்க வேண்டியது
ஆயிரம் ஆயிரம் ---

லட்சியத்திற்காக உன் உயிரையும்
அர்பணிக்கத் தயாராய் இரு.

சின்னத்தனமான ஆசைகள்.....

என் சின்னத்தனமான ஆசைகளை
சொல்கிறேனென்று
கோபித்துக்கொள்ளாதே....

அன்பாய் இருக்கிறோம்
பாசமாய் பழகுகிறோம்
உயிராய் உருகுகிறோம்
உண்மையில் நாம்
கொடுத்து வைத்தவர்கள்தான்.

இதுதானா வாழ்க்கை?
உதடு சுழித்து அழகுகாட்டி,
சின்னதாய் ஒரு முறைப்பு.
போடா பொறுக்கியென்று,
கோபமாய் ஒரு பேச்சு.

கொஞ்சம் கொஞ்சம் சண்டைகள்.
ஒரேயடியாய் இல்லாவிட்டாலும்,
இரண்டு நாட்களாவது பிரிவு.
டெலிபோன் கொஞ்சல்களுக்கு,
ஒரு வாரம் விடுமுறை.

இப்படியும் கொஞ்சம்
வாழலாம்தானே....

என்னால் முடியவில்லையென்றாலும்
நொடியேனும் ஒரு முறைப்பு,
சும்மாவேனும் ஒரு கோபம்,
பொய்க்காவது ஒரு சண்டை,
நீயாவது போட்டுக்கொள்ளேன்.

சகியே...!
இப்படியும் கொஞ்சம்
வாழ்ந்து பார்க்கலாம்...........
என் சின்னத்தனமான ஆசைகளை
சொல்கிறேனென்று
கோபித்துக்கொள்ளாதே....

அன்பாய் இருக்கிறோம்
பாசமாய் பழகுகிறோம்
உயிராய் உருகுகிறோம்
உண்மையில் நாம்
கொடுத்து வைத்தவர்கள்தான்.

இதுதானா வாழ்க்கை?
உதடு சுழித்து அழகுகாட்டி,
சின்னதாய் ஒரு முறைப்பு.
போடா பொறுக்கியென்று,
கோபமாய் ஒரு பேச்சு.

கொஞ்சம் கொஞ்சம் சண்டைகள்.
ஒரேயடியாய் இல்லாவிட்டாலும்,
இரண்டு நாட்களாவது பிரிவு.
டெலிபோன் கொஞ்சல்களுக்கு,
ஒரு வாரம் விடுமுறை.

இப்படியும் கொஞ்சம்
வாழலாம்தானே....

என்னால் முடியவில்லையென்றாலும்
நொடியேனும் ஒரு முறைப்பு,
சும்மாவேனும் ஒரு கோபம்,
பொய்க்காவது ஒரு சண்டை,
நீயாவது போட்டுக்கொள்ளேன்.

சகியே...!
இப்படியும் கொஞ்சம்
வாழ்ந்து பார்க்கலாம்...........

வெற்றி நிச்சயம்

ஏய்
இளைஞனே!
நமக்குத்தான்
துயில் எழுப்புவதற்கு
சேவல்
கடிகாரம் எல்லாம்......
அந்த சூரியனுக்கேது?
கண்களில் முயற்சி
கைகளில்
நம்பிக்கை
மனதில்
இலட்சியம்
வேண்டும்!
போலி வே~ங்களை
பொய்
வார்த்தைகளின்
சாயத்தைக் கிழி!
உன் பாதை
வழியில்
இனி
திசையெல்லாம்
கிழக்காய்
இருக்க......
வேண்டும்
தலை குனியாதே?
தலை நிமிர்
கை குலுக்கி
வாழ வழியுண்டு.

குணத்தில் மட்டும் தமிழனாய்…

உன் உடல் கூட
உனக்குச்
சொந்தமில்லை
கண்ணில்ப்
படுவனவற்றில்
எல்லாம் ஆசை
கொள்கின்றாய்

உன்னுள் இருக்கும்
அழுக்குகளை
நீ செல்லும்
இடமெல்லாம்
அள்ளித்
தெளிக்கின்றாய்

தமிழ்ச்சாதி என்று
பெருமை கொள்ளாது
தனிச்சாதியாகிச்
சாகின்றாய்

உன் இனத்தையே
பல கண்கள்
கொண்டு
பார்ப்பதுதான்
பரிதாபத்திற்குரியது

சுதந்திரமாய்
வாழ்வதற்காய்
உயிர் கொடுத்துப்
போராடுகின்றார்
ஈழத்தில்

நீயோ ஊரையே
துண்டாடத்
திட்டம் தீட்டுகின்றாய்

நாடிழந்து நிறமிழந்து
தாய்மொழி மறந்து
தமிழனின்
அடையாளமே
இழந்து வாழும் நீ
குணத்தில் மட்டும்
மாறாதிருக்கின்றாய்

காலால் மிதித்த
போதும்
உன்னை சேயாய்
சுமந்த தாய்
மண்ணில்
காறி உமிழ்கின்றாய்

அன்னிய மண்ணிலே
வேரூன்றி நீ
தழைத்திருந்தாலும்
சினக்கும் போது
உதிர்வாய்
என்பதை ஏன்
உணரமறுக்கின்றாய்

ஒன்றையொன்று
பிடித்துண்டபோதும்
தன் இனத்தின்
ஒற்றுமையில்
பிசிறில்லை
காட்டுக்குள்ப் பிரிவில்லை

உன் ஆறறிவு
கொண்டு
அன்னிய மண்ணில்
எத்தனை
சாகசங்களைப்
புரிந்தாலும்

நீ வனவிலங்கிலும்
தாழ்ந்தவனாய்
இருக்கின்றாய்!

அம்மா

என்ன எழுதுவதம்மா
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை

எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..

அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகனாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகனாய்…

பிரிய தோழி!”

பிரிய தோழி
உன் முகவரி இந்த
உப்பு காற்றில்
கரைந்துகொண்டிருக்கிறது
அலையலையாய் வந்துபோகும்
உன் நினைவுகளை
கடலலைகள் இழுத்துசெல்ல
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
உனது தடம் இதோ
நடுக்கடலில்……………………………

நிர்ப்பந்தத்தால் பிரிவதாய் நீயும்
உன் சொல் மதிக்கும்
உத்தம செயல் புரிவதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்!

நட்பு கொலை செய்யப்பட்டதா?
நட்பு விபத்துக்குள்ளானதா?
இல்லை இல்லை
அது மனசாட்சி
துறந்த மனங்களில் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்.

இனி
இரவில் நாம்
உரையாடும் நேரத்தில்
தொலைபேசி ஒளித்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த, ஆறுதல் சொல்ல, அரவணைக்க
அருகில் நீயிருப்பதாய்
சூன்யத்தில் நானுன்னை
விளிக்கவும் கூடும்!

எதுவெனினும் இன்றே
இறுதி நாளென்பதால்
உன் அழுகை கலந்த சம்மதம்
கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மௌனத்தால் சொல்கிறேன்
“போய் வா என்
பிரிய தோழி!” உன் முகவரி இந்த
உப்பு காற்றில்
கரைந்துகொண்டிருக்கிறது
அலையலையாய் வந்துபோகும்
உன் நினைவுகளை
கடலலைகள் இழுத்துசெல்ல
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
உனது தடம் இதோ
நடுக்கடலில்……………………………

நிர்ப்பந்தத்தால் பிரிவதாய் நீயும்
உன் சொல் மதிக்கும்
உத்தம செயல் புரிவதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்!

நட்பு கொலை செய்யப்பட்டதா?
நட்பு விபத்துக்குள்ளானதா?
இல்லை இல்லை
அது மனசாட்சி
துறந்த மனங்களில் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்.

இனி
இரவில் நாம்
உரையாடும் நேரத்தில்
தொலைபேசி ஒளித்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த, ஆறுதல் சொல்ல, அரவணைக்க
அருகில் நீயிருப்பதாய்
சூன்யத்தில் நானுன்னை
விளிக்கவும் கூடும்!

எதுவெனினும் இன்றே
இறுதி நாளென்பதால்
உன் அழுகை கலந்த சம்மதம்
கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மௌனத்தால் சொல்கிறேன்
“போய் வா என்
பிரிய தோழி!”

Monday, June 22, 2009

பிரியவும் நினைத்தாயோ தோழியே...!

பிரியவும் நினைத்தாயோ தோழியே...!

தோழியே!
உன் முகம் என் கண்ணிலும்
உன் நினைவென் நெஞ்சிலும்
சுமப்பதினால் தான்
இன்னமும் சொல்கிறேன்
நான் உன்னை பிரியவில்லை என்று....

கண்மூடி காண்கிறேன்
நம் பள்ளி நாட்களை...
கண்களை திறந்ததும் ஏனோ தெரியவில்லை
என் சுவாசக் காற்றில் படிந்து விட்ட உன் நினைவுகள்
கண்களினோரம் தன் ஈரப் பதத்தினை சின்னமிட்டது..

மனதில் எதோ ஒரு கனம்
அதை எப்படி சொல்வேன் உனக்கு...?
பிரிந்திடவும் நினைத்தாயோ என்னை...?

பள்ளி கால முதல் தோழி நீ...!
என் மனதில் பட்ட முதல் சிநேகம் நீ..!
உன்னுடன் நகர்ந்திட்ட அந்த நாட்கள்..
நான் எப்படி திரும்ப பெற்றிடுவேன்...?

இன்முகமாய் நான் கண்ட உன் முகம்
உன் நட்பினிலே நான் கண்ட உன் உள்ளம்
இன்று...சற்று தள்ளி நின்று என்னை பார்ப்பது ஏனோ..?

விலகியிருப்பதென சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல..
அன்பு தோழியே..!
அது என் இதய துடிப்பினில் நீ ஏற்றிவிட்ட கூறிய வாள்
எடுக்கவும் முடியவில்லை....
வலியினை பொறுக்கவும் முடியவில்லை...



தவற விட்ட மழை

தவற விட்ட மழை

இரவு முழுதும் பெய்த மழையை...
அதிகாலையிலேயே உணர செய்தது...
கிளர்ந்தெழுந்த மண்வாசமும்...
தழுவி சென்ற ஈர காற்றும்.

மழையோடு விடியும் பொழுதுகள்...
உலகத்தையே புதிதாக்கி விடுகிறது.
ஊரிலுள்ள அத்தனை வீடுகளுக்கும்...
வாசல் தெளித்து வைத்திருக்கிறது மழை.

அலுவல் கிளம்பும் பொழுதுகள்..
வழக்கம் போல் இல்லை.
குளியல் முடித்து வெளியேறுகையில்...
உடலுக்குள் ஊடுருவும் மெல்லிய குளிர்..
இதயம் வரை பாய்கிறது.

சாலையெங்கும் தேங்கி நிற்கும்...
மழை நீரை தாண்டி குதிக்கையில்...
பள்ளிக் காலங்களில் அம்மா கைப் பிடித்து..
மழை சாலைகளில் நடந்த ஞாபகங்கள்.

மெல்லிய சாரலோடு மீண்டும் மழை...
மேகம் விட்டு இறங்க தொடங்குகிறது.
நனைந்து கரையவே விருப்பமென்றாலும்..
தயங்கி தயங்கி விலகி செல்கிறேன்.

ஐயோ மழை என்றபடியே...
குடை கொண்டு மழை தவிர்க்கும்..
மனிதர்களில் நானும் ஒருவனாகிறேன்.

ஐ.. மழை என்றபடியே...
குடைக்குள்ளிருந்து வெளியே கை நீட்டும்...
குழந்தைகளின் கைகளுக்குள் மொத்தமாய்...
அடைக்கலமாகிறது மழை.

தொலைந்து விட்டதாய் நினைத்திருக்கும் பால்யம்...
உண்மையில் தொலைந்து கொண்டிருக்கிறது...
ஒவ்வொரு முறை மழை தவிர்த்து
நான் ஒதுங்கும் போதும்.

பள்ளி தாமரை !

பள்ளி தாமரை

பள்ளி தாமரையே, பளிங்கு தேவதையே
பட்டாம்பூச்சி என சிறகடித்து பள்ளி பருவமதில்
குட்டி கணவுகளை தந்தாய்
உன் சின்ன சிரிப்பில் சிறகுகள் தந்து சிலிர்ப்பூட்டினாய்
மெல்ல பேசியே சிறு மயக்கம் தந்தாய்
உன் அகன்ற விழியினில் ஆயிரம் கதைகளும் சொன்னாய்
இரட்டை சடை கொண்டு ஒற்றை இதயமும் பறித்தாய்
குட்டி தீவே,குட்டை பாவடையில் நீயும் வலம் வர
எனக்குள் சின்ன சின்ன சிகரங்கள்
மலர்கள் வேண்டுமெனில் மொட்டுகளில் அழகாக இருக்கலாம்
பருவமென்னும் இதழ் விரித்தாலும் உன் பட்டு கன்னத்தின் அழகு மட்டும் குறைவதில்லை
இளம்பிறை என இளவயதில் கழித்தோம் முழு மதியென மலர்ந்த பின் மட்டும் நாணம் ஏனோ முகம் காட்ட மறுப்பதும் ஏனோ
தோழியே, வெகுளியாய் வினாக்கள் கேட்காதே,
சொல்லி விளங்குவது இல்லை உணர்வுகளும், நினைவுகளும்
நீ விட்டு சென்றாலும் உன் நினைவுகள் மட்டும் என்னை விட்டு விலகுவதுமில்லை
மழை நின்ற பின்னால் மரம் சிந்தும் ஒரு துளியும் அழகு தான், அது போல்
உன் நினைவுகள் என்னுள் அழகாய் ....

நட்புக்கல்ல...!

நட்புக்கல்ல...!

பழகிய நெஞ்சங்கள்;
பிரிகின்ற நேரங்கள்;
எண்ணத்தில் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரங்கள்;

எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் சிரித்தோம்!

சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எதனை மிடுக்கு!

சிறு சிறு கோவங்கள்;
சிறு சிறு கர்வங்கள்;
சிறு சிறு சண்டைகள்;
-
உறவாடினோம்...

மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்

கரும்பான நட்பு;
குறும்பான காலம்;
கலங்காத நினைவு..

சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்

சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கல்

சிநேகத்தின் தூரல்

சிநேகத்தின் தூரல்

நண்பா
ஒரு மழைநாள் மாலையில்
பேசிக்கொண்டோம் இருவரும் ...

நம்
உரையாடல்களை
உள்வாங்கி
சிலிர்ப்புடன் பெய்து தீர்த்தது மழை ...

மழை நின்ற பிறகும்
நனைந்து கொண்டிருந்தோம்
சிநேகத்தின் தூரலில்...

மழை நடுங்கி கொண்டிருந்தது
நம் உரையாடல்களின் குலுர்சியில் ..........

காதலும் நட்பும்

காதலும் நட்பும்

காதல் உலகிலே கவிதைகள் ஏராளாம் !
களவுகள் ஏராளாம் !
கவிஞர்களும் ஏராளாம் !

நடிப்பும் ஏராளாம் !
நம்பிக்கை துரோகமும் ஏராளாம் !
கவலைகளோ ஏராளாம் !ஏராளாம் !

சொல்லிய காதல் ஓராயிரம் ; சொல்லாத காதலோ ஏராளாம் !
மனதால் பிரிந்த காதல் ஓராயிரம் ; மரணத்தால் பிரிந்த காதல் ஏராளம் !

ஆனால் ? ஆனால் . . .

நட்பு உலகிலே நகைச்சுவைக்கு பஞ்சமில்லை ;
நடிப்பு என்ற பேச்சே இல்லை,
துரோகமோ கவலையோ இல்லவே இல்லை !

சொல்லவும் (நட்பை) தேவையில்லை !
சொன்னாலும் தப்பில்லை !

ஜாதியோ சமுதயமோ அந்தாஷ்த்தோ திருமாணமோ
நம்மை பிரிக்க வாய்ப்பே இல்லை
நட்பால் ஒன்றிணைந்த நமை பிரிக்க நாரதாரும் கூட இல்லை !

* * * *

என் பேர் தான் “உயிர் நட்பு”

என் பேர் தான் உயிர் நட்பு

புன்னகை தான் என் உலகம்

கொஞ்சம் பொய்யும் உண்டு
நிறைய புதிரும் உண்டு ஒரு நாளின்

நேரம் எனக்கு போதவில்லை
நெடுவானமும் தூரமில்லை - நான்

யாரும் காணா கடவுள் இல்லை
மனிதரை பிரிக்கும் மதமுமில்லை

கலைந்து போகும் கனவும் இல்லை
காரணம் சொல்லி பிரியும் காதலில்லை

பணம் ஒரு தடையும் இல்லை
பாசத்திற்கு என்னுள் பஞ்மில்லை

எனக்கும் உண்டு கற்பு
என் பேர் தான் உயிர் நட்பு

என் உயிர் தோழி!

என் உயிர் தோழி!

நான் மறந்த நிமிடங்களை
எனக்காக மீட்டு தருபவள்!
என் கலைந்த கனவுகளில்
ஒளி குறையாத நிலவு அவள்!
சுவாசிக்க மறந்த எனக்கு, உயிர் மூச்சாய்
நட்பை தந்தவள் அவள்!
நான் தூரத்து வெளிச்சம் நோக்கி நடக்க,
அவளுடைய பத்து விரல்களில்
சுண்டு விரல் மட்டும் எனக்கு போதும்...
உணர முடியாத உணர்வுகளுடன்
உன் உயிர் தோழன்.......

எப்போது தொலைத்தோம் ???

எப்போது தொலைத்தோம் ???

நீ இல்லாத
பரிச்சயம் அற்ற பொழுதுகள்
போக மறுக்கிறது என்னை விட்டு...

பத்திர படுத்தாமலே
தீர்ந்து போய் கொண்டு இருக்கின்றன
உனக்கான வார்த்தைகள்

செல்லும் வழி யாவும்
பிரிந்தே விடுகிறது
ஏதோ ஒரு கணத்தில்...

அடித்து வாட்டும் கொடும் குளிரிலும்
வெப்ப பிசுபுசுப்பையே
தருகிறது ஒவ்வரு
தனிமையின் இரவும்....

நமக்கான ஆசைகள் அனைத்தையும்
குத்தகைக்கு எடுத்து,
நிராசையாக்கி தவணை முறையில்
துப்புகிறது கடக்கும்
அத்தனை மணி துளியும்...

ஞாபகம் இருக்கிறதா
எப்போது தொலைத்தோம்
உனக்கான என்னையும்
எனக்கான உன்னையும்...........

Gnan's

இந்த கவிதை என் நண்பிக்கு

இந்த கவிதை என் நண்பிக்கு

இந்த கவிதை என் நண்பிக்கு

நண்பி.........
நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....

நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............
தொடர்வாயா
உன் நட்பை இறுதி வரை..........?

பிரிவின் பிந்தைய கணங்கள்

பிரிவின் பிந்தைய கணங்கள்

கதவிடுக்கின்வழிக் கசியும்
இந்நாளின் புது வெளிச்சங்கள்
சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும்
நிராகரித்து விட்ட‌ன
பெருகுமென‌து மௌனங்க‌ள்

என்னைவிடவும் அமைதியாக
இருக்கி்றது இந்த அறை

கதவுகள் திறந்தபடியிருந்தும்
யாதொரு புதுமையும்
நிகழ்ந்துவிடவில்லை

நிர்பந்தங்களேதுமின்றி
தொடரும் தனிமையில்
வலிமிகுந்து சரிகின்றன
அநாவசியமாகிவிட்ட எனது உணர்வுகள்

தயார்படுத்திக் கொள்ள விழைகிறேன்
உனது பிரிவை ஈடுசெய்யும்
ஆதூரமிக்கதொரு தருணத்தை

முடிவில்
ஆறுத‌ல‌ற்று விம்மி அழுத
நேற்றைய இரவை சற்றும்
மொழிபெய‌ர்க்க முடியாமல்
தோல்வியைத் தழுவுகின்றன
இப்பகல் பொழுதுகள்

பிரிவின் பிந்தைய கணங்கள்

பிரிவின் பிந்தைய கணங்கள்

கதவிடுக்கின்வழிக் கசியும்
இந்நாளின் புது வெளிச்சங்கள்
சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும்
நிராகரித்து விட்ட‌ன
பெருகுமென‌து மௌனங்க‌ள்

என்னைவிடவும் அமைதியாக
இருக்கி்றது இந்த அறை

கதவுகள் திறந்தபடியிருந்தும்
யாதொரு புதுமையும்
நிகழ்ந்துவிடவில்லை

நிர்பந்தங்களேதுமின்றி
தொடரும் தனிமையில்
வலிமிகுந்து சரிகின்றன
அநாவசியமாகிவிட்ட எனது உணர்வுகள்

தயார்படுத்திக் கொள்ள விழைகிறேன்
உனது பிரிவை ஈடுசெய்யும்
ஆதூரமிக்கதொரு தருணத்தை

முடிவில்
ஆறுத‌ல‌ற்று விம்மி அழுத
நேற்றைய இரவை சற்றும்
மொழிபெய‌ர்க்க முடியாமல்
தோல்வியைத் தழுவுகின்றன
இப்பகல் பொழுதுகள்

நட்பின் பசுமை

நட்பின் பசுமை

ங்கோ
எப்போதோ
இப்பூவுலகில்
ஜனித்த‌
இரு ஜீவன்கள்...

ப்படியோ
எங்கெங்கோ
சுற்றிக்களித்த
பள்ளிப்பருவ‌
பாலன்கள்...

முடிந்த நூற்றாண்டின்
முடிவுரை ஆண்டில்...
விடுதலைத் திங்களில்
சுதந்திர தினத்தின்
முந்தைய நாளாம்...
கிழமையும்
திங்களாம்...

காலச் சக்கரத்தின்
சுழற்சியால் அவை
மீண்டும் ஜனித்தன‌
நட்புலகில்...
நட்(டப்)பு நூற்றாண்டின்
முன்னுரையாய்...

இன்று...
அவற்றின் எட்டாம் அகவையோ
'ஆரம்பப் பள்ளி'யாய்...
எனினும்
நட்பெனும் உள் கிடக்கையின்
எண்ணங்களோ
'உயர் நிலை'யாய்...

க‌ழிந்த‌ ஒவ்வோர் ஆண்டும்
'கலைக்க‌ல்லூரி'யின்
புத்தகங்க‌லாய்...
ஒவ்வொரு ப‌க்க‌ங்க‌ளும் (நாட்க‌ளும்)
வாழ்க்கையெனும்
எதுகை மோனை வ‌ரிக‌ளுட‌ன்...
இவைய‌னைத்தும்
அன்பெனும் 'ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தால்'
அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வையாய்...

வ்வொரு நாளும்
தேர்வுகள்...
'கேள்விக‌ளால் ஒரு கேள்வி'யாய்...
விடைக‌ளோ...
மெய் எனும் மையினால் தோய்த்த‌
தூரிகையால் கிறுக்கிட்ட
'கிறுக்க‌ல்க‌ளாய்'
'காகித்ப் பூக்க‌ள்' மிதக்கும்
தெளிந்த 'த‌ண்ணீர் தேச‌த்தில்'...

முடிவுக‌ளோ...
ந‌ம்பிக்கையில்...
'சிக‌ர‌ங்க‌ளை நோக்கி'...
நினைவுக‌ள் ம‌ட்டும்
ம‌ன‌மென்னும் 'இருண்ட‌ வீட்டில்'
ஒவ்வொரு நாழிகையும்
'க‌ள்ளிக்காட்டு இதிகாச‌மாய்'
சற்று 'சுருக்' கென்றும்...
அதுவும் ஓர்
'அழகின் சிரிப்பாய்'...

ங்கோ விதைத்த பதியங்கள்
சினேக சாரலில்...
கிளைத்துக் கொண்டே இருக்கட்டும்...
என்றென்றும்
நட்பின் பசுமையின்
'
ஈரத்துடன்'...

சந்திப்பின் கணம்..!

சந்திப்பின் கணம்..!

*

கண்களின் தவிப்பை
கால்கள் மொழிப்பெயர்க்கின்றன..

இன்னும் விரைவாய்...
இன்னும் விரைவாய்...

நேரம் ஓடிக்கொண்டிருக்கும் சாலைகள்
எல்லைகளற்று நீள்கின்றன...

மனிதனின் மாயக்கரங்கள்
பாதைகளைப் பின்னலிட்டு... பின்னலிட்டு...
இலக்கின்றி தூரங்களில் தொலைகின்றன.

இன்னும் விரைவாய்...
இன்னும் விரைவாய்...

சந்திப்பின் கணம்
எங்கோ நிற்கக் கூடும்... கால் வலிக்க...

சிறகு முளைக்க மறந்த....
மனத்திற்கு..
தவிப்பின் அடர்த்தியை..
வாசிக்கத் தெரியாமல்...
நேசத்தின் நிழலில்... மெதுவாய் நடக்கிறது...

இன்னும் மெதுவாய்..
இன்னும் மெதுவாய்....


****

காத்திருப்பேன்........

எந்தனை ஆண்டுகள்
எந்தன் உயிர் உனை பார்த்து
இத்தனை ஆண்டுகளில்
எத்தனை முகங்கள் இடை வந்தன
எத்தனை முகங்கள் கதை பேசின
அதில் சில அழகிகளும் உண்டு
சில அசிங்களும் உண்டு

ஆனல்
என் இதயத்தில் உருவாய்
ஓர் ஓரத்தில் உயிர் தாங்கும் கருவாய்
நினைவுகளின் எச்சம் மட்டும் விழுங்கி உயிர்திருக்கும் - நீ
நீ மட்டும் மறைவதே இல்லை...
இல்லை... இல்லை....
நான் மறப்பதே இல்லை....


உண்மையில் ஐந்தோ... ஆறோ.....
நான் பேசிய வார்த்தைகள்.... உன்னிடம்....
ஆனால் கனவிலோ
கதையாகவும் கவிதையாகவும் பேசியன
ஆயிரம் ஆயிரம்.....


இது நான் கொண்ட இனக்கவர்ச்சியல்ல.....
உன் மேல் கோண்ட மனக்கவர்ச்சி...

இடைப்பட்ட ஆண்டுகளில் நீ
எதிர்பட்டது ஒரு முறை....
அந்த ஒரு முறையில் - நான்
மறுமுறை பிறந்தேன்

சொல்லாமல் விட்டுவிட்டால் செல்லாதே
எனது காதல்.....
போதும் காதலோடு காத்திருந்த காலம் போதும்
கவிதைகளோடு வாழ்ந்திருந்த காலம் போதும்....
காதல் கவிதையே உன்னோடு வாழும் காலம் வேண்டும் - என
உன்னிடம் சொல்லிவிடலாம்....
உன் காதலை அள்ளிவிடலாம் - என்று
அன்புடன் அருகில் வந்தேன்..... ஆனால்
உன் அன்னிய பார்வையில் என் ஆயுளையே
முடித்துவிட்டாயடி பெண்ணே....


ஆயினும்....
ஆண்டுகள் பல ஆயினும்....
என் உயிர் என்னை விட்டு போகினும்....
உதிரும் ஒவ்வொரு துளி சாம்பலாக
காற்றில் கலந்து காத்திருப்பேன்.....
காதலுடன் காத்திருப்பேன்.......

கல்லூரி நாட்கள்-"my happy days"

கல்லூரி நாட்கள்-"my happy days"

வீட்டையே மறக்க செய்தது நான் தங்கிய விடுதி ...
அவ்வப்போது நினைக்க செய்தது விடுதியில் நான் அருந்திய உணவு ....
8:40 மணிக்கு தொடங்கும் முதல் வகுப்பு வகுப்பறையில் .....
8:30 க்கு பக்கேட்கலின் அணிவகுப்பு இடம் பிடிக்க குளியலறையில் ....
என் வகுப்பறை ஒரு பூஞ்சோலை....
அங்கு கன்னுமிடமெல்லாம் நட்பென்ற பூ பூத்து குலுங்கும்..... பூன்சோலையினால் என்னவோ தெரியவில்லை ..
நானும் என் நண்பர்களும் வகுப்பறையிலே உறங்கி போய்விடதுண்டு....
தேர்வறையிலும் தேவதைகளை தேடியதால்,குறைந்தது என் மதிப்"பெண்கள்":)

திரும்பி கிடைக்குமா ???
இரவில் நாங்களே சமைத்து சாப்பிட்ட மேக்கி நூடுல்ஸ் ....
திரும்பி கிடைக்குமா???
மழையிலும் நனைந்து கொண்டே குடித்த பவா கடை தேநிர்...
திரும்பி கிடைக்குமா??
விடுதியே கலவரமாக்கும் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் ...

என் கேள்வி பட்டியல் மிகவும் பெரிது ....
அதற்கான பதிலோ ஒரு வார்த்தை தான் ...

சிறந்த ஒரு கவிதையின் வரி போல ஆழமானது ...
நாம் கல்லூரியில் சந்தித்த சுகமான வலிகள் .....

இறைவனிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி

திரும்ப கிடைக்குமா ???
என் கல்லூரி நாட்கள் ....

எனக்கு மட்டும் நீ வேண்டும்
எல்லோரும் இருந்தும் எனக்கு
கிடைக்காத சந்தோசம்.
நீ.. வந்த மறுநாள் தந்தாய்.
நீடிக்குமா.. இல்லை நிலைக்குமா..
என்பதை தேடி தேடி பார்க்கவில்லை

உன்னோடு ஒவ்வொரு நிமிடமும் வாழும் போது
தேடிக்கொண்டு இருக்கின்றேன்.
உன் இதயத்துக்குள் புகுந்து. உனக்கள்
சிரித்து மகிழும் என்னை.

தெரியாது உன்னை புரிந்து கொண்டேன்.
பரவசம் தரும் உன்னை நான் வாழ் நாள் முழுதும்.
பிரியாத வரம் வேண்டி.
நிக்கின்றேன் என் இருகரம் கூப்பி.

பிரிவது என்றால் சொல்லி விடு
என் இதயத்தை முதல் அழித்துவிட
ஏன் என்கின்றாயா..?
சோகத்தையும் வலியையும் ஏமாற்றங்களையும்
சந்தித்த நான் உன் பிரிவோடு மரணிக்க விரும்புகின்றேன்.

எங்கு இருந்தாலும் வாழ்க
என்று என் உதடு மட்டும்
வாழ்த்தினாலும்.
என் உள்ளத்தின் குமுறல்
என்னை கண்ணீர் கடலில் மூழ்கச்செய்யும்.
முகாரி ராகத்தோடு .

எங்கு சென்றாயடி??...

எங்கு சென்றாயடி??...

நீ எனக்குள்
வசித்த உண்மையைக் கூட‌
உன் பிரிவில்தான் உணர்ந்தேன‌டி.....

நீ என்னையே சுற்றி
வளையவரும் போதெல்லாம்
உன் அருமை உணரவில்லை.....

உன் கண்களால் என்னிடம்
கெஞ்சிய போதெல்லாம்
உன் அன்பை உணரவில்லை.....

என் ஒருநொடி பார்வைக்காய்
ஓராயிரம் மணித்துளிகள்-நீ
காத்திருந்த போதெல்லாம்
உன் காதலை உணரவில்லை.....

இன்று-
என்ன‌ருகில் நீ
இல்லையெனும்போது‍‍-என்
நெஞ்சம் கனக்குதடி...!

காலத்தின் கட்டளையால்‍-நீ
பிரிந்ததை எண்ணி எண்ணி
என் கண்கள் கலங்குதடி...!

இனி ஒருமுறையேனும்
உனைப் பார்ப்பேனா என‌
உள்ள‌ம் த‌விக்குத‌டி...!

தென்ற‌லாய் என‌க்குள்
நுழைந்த‌ உன் நினைவுக‌ள்
புய‌லாய்க் கிள‌ம்பி எனைச்
சுட்டெரிக்கும் த‌ருண‌த்தில்-நீ
எங்கு சென்றாயடி??...

உயிர் உருக்கும் நினைவுகள்

உயிர் உருக்கும் நினைவுகள்

வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது

சின்னதாய் உடல்சுட்டாலும்
பதறியடித்துப் பண்ணும் காரியங்கள்
ஆக்கினைதான் என்றாலும்
வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது

உப்பும், மிளகாயும்
ஒன்றாய்ச் சேர்த்து
மூன்றுமுறை தலைசுற்றி
தூ,தூ எனத்துப்பி
அடுப்பினுள் போட்டு
அதுவெடிக்கையில்
கண்ணூறு கழிந்ததாய்
களிகொள்வாள்

வயிற்றுவலி வந்தால்
சாமிமுன்னின்று
மந்திரம் சொல்லி
வலிகொண்ட இடத்தில்
திருநீறு தடவி
ஆ.. காட்டச்சொல்லி
அதற்குள்ளும் தூவி
அடுத்தகணமே மாறுமென
ஆனந்தங்கொள்வாள்

இப்படிச்
சொல்லிக் கொண்டேபோகலாம்
சுகப்படுத்தும் வழிமுறைகளை

உயர் கல்விக்காய் நான்
ஊர்விட்டகலையில்
கொடுத்தனுப்பிய மருந்துப்பட்டியலில்
தவறிப்போயிருந்தது தாயன்பொன்றுதான்

ஓடித்திரியும் நாட்களைவிட உடல்
ஒத்துழைக்கமறுக்கும் வேளைகளில்
உயிர் உருக்கும் அவள் நினைவுகள்

அம்மா!...

அம்மா

அம்மா
நம்மை கருவறையில் பத்து மாதங்கள்
சுமக்கிறாள்
பிறந்தவுடன்
தன் உதிரத்தை உணவாக்கி
தன் மார்பில் சுமக்கிறாள்
நடை பழகும் வரை
தன் இடுப்பில் சுமக்கிறாள்
பள்ளி செல்லும் போது
நம் புத்தக மூட்டையை
சுமக்கிறாள்
கல்லூரி செல்லும் போது
நம் கவலைகளை
சுமக்கிறாள்
வேலைக்கு சென்ற பின்
நம் கஷ்டங்களை
சுமக்கிறாள்
திருமணத்திருக்கு பின்
நம் பிள்ளைகளையும்
சுமக்கிறாள்
நாம் அழும்போது
அழுகையை
சுமக்கிறாள்
இப்படி எத்தனை எத்தனை
அவள் நமக்காக சுமக்காதது தான்
என்ன..
இவளுக்காக நாம் என்ன செய்தோம் .....???
எதை சுமந்தோம் ......????
அவளை தான் சுமந்தோம்
முதியோர் இல்லத்திற்கு .....
மறவாதே
இன்று
நீ அவளை எப்படி
சுமக்கிறாயோ
நாளை
உன்னக்கும் அப்படியே .....
அவள் உன்னை பாசமாக நடத்த
சொல்லவில்லை
பாரமாக எண்ண வேண்டாம் என்று
தான் நினைக்கிறாள்
மறந்துவிடாதே இன்றும்
உன்
கஷ்டங்களுக்கும் சரி
துன்பங்களுக்கும் சரி
அம்மா என்று தான் சொல்கிறாய் ................
அவள் ஆயுளுக்கும் சந்தோஷ படவேண்டாம்
உன்னால்
சங்கடப்படாமல் இருக்கட்டும் . .
அம்மா ... அம்மா ... அம்மா ....
நீ
உட்சரித்த முதல் வார்த்தை
மறந்துவிடாதே ......
அம்மா ... அம்மா .... அம்மா ...

Friday, June 19, 2009

நிகழ்வுகள் இனிய நினைவுகள்
அரை டவுசர் அணிந்துஆட்டம் போட்ட இடங்கள்துரையென வேடமணிந்துநடித்த காட்சிகள்ஓணானுக்கும் தவளைக்கும்எமனான தருணங்கள்அப்பா பாக்கெட்டில் கைவைத்ததப்பாகத திருட்டுநண்பர்களின் அரட்டை பின்சண்டையில் உருண்ட நாட்கள்எதிர்வீட்டுப் பெண்ணிடம் அர்த்தமில்லாமல் சிரித்து வழிந்த கணங்கள்சுற்றி திரிந்து பசிக்கயில்அம்மா தந்த கையுருண்டை சோறுஇனிமையான நிகழ்வுகள் எல்லாம்இனித்தது! கடித்தது கொசுகொசு தந்த ஊசி கடியால்விழித்தேன் கனவு கலைந்துபுரண்டு படுத்தேன் இதயம் கணத்துஇனி வருமா என் நினைத்து

அன்புத் தோழியே!

விரிசல் கண்ட நிலத்தகதேபரிசெனப் பெய்த மழை நீ!கள்ளி செடிகள் கண்ட பாலைவனத்தேபூத்த ஒற்றை அரிய குறிஞ்சி நீ!சுயம் பற்றி மட்டுமே யோசிக்கும்கூட்டத்தின் நடுவேநட்புக்கோர் இலக்கணம் வாசிக்கும்என் நேசமிகு தோழி நீ!கற்றது கை மண் அளவே எனஅடக்கமாய் நீ சொன்னபோது தான்நான் கற்றது அதில் ஒரு துகளேஎன உணர்ந்தேன்!பொருளுணர்ந்து கற்றதை நீ பேசும் வார்த்தைகளை கேட்ட போது தான்நான் நுனிப்புல் மேய்ந்திருந்தேன்என அறிந்தேன்சுற்றி நடப்பதை கூட அறியாதுகனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள் பலர்ஆயின், தொலைநோக்கிப் பார்த்தும்மற்றும் சீர்த்தூக்கி ஆய்ந்தும், பேசும்செறிந்த உன் அறிவை வியந்தேன்நான் சிரித்து மகிழ்ந்த போதும் கண்ணீர் சிந்தி வருந்திய போதும் மட்டுமல்லஎன் தோழியே!நான் வாய்மொழியா வார்த்தைகளும்மனம் பேசிய எண்ணங்களும் கூடபுரிந்து கொண்டுஇன்று வரை தோள் கொடுத்தாய்!இது நம் இறுதி வரை தொடரட்டும்!நம் மனங்கள் சிறிது மகிழட்டும்!என் சந்தோஷங்களையும் துயரங்களையும்அறிந்தவள் நீ!என் கோபங்களையும், உளறல்களையும்பொறுத்தவள் நீ!என் திறமைகளையும், முயற்சிகளையும்பாராட்டியவள் நீ!என் அறியாமையையும், தவறுகளையும் சுட்டித் திருத்தியவள் நீ!உனைப்பற்றிய எண்ணங்களைக்கவிதை வடிக்கத் தமிழில்நான் அறிந்த வார்த்தைகளோ வெகு சில!!உயரிய உன் நட்பைப் பெறஅருளிய இறைவனுக்கு என் நன்றிகள் பல!!!

கிராமத்துக் காதலன்

முத பார்வையிலேயே நொறுங்கிடுச்சி இதயம்;இனிமேலும் வருமாடிஎன் வாழ்வில் உதயம்!வார்த்தை ஒண்ணு சொல்லிபுட்டாசெய்திடுவேன் எதையும்;வார்த்தை மட்டும் வந்துபுட்டாவாடாது என் சதையும்!நேத்து வரைக்கும் தோணலையே வகிடெடுத்து தல வார; சேர்த்துப்புட்டேன் கலர் கலரா சீப்பு மட்டும் ஒரு நூற!உட்காரப் புடிக்கலடிஜன்னல் பக்கம் பஸ்ஸுக்குள்ள; காத்துக் கொஞ்சம் தல கலைச்சா கலங்குறேனே மனசுக்குள்ள!வடிச்சி வச்ச சோறு கூட என் பசிய தூண்டலடி;குடிச்சிப் பார்த்த நாக்கு கூட தேன் ருசிய காட்டலடி!கால் கடுக்க நின்னாலும் கண்டுக்காம போற; கண்டுபிடிசேனே செல்லாம் உன்னோட இன்னொரு பேர!வாரம் முடிஞ்சா கெடச்சிடுமே அஞ்சி நிமிச தரிசனம்;வருசம் முடிஞ்சாலும் வருமாடி என் மேல கரிசனம்!தனியாளா வெளிய வாடி என் காதல் சொல்ல;பிணியாளா புலம்புறேனேஎன் மனசுக்குள்ள!யார் யாரையோ தூது விட்டேன்;என்னென்னமோ செய்துப்புட்டேன்!உன் மனசுஇரங்கலியே!என் மனசு உறங்கலியே!!காதல் இருக்குனு சொல்லிப்புடு -ஒண்ணுஇல்லைனு தள்ளிவிடு எதை எதையோ சொல்லி உன் காதல் மறைக்கறியே; புரியாத பதில் சொல்லி என் நெஞ்ச அறுக்கறியே!செத்த பின்னாவது வருமாடி உன் காதல் மோகம்;அப்ப வந்தாலும் போதுன்டி என் கட்ட வேகும்!

கல்லூரி கடைசி நாள்...
விடைபெறுகின்றனபட்டாம்பூச்சிகள்!
கற்பித்தவனைகண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்தண்டித்ததையும் மறந்து.....
நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,துளிர்க்கும் துளிகளோடும்!
உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!
பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!
கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை
கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!
பனி போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனி அவையாவும் மறந்து,
உலவும் சமாதான புறாக்கள்!
நேற்றுவரை
அழகிய நட்பைசுமந்து அலைந்தோம்!
நாளைமுதல்
பழகிய நினைவுகளைசுமந்து அலைவோம்!
நாம் சுற்றித்திரிந்து
தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும்
பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......
அந்த வனத்தில் வீசிய மனம்நம் மனதில் வீசும் தினம்...

என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்....

காலடி கல்லாய் இருந்த என்னை கலை சிற்பமாக மாற்றிய சிற்பி ....வெள்ளை காகிதமாய் இருந்த என்னை கவிதையாக வரைந்த விரல்கள்...... மண்ணில் இருந்த விதை என்னைமலராய் மலர செய்த மழை......நீரில் இருந்த தாமரை என்னை கல்வி ஒளியால் மலர செய்த சூரியன்...இத்தனை சிறப்பும் என்னை நான் யார்? என்று எனக்கே காட்டிய என் ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்....

நினைவுகள் ...!!!!!

மின்னல் வந்தது என் கண்ணை கவர்ந்தது.... மின்னலாய் நீ வந்தாய் என் எண்ணத்தை கவர்ந்தாய்..... மழை நின்றதும் மின்னல் சென்றது விண்ணுக்கு ..!!!உன் நினைவுகள் என்னை விட்டு செல்வது எப்போது??? மின்னல் சென்ற விண்ணுக்கு நான் சென்ற பிறகோ???!!!!

தனிமை தனிமை தனிமை.........

துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,என் தேடல் தொடங்குகிறது.அம்மா வருகிறாள்.அவளுக்கே இதயம் பலவீனம்.சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.நண்பன் வருகிறான்.மணமான மகிழ்ச்சியோடு.சாயாமல் நடக்கிறேன்.காதலி வருகிறாள்.கையில் திருமண அழைப்பிதழோடு.விழுந்து விடாமல் நடக்கிறேன்.வழக்கம்போலதூரத்தில் எனக்கானத் தோள்களோடுகாத்துக் கொண்டிருக்கிறதுதனிமை.

நான் சாதிக்க பிறந்தவன்..!!

வாய்ப்பில்லா அறிவாளிகளின் குவியல் உலகு...வாய்ப்பை உருவாக்க நான்ஆம் நான் என்பது அழகே!!என்னால் முடியாததை யார் செய்ய இங்கே???யாரும் தொடவே முடியாதஉயரத்தில் நிற்க போகிறேன்..யாரும் தரவே முடியா ஒன்றைநான் தர போகிறேன்!!என் பெயரை உலகம் உச்சரித்து மகிழும்....கண்ட என் தாய் மகிழ்வார்...என் காதல்கள் மகிழும்.....என் காதலியும் மகிழ்வாள் !!உலகம் அழியும் வரை அழியா....பல சுவடுகள் என் பெயர் சொல்லும்..!!இரவாமலே என்னை இட்டு செல்லும்!!பசி மறந்த குழந்தைகளின்..புன்னகையில் நான் வாழ்வேன்!!வலி துறந்த முதுமைகளின்...மென்மையில் நான் வாழ்வேன்!!ஆம் இரவாமலே வாழ்வேன் யாதெனில்,நான் சாதிக்க பிறந்தவன்..!!
நெல்வயலில் களையெடுக்கும் தாய். அவளது குழந்தை வயல் ஓரமாக அமைந்த மரத்தின் கிளையில் தூளியிட்டு படுத்துக் கிடக்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் பசிவந்து அக்குழந்தை பசியில் அழுகிறது! மகவுக்கு பால் கொடுக்கச் சென்றால் வரப்பில் நிற்கும் பண்ணையார் ஏசுவார். பால் கொடுக்காமல் இருந்தாலோ குழந்தை அழுது அழுது தொண்டை வறண்டு போகும். இப்படி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அந்த தாய் இருதலைக் கொள்ளி எறும்பாய் துன்பப்படுகிறாள்! அவள் மனதில் நினைத்திருக்கும் வரிகள் இங்கே கவிதையாக!

மரத்தில தூளி கட்டி, மவராசன தூங்க வச்சி, நல்ல வெயிலு பின்னியெடுக்க! நான் இறங்கினேன்... நெல்லு வயல்ல களையெடுக்க! கண்ணு என்னமோ நெல்லு மேல! கவனம் எல்லாமே பிள்ள மேல! செத்த நேரந்தான் ஆகிருக்கும்! பெத்த புள்ள அழுதிட்டிருக்கு! பரபரன்னு ஏறினேன்.. வயற்பரப்பு மேல... பசியால அழுது துடிக்குது பச்ச புள்ள குரலு! -அதுக்கும் மசியாம என்ன வெரட்டுது பண்ணையாரு குரலு! அழாதேடா கன்னு! ஆத்தா அடிவயிறு வலிக்குது! என்ன செய்யறதுன்னு புரியாம என் மனசு தவிக்குது! பண்ணையார எதித்து, பால்கொடுக்க நான் வந்தா, இந்த வேளைக்கு பசியாறும்... அடுத்த வேளைக்கு.... நான் எங்க போவேன்? அடுத்த வேலைக்கு நான் எங்க போவேன்? வேலய முடிச்சி வெரசா வாரேன்! என் மக ராசா! அது வரைக்கும்.. காத்தனுப்பி தூங்க வையி! என் மர ராசா!

எனது பிரம்மா......

எனது பிரம்மா......அம்மா,நான்பிறக்கும் முன்பேபாவியம்மா!!!எத்தனை முறைஉதைத்திருப்பேன்உன்னை- கருவறையில்......நிலாச்சோறு ஊட்டினேன்என்றாய்,எனக்கு நினைவில்லை.இன்றும் நிலா பார்த்துஉண்ணத்தான் ஆசைப்படுகிறேன்..ஆம் அமாவாசையிலும்ஒளிவீசும் உன்முகநிலா!!!எத்தனைமுறைதான்திருப்பிக்கொடுப்பது?நான் கொடுக்க- நீயும்திருப்பிக்கொடுக்கிறாய்கடன் அன்பை முறிக்குமாம்,அது பணக்கணக்கில்.கடன் அன்பை வளர்க்கும்உன் பாசக்கணக்கில்.....தவறு செய்தால்எனை அடிப்பாய்,அடித்துவிட்டு-நீ அழுவாய்......காய்ச்சலில் தவித்திருந்தேன்,மருந்துகள் தந்து அரவணைத்தாய்.உறக்கமின்றி தவித்திருந்தேன்,உடனடியாய் மடி கொடுத்தாய்.யோசிக்க கூட நேரமில்லை உறக்கத்திற்கு.குணமடைந்த பின்மருத்துவரை புகழ்ந்தாய்....நான் குணமடைந்ததுஉன் அன்பால்என்பதை அறியாதநீ!!!!.இறைவன்என்முன் தோன்றினால்என் வாழ்நாள் முழுக்கநீ வாழக் கேட்பேன்......இயலாதென்று இயம்பினால்உன் வாழ்நாளின் -கடைசிநாள்வரை- எனக்குஆயுள் கேட்பேன்......

பள்ளிபிரிவு!

நிஜங்கள் மறைந்தாலும் என்றும் உங்கள்நினைவில் வாழும் அன்பு நண்பன் நன்நின்று போன நாம் பள்ளி வாழ்க்கை நிரந்தரமாகுமாகாலத்தின் கட்டாயம் என்னை கலங்கவைக்க வேண்டுமென்றுஅழுகிறேன் மனதிற்க்குள் அன்பு நண்பர்களேஉங்களை எப்படி பிரிவதுஉயிர் பிரிவதை போன்று உணர்கிறேன்உங்களை பிரியும்போதுஎப்பொழுதும் சிரிக்கும் நன்இப்பொழுது அழுகிறேன்என்னுயிர் நண்பர்கள் என்னைவிட்டு செல்கிறார்கள்தடுக்கவும் வழிஇல்லைவழியனுப்பவும் மனமில்லைகனத்த மனதோடும் கண்ணீரோடும் திரும்பி வருகிறேன்என் வாழ்க்கை பயணத்தை தொடர..............................

Thursday, June 18, 2009

படித்ததில் பிடித்தது

Walking in the moon, Counting the stars,
Beyond the world, I'm searching you.

Thinking about love, Laughing at myself,
Without any words, I'm searching you.

Crying at your absence, Swallowing my sorrows,
To make you happy, I'm searching you.

Flying high in sky, Sailing long in sea,
Mad with your thoughts, I'm searching you.

Hopeing for goodthings, Hopping towards future,
Ever to be with you, I'm searching you.

Finding happy , in Failing before you,
To show my love, I'm searching you.

Waiting for you, Biting my nails,
To make me comfort, I'm searching you.

Longing for your nearness, Throwing away my roughness,
To rest under you, I'm searching you.

Sitting in the shore, Staring at the waves,
To hear your words, I'm searching you.

Sleeping in your lap, Closing my eyes,
To leave this world, I'm searching you....
Until my last breathe...