Tuesday, April 27, 2010

விடை தேடும் கேள்விகள்...

என் வாழ்கை கணக்கில் நான் கடந்துவிட்டேன் சில பக்கங்கள்..
சில பக்கங்கள் கோலாகலமாய்..
சில பக்கங்கள் அலங்கோலமாய்.!

கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;
பின் பக்கத்தை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா..?
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கத்தையும் வெறுப்பதா..?

இன்று வரை கடந்ததை சோகங்கலென கொள்வதா..?
அல்லது இனி தான் பெரும் சோகமெனில்
இன்று வரை அடைந்ததுதான் இன்பமென கொள்வதா..?
இன்பமே துன்பமென கொள்ள தகுந்தெநெநில்
துன்பத்தை நரகமென கொள்வேனா..?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்..??

இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமேனில்
இது வரை தோன்றியிருக்கும் ஒரு சில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ..?

விதியின் விதிப்படி எல்லாமே துன்பமென கொள்வது என் மனமோ..?
எனில் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ...?

விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ..?
மனம் சொல்வதே நாம் செய்வோமெனில் விதி என்பதே மாயமோ..?
விதி என்பதே மாயமெனில் மரணத்தின் கணக்குதான் என்ன..?
மரணத்திற்கு மட்டும்தான் விதி எனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி..?
வேற்றுமைக்கு காரணம் மனிதரெனில் அவரின் உள்ளமும் தானே..?
மனசாட்சி எப்பொழுதும் சரியே எனில்
அதை மீற வழி செய்வது விதி தானே..!
பின், மரணத்தின் கணக்கு மட்டும் விதி என்பதில்லையே..!

என் உணர்வுகள் விதியினாலே வகுக்கப்பட்டதா..?
என் உள்ளத்தில் இருந்து தான் எழுவதா..?
அது விதி தானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ..?
விதியின் பெயரால் பாவம் சேருமோ..?
அதில் அவனுக்கு பங்கும் உண்டோ..?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தால் எனில்
விதி என்பதுதான் என்ன..?

என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே..!
எந்த கேள்விக்கு விடை தேட..?
விடைஉள்ள கேள்விதான் எது..?
எல்லா கேள்விகளுக்கும் விடை இல்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு..?
எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன..??

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.