Sunday, January 24, 2010

மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது...

மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது”
“மறக்க மாட்டீர்கள் தானே” ,
கடைசியாய் சந்தித்தபோது -நீ
கையாட்டி சொல்லியது.

எப்படி முடியும்…………
விழித்ததும் முகம் பார்க்கும் “கண்ணாடி”
நீ கண்டிப்பாய் என்பதால்
பார்க்காமல் வந்ததில்லை உன்னை பார்க்க.

லேசாய் நீர்த்துளி பட சிலிர்க்கும் என் உடல் ,
எனக்கே தெரியாமல் உன் விரல் தொட
என்னுள் நிகழ்ந்த ஒரு ரசாயன மாற்றம்.

காற்றில் விலகும் திரை வழியே
ஜன்னல் நுழையும் நிலா …
லேசாய் களையும் கூந்தல் ஊடே
உன் ஓரக்கண் தரிசனம்….

அன்றாட தொலைகாட்சியின்
பட்டு சேலை விளம்பரம்…..
வெள்ளிகிழமைகளில்
என் தேவியின் தரிசனம்..
புதிதாய் பூத்திருக்கும
பூந்தொட்டி ரோஜா
புத்தாடை பெருமை கொள்ளும்
உன் பிறந்த நாட்கள் .

தாலாட்டு சுகம் காணும்
தாய் மடி குழந்தைகள்..
மாலை நேர சொர்க்கம்
என் நந்தவன தலையணைகள்.

இப்படி ஏதோ ஒன்று
உன்னையும் ,உன்னோடான அந்த
வசந்த காலத்தையும்
நினைவு படுத்தியே தீரும் வேளையில்

உறக்கவே சொல்லிவிடுகிறேன்….
“உன் பெயரை” எப்போதாவது …

தன்னை அழைப்பதாய்….
என்னை அணைத்துக்கொள்ளும்
என் செல்ல மகள் தான்….
ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவாள் “ உன் பெயரை” ......
என் மனைவியிடமிருந்து.....


உன்னோடான நேரங்களைவிட
உன் நினைவுகள் வந்து செல்லும் நேரம்
அதிகம் என்பதால்
“மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது” ....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.