Wednesday, June 24, 2009

கோடை விடுமுறை!...

7மணி முதல் 8மணி வரை
சங்கீத சாதகம்...

8மணி முதல் 10மணி வரை
கணிப்பொறி பயிற்சி...

10மணி முதல் 12மணி வரை
அபாகஸ் பயிற்சி...

12மணி முதல் 1மணி வரை
நீச்சல் பயிற்சி...

மதிய உணவு முடிந்தவுடன்
ஆரம்பித்து விடுகிறது
ஓவியப் பயிற்சி...

4மணிக்கு தொடங்குகிறது
நடனப் பயிற்சி...

8மணிக்கு இந்தி வகுப்பை
முடித்துக்கொண்டு
வீடு திரும்பிய
ப‌க்க‌த்து வீட்டு பாப்பாவுக்கு
த‌மிழ் பாட‌ம்
ந‌ட‌த்த‌த் துவ‌ங்கினேன்
"ஓடி விளையாடு பாப்பா" என்று.

1 comment:

  1. அழகாய் இயந்திர வாழ்க்கையை பதிவு செய்துள்ளிர்..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.