Monday, June 22, 2009

அம்மா!...

அம்மா

அம்மா
நம்மை கருவறையில் பத்து மாதங்கள்
சுமக்கிறாள்
பிறந்தவுடன்
தன் உதிரத்தை உணவாக்கி
தன் மார்பில் சுமக்கிறாள்
நடை பழகும் வரை
தன் இடுப்பில் சுமக்கிறாள்
பள்ளி செல்லும் போது
நம் புத்தக மூட்டையை
சுமக்கிறாள்
கல்லூரி செல்லும் போது
நம் கவலைகளை
சுமக்கிறாள்
வேலைக்கு சென்ற பின்
நம் கஷ்டங்களை
சுமக்கிறாள்
திருமணத்திருக்கு பின்
நம் பிள்ளைகளையும்
சுமக்கிறாள்
நாம் அழும்போது
அழுகையை
சுமக்கிறாள்
இப்படி எத்தனை எத்தனை
அவள் நமக்காக சுமக்காதது தான்
என்ன..
இவளுக்காக நாம் என்ன செய்தோம் .....???
எதை சுமந்தோம் ......????
அவளை தான் சுமந்தோம்
முதியோர் இல்லத்திற்கு .....
மறவாதே
இன்று
நீ அவளை எப்படி
சுமக்கிறாயோ
நாளை
உன்னக்கும் அப்படியே .....
அவள் உன்னை பாசமாக நடத்த
சொல்லவில்லை
பாரமாக எண்ண வேண்டாம் என்று
தான் நினைக்கிறாள்
மறந்துவிடாதே இன்றும்
உன்
கஷ்டங்களுக்கும் சரி
துன்பங்களுக்கும் சரி
அம்மா என்று தான் சொல்கிறாய் ................
அவள் ஆயுளுக்கும் சந்தோஷ படவேண்டாம்
உன்னால்
சங்கடப்படாமல் இருக்கட்டும் . .
அம்மா ... அம்மா ... அம்மா ....
நீ
உட்சரித்த முதல் வார்த்தை
மறந்துவிடாதே ......
அம்மா ... அம்மா .... அம்மா ...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.