Thursday, June 18, 2009

என் அன்பான எதிரிக்கு!

என் அன்பான எதிரிக்கு, என்னவளின் காதலனே, வாழ்த்துக்கள் !
உன் மேல் எனக்கு கோபமில்லை,
ஆனால் பொறாமை உண்டு !
எல்லாவிதத்திலும் உன்னை விட சிறந்தவன்,
ஆனால் அவளுக்கு உன்னதான்டா பிடிச்சிருக்கு !

என் ப்ரிய எதிரியே,
உன் அடி பேரிடி,
என்னால் உன்னை வெருக்க இயலாது,
ஏன் எனில் அவளுக்கு பிடித்து எல்லாம்
எனக்கும் பிடித்தமை ஆயின !

ஆனால் எனக்கென்று சில வெற்றிகள் உண்டு,
உன்னுடன் இருக்கும் நேரத்தை விட அவள்
ஏன் மனதுள் இருக்கும் நேரங்கள் அதிகம் !
அவள் உன்னைக்கூட ஒருகால் மறந்து போகலாம்,
(அப்படி ஒரு நிலை உனக்கு வர வேண்டாம், அதன் வலி உணர்ந்தவன்...)
ஆனால் என் கவிதைகளை ஒருகாலும் மறக்கமாட்டாள் !
அவளுகென்று நீ தாஜ் மஹாலை எழுப்பவில்லை,
நான் என் இரத்தத்தில் அமரா கவி படைத்துள்ளேன் !
நீ அவளை நினைக்கும் நேரம் அதிகம்,
நான் அவளை மறந்தால் வந்துவிடு என் மரணத்திற்கு !

நீ என்னை வெட்டினாலும் கோபப்படமாட்டேன்,
ஆனால் அவளை வருந்த விட்டால் உன் உடலுக்கு விடை கொடுத்து விடு !

எதிரிக்கு அதிலும் தோற்றவனுக்கு
கருணை காட்டுவது தமிழர் பண்பாடு,
அதன்படி தோற்றவன் என்ற முறையில்
என் வேண்டுகோள்,
அவளைக் கைவிட்டுவிடாதே,
அவள் தாங்கமாட்டாள்,

நன்றி,

- இப்படிக்கு தோற்றவன்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.