Friday, June 19, 2009

அன்புத் தோழியே!

விரிசல் கண்ட நிலத்தகதேபரிசெனப் பெய்த மழை நீ!கள்ளி செடிகள் கண்ட பாலைவனத்தேபூத்த ஒற்றை அரிய குறிஞ்சி நீ!சுயம் பற்றி மட்டுமே யோசிக்கும்கூட்டத்தின் நடுவேநட்புக்கோர் இலக்கணம் வாசிக்கும்என் நேசமிகு தோழி நீ!கற்றது கை மண் அளவே எனஅடக்கமாய் நீ சொன்னபோது தான்நான் கற்றது அதில் ஒரு துகளேஎன உணர்ந்தேன்!பொருளுணர்ந்து கற்றதை நீ பேசும் வார்த்தைகளை கேட்ட போது தான்நான் நுனிப்புல் மேய்ந்திருந்தேன்என அறிந்தேன்சுற்றி நடப்பதை கூட அறியாதுகனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்கள் பலர்ஆயின், தொலைநோக்கிப் பார்த்தும்மற்றும் சீர்த்தூக்கி ஆய்ந்தும், பேசும்செறிந்த உன் அறிவை வியந்தேன்நான் சிரித்து மகிழ்ந்த போதும் கண்ணீர் சிந்தி வருந்திய போதும் மட்டுமல்லஎன் தோழியே!நான் வாய்மொழியா வார்த்தைகளும்மனம் பேசிய எண்ணங்களும் கூடபுரிந்து கொண்டுஇன்று வரை தோள் கொடுத்தாய்!இது நம் இறுதி வரை தொடரட்டும்!நம் மனங்கள் சிறிது மகிழட்டும்!என் சந்தோஷங்களையும் துயரங்களையும்அறிந்தவள் நீ!என் கோபங்களையும், உளறல்களையும்பொறுத்தவள் நீ!என் திறமைகளையும், முயற்சிகளையும்பாராட்டியவள் நீ!என் அறியாமையையும், தவறுகளையும் சுட்டித் திருத்தியவள் நீ!உனைப்பற்றிய எண்ணங்களைக்கவிதை வடிக்கத் தமிழில்நான் அறிந்த வார்த்தைகளோ வெகு சில!!உயரிய உன் நட்பைப் பெறஅருளிய இறைவனுக்கு என் நன்றிகள் பல!!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.