Tuesday, June 23, 2009

குணத்தில் மட்டும் தமிழனாய்…

உன் உடல் கூட
உனக்குச்
சொந்தமில்லை
கண்ணில்ப்
படுவனவற்றில்
எல்லாம் ஆசை
கொள்கின்றாய்

உன்னுள் இருக்கும்
அழுக்குகளை
நீ செல்லும்
இடமெல்லாம்
அள்ளித்
தெளிக்கின்றாய்

தமிழ்ச்சாதி என்று
பெருமை கொள்ளாது
தனிச்சாதியாகிச்
சாகின்றாய்

உன் இனத்தையே
பல கண்கள்
கொண்டு
பார்ப்பதுதான்
பரிதாபத்திற்குரியது

சுதந்திரமாய்
வாழ்வதற்காய்
உயிர் கொடுத்துப்
போராடுகின்றார்
ஈழத்தில்

நீயோ ஊரையே
துண்டாடத்
திட்டம் தீட்டுகின்றாய்

நாடிழந்து நிறமிழந்து
தாய்மொழி மறந்து
தமிழனின்
அடையாளமே
இழந்து வாழும் நீ
குணத்தில் மட்டும்
மாறாதிருக்கின்றாய்

காலால் மிதித்த
போதும்
உன்னை சேயாய்
சுமந்த தாய்
மண்ணில்
காறி உமிழ்கின்றாய்

அன்னிய மண்ணிலே
வேரூன்றி நீ
தழைத்திருந்தாலும்
சினக்கும் போது
உதிர்வாய்
என்பதை ஏன்
உணரமறுக்கின்றாய்

ஒன்றையொன்று
பிடித்துண்டபோதும்
தன் இனத்தின்
ஒற்றுமையில்
பிசிறில்லை
காட்டுக்குள்ப் பிரிவில்லை

உன் ஆறறிவு
கொண்டு
அன்னிய மண்ணில்
எத்தனை
சாகசங்களைப்
புரிந்தாலும்

நீ வனவிலங்கிலும்
தாழ்ந்தவனாய்
இருக்கின்றாய்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.